சத்யம் கம்ப்யூ: ஆடிட்டர்கள் அப்பாவிகள்

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடந்த நிதி முறைகேடுக்கு ஆடிட்டர்கள் மேல் தவறு இல்லை என்று வட்லாமணி சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடந்த ரூ.7,100 கோடி முறைகேடு தொடர்பாக தணிக்கையாளர்கள் அமைப்பான இன்ஷ்டியூட் ஆப் சார்டட் அக்கவுண்ட் ஆப் இந்தியாவும் விசாரணை மேற்கொண்டுள்ளது.

இதன் தலைவர் உத்தம் பிரகாஷ் அகர்வால், ஹைதராபாத்தில் உள்ள சன்சால்குடா சிறைச்சாலையில் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பி.சீனிவாஸ், இந்த நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்த பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தின் தணிக்கையாளர்கள் எஸ். கோபாலகிருஷ்ணன், துல்லூரி சீனிவாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இவர்களிடம் தலைமை நிதி அதிகாரியாக இருந்த வட்லாமணி சீனிவாஸ், இந்த நிதி முறைகேடுக்கு முழு காரணமும் ராமலிங்க ராஜூவும், ராம ராஜுவும் தான். கடந்த நான்கு-ஐந்து வருடங்களாகவே கணக்குகளில் முறைகேடு செய்வது தொடர்ந்து நடந்து வந்தது. இதில் தணிக்கையாளர்களுக்கு எவ்விதி பங்கும் இல்லை. அவர்களிடம் தணிக்கைக்கு மோசடியான கணக்கு ஆவணங்களே சமர்ப்பிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் தனக்கும், காஸ்ட் அக்கவுண்ட்டென்ட் ஜி.ராமகிருஷ்ணாவுக்கும் பங்கு உண்டு என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சத்யம் கம்ப்பூட்டர் நிறுவனத்தின் நிதி முறைகேடு பற்றி விசாரித்து வரும் மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) நேற்றிரவு மூன்று பேரை கைது செய்துள்ளது.

சத்யம் நிறுவனத்தின் காஸ்ட் அக்கவுண்ட்டென்ட் ஜி. ராமகிருஷ்ணா, நிதி பிரிவில் பணியாற்றிய டி. வெங்கடபதி ராஜூ, ஸ்ரீசைலம் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாக சி.பி.ஐ துணை ஐ.ஜி லட்சுமி நாராயணா தெரிவித்துள்ளார்.

இவர்கள் இந்த மோசடிக்கு உதவியாக இருந்ததாகவும், போலியாக மாதாந்திர வங்கி அறிக்கைகள் மற்றும் இதர ஆவணங்களை தயாரித்துக் கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் 2 உயர் அதிகாரிகள் கொண்ட குழு நேற்று சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி ஸ்ரீனிவாசிடம் நடத்திய விசாரணையில், அவர் ஜி. ராமகிருஷ்ணாவின் பெயரை வெளியிட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று கைது செய்யப்பட்டுள்ள 3 பேரையும் சேர்ந்து சத்யம் நிறுவன மோசடியில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Source & Thanks : /tamil.webdunia

Leave a Reply

Your email address will not be published.