பிரபாகரனைச் சரணடையுமாறு கோருகிறார் ஜனாதிபதி மஹிந்த

வன்னி, புதுக்குடியிருப்பில் பாதுகாப்பு வலயம் என அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகள் தவிர மற்றைய பகுதிகள் அனைத்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது என படைத்தரப்பு அறிவித்த நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உடனடியாகச் சரணடைய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் சிறு எண்ணிக்கையினரான போராளிகளே மிகக்குறுகிய இடத்தில் தற்போது சிக்கியுள்ளனர் எனவும் அவர்களில் பலர் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகளிலேயே உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த,

இன்னும் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் அல்லது ஒரு நாளுக்குள் இவர்கள் கைது செய்யப்படலாம் அல்லது அழிக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும், காலம் தாழ்த்தாது விடுதலைப் புலிகளின் தலைவர் சரணடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.