வடகொரியா அனுப்பியது ஏவுகணை?: பல்வேறு நாடுகள் எதிர்ப்பு

சியோல்: அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியாவின் எதிர்ப்பை மீறி வடகொரியா செயற்கைக்கோள் சோதனையை நடத்த ராக் கெட் அனுப்பியது. ஆனால், இந்த செயற்கைக் கோள், பூமியின் சுற்று வட்டப்பாதையை சென்றடைய வில்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா உட்பட பல நாடுகளின் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது.


கம்யூனிச நாடான வடகொரியா, அமெரிக்கா மற் றும் தென்கொரியாவின் எதிர்ப்பு நாடாக இருந்து வருகிறது. இதனால், வடகொரியா மீது பல்வேறு நாடுகள் பொரு ளாதார தடையை அமல் படுத்தியுள்ளன. அண்டை நாடுகளுடன் மோதும் நோக்கில், வடகொரியா ஏராள மான ஏவுகணைகளை தயார் செய்து வைத்துள்ளது. இந்நிலையில் நேற்று, “டேபோடாங்-2′ என்ற செயற்கைக்கோளை விண் ணில் வெற்றிகரமாக ஏவியதாக வடகொரியா தெரிவித்துள்ளது. விண்ணில் செலுத்தப் பட்ட செயற்கைக்கோள் மூலம் புரட்சிகர பாடல்களையும், தேசிய தலைவர்களின் புகழ் பாடும் பாடல்களையும் ஒலிபரப்பி வருவதாக வடகொரிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

“செயற்கைக்கோள் சோதனை’ என்ற பெயரில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியதாக தென்கொரியாவும், ஜப்பானும் குற்றம் சாட்டியுள்ளன. அமெரிக்காவின் அலாஸ்கா பகுதி வரை சென்று தாக்கவல்ல வடகொரியா செலுத்திய ஏவுகணை, ஜப்பான் கடல் பகுதியில் விழுந்ததாக தென் கொரியா கூறுகிறது. வடகொரியா ஏவுகணை சோதனை செய்யப்போவதை அறிந்த தென்கொரியாவும், ஜப்பானும், வடகொரியா அருகே கடல் பகுதியில் போர் கப்பல்களை நிறுத்தி வைத்தன. அந்த கப்பலில் உள்ள அதி சக்தி வாய்ந்த செயற் கைக்கோள் கேமரா மூலம் வடகொரிய ஏவுகணை சோதனையை இந்த நாடுகள் படம் பிடித்துள்ளன.

வடகொரியா, “டேபோடாங்-2′ என்ற ஏவுகணையை செலுத்தி சோதனை நடத்தியுள்ளதன் மூலம் ஐ.நா., பாதுகாப்பு சபை தீர்மானத்தை மீறியுள்ளது. வடகொரியாவின் இந்த செயல் வன்முறையை தூண்டுவதாக உள்ளது. சர்வதேச நாடுகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து மீறி வரும் வடகொரியா தன் னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்கிறதென அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். வடகொரியா, “டேபோடாங்-2′ என்ற உளவு பார்க்கும் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த முயன்றதாகவும், ஆனால், அந்த செயற்கைக் கோள், பூமியின் சுற்று வட்டப்பாதையை சென்றடையாமல் பசிபிக் கடலில் விழுந்து விட்டதாகவும் அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சியாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.