புதல்வரை சேவையில் இணைப்பதற்காக நுழைவுத் தகுதிகளை மாற்றியமைத்த சிறிலங்கா வான்படைத் தளபதி

தனது புதல்வரை வான்படைச் சேவையில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் நுழைவுத் தகுதிகளில் வான்படைத் தளபதி எயர் வைஸ் மார்ஷல் ரொசான் குணதிலக்க
மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுய நலவாத நோக்கத்திற்காக பாதுகாப்புப் படையின் உயரதிகாரியான ரொசான் குணதிலக்க, தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வழமையாக வான் படையின் கெடட் அதிகாரிகளுக்கான நுழைவுத் தகைமை உயர்தர சித்தியாகும். எனினும் இம்முறை தனது புதல்வரை சேவையில் உள்வாங்கும் நோக்கில் குறித்த தகுதியை கா.பொ.த சாதாரண தரம் வரையில் வான் படைத் தளபதி குறைத்துள்ளார்.

இதன் அடிப்படையில் வான்படைத் தளபதியின் புதல்வர் ரெஹான் குணதிலக்க தற்போது இலங்கை வான்படை கெடட் பிரிவின் அதிகாரியாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.