‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (05.04.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்று வருவதாக தெரிவித்து வருகின்ற போதும் போர் அரசாங்கத்தின் பொருளாதாரத்தை பாதாளத்திற்குள் தள்ளியுள்ளது; தற்போது தனது பொருளாதாரத்தை அனைத்துலக நாணய நிதியம் காப்பாற்றும் என அந்நாட்டு அரசாங்கம் நம்பியுள்ளதாக அனைத்துலக ஊடக நிறுவனமான .எஃப்.பி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்று வருவதாக தெரிவித்து வருகின்ற போதும் , அந்த போர் அரசின் பொருளாதாரத்தை பாதாளத்திற்குள் தள்ளியுள்ளது. தற்போது தனது பொருளாதாரத்தை அனைத்துலக நாணய நிதியம் காப்பாற்றும் என அரசாங்கம் நம்பியுள்ளது.
உலகின் பொருளாதார சிக்கல் மற்றும் போர் போன்ற காரணிகளினால் சீரழிந்துள்ள பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கு 2.4 பில்லியன் டொலர்களை பெறுவதற்கு அரசாங்கம் அனைத்துலக நாணய நிதியத்துடன் பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், இந்த வருடம் போருக்கு சிறிலங்கா அரசாங்கம் 1.6 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.
கடந்த வருடத்தின் படைத்துறை செலவுகளுடன் இதனை சேர்த்தால் 3 பில்லியன் டொலர்களை இரு வருடங்களில் அரசாங்கம் செலவிட்டுள்ளது.
அனைத்துலக நாணய நிதியத்திடம் தாம் மண்டியிடப்போவதில்லை என அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள போதும், அவர் அனைத்துலக நாணய நிதியத்தின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இணைங்கியுள்ளதாகவே பேச்சுக்கள் தொடர்பான நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரச பணியாளர்களை குறைப்பது, மக்களுக்கான உதவிகளை குறைப்பது, ரூபாயின் வீழ்ச்சியை அனுமதிப்பது போன்ற நிபந்தனைகளை அனைத்துலக நாணய நிதியம் முன்வைத்துள்ளது.
ரூபாயின் வீழ்ச்சியை தடுப்பதற்கு மத்திய வங்கி வெளிநாட்டு கையிருப்பை அதிகமாக பயன்படுத்தியதனால் அது குறைவடைந்துள்ளதாக பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கடந்த செவ்வாய்கிழமை நாட்டை விட்டு சென்றுள்ளனர். அவர்கள் ஒரு வாரத்திற்கு மேலாக சிறிலங்காவில் தங்கியிருந்தனர்.
எனினும் தமது நிபந்தனைகள் தொடர்பாக அதன் பிரதிநிதிகள் கருத்துக்களை வெளியிடவில்லை . அவர்கள் எதிர்வரும் 25 ஆம் நாள் தமது பரிந்துரைகளை மேற்கொள்வதற்கு முன்னர் அரசின் நடவடிக்கை தொடர்பாக ஆராய உள்ளனர்.
பேச்சுக்கள் சுமூகமாக அமைந்தால் 480 மில்லியன் டொலர்களை நிதியம் அரசாங்கத்துக்கு இந்த மாத முடிவில் வழங்கும் என மேற்குலக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார் .
அரசாங்கத்துக்கு அவசரமான நிதி தேவை. சிறிலங்கா அரசாங்கம் பெற்றுள்ள கடன்களுக்கான மீளச்செலுத்தல் தொகைளை செலுத்துவதற்கு 900 மில்லியன் டொலர்கள் 2009 ஆம் ஆண்டு தேவை. எனவே அவர்களுக்கு நிதி அவசரமாக தேவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாம் தற்போது கடன் சுமையில் சிக்கியுள்ளோம் கடந்த வருடம் அரை பில்லியன் டொலர்கள் பெறுமதியான கடன் மீளச்செலுத்தல் தொகையை நெருக்கியிருந்தது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் வல்லுநர் தெரிவித்திருக்கின்றார்.
நாம் தற்போது முன்னர் கொள்வனவு செய்த கடனை மீள செலுத்துவதற்கு மீண்டும் கடன்களை பெற்று வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 6.8 விகிதமாக கடந்த வருடம் இருந்த போதும் தற்போது 6.0 விகிதமாக கணிக்கப்படுகின்றது. தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழச்சியே அதற்கான பிரதான காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்கா வரலாற்றில் மிகப் பெரிய தேசத் துரோகி ரணில் விக்ரமசிங்கவே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க இன்னும் ஓரிரு மாதங்களுக்கு ஆட்சியைத் தொடர்ந்திருந்தால் பதுளை ,மொனராகலை, நீர்கொழும்பு வரையில் ஈழ இராச்சிய வரைபடம் நீண்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய துரோகச் செயலாக 2002ம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர்நிறுத்த உடன்படிக்கை காலப்பகுதியிலேயே விடுதலைப் புலிகள் தங்களை வலுப்படுத்திக் கொண்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொய்ப்பிரச்சாரங்களுக்கு செவி மடுக்காது நாட்டை மீட்டெடுக்க அனைவரும் அணி திரள வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஈழத் தமிழர் பிரச்சினை காரணமாக காங்கிரஸ்தி.மு. கூட்டணியை தோற்கடிக்க பிரச்சாரம் நடந்து கொண்டிருப்பது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும்ஜனசக்திநாளேட்டுக்கு வழங்கிய பேட்டியில் கருத்து தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பார் பா. நடேசன், “எந்த நேரத்தில் எதனைச் செய்ய வேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த தெளிவாகவே இருக்கின்றனர். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை அவர்கள் எடுப்பார்கள்என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமை வழங்கியுள்ள போர் நிறுத்ததிற்கான வாய்ப்பை , இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் நிலவுகின்ற இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து தீர்ப்பதற்கு, இது ஒரு சிறந்த வாய்ப்பு என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தினால், பாதுகாப்பு வலயங்களில் பொது மக்கள் கொல்லப்படுவதும், கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதும் கண்டனத்திற்குறியது என அவர்கள் தெரிவித்துள்ளனர் .
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில், இலங்கை அரசாங்கம் யாருடனும் ஒத்துப்போக மறுத்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ள அவர்கள், யுத்தம் ஒருபோதும் இலங்கை பிரச்சினைக்கு தீர்வினைக் கொண்டு வராது என அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்தி வரும் நிலையிலும், இலங்கை ஜனாதிபதி அதனை ஏற்க மறுத்து வருவதாக ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதானி மைக் பொஸ்டர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்த நிறுத்தம் ஓன்றினை மேற்கொள்ளாது, பாதிக்கப்படுகின்ற மக்களை வெளியேற்ற முடியாது. அத்துடன் வன்னியில் அன்றாடம் நூறுக்கும் அதிகமான தமிழ் மக்கள், அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் கொல்லப்படுகின்றனர். ஏராளமானவர்கள் காயமடைகின்றனர் .
இலங்கையில் நடைபெறுகின்ற மனிதாபிமான நெருக்கடி தொடர்பிலான தகவல்கள் தமக்கு வந்தவண்ணம் உள்ளன என்றும் மைக் பொஸ்டர் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை அரசாங்கத்தினால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்ததினால், மக்களை விட அதிக இலாபம் பெறுவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவென, ஐக்கிய இராச்சியத்தின் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்கால தேர்தல்களின் வெற்றிக் குவிப்புக்களுக்காகவே, மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் யுத்தத்தினை முன்னெடுத்து வருவதாக, அந்த இணையத்தளத்தினால் கடந்த 3 ம் திகதி வெளியிடப்பட்டிருந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து யுத்த நிறுத்தத்தினை முன்னெடுப்பதன் ஊடாக, தென்பகுதி சிங்கள பேரின வாதிகளின் வாக்குகளை பெற்றுக் கொள்வதன் மூலம், தமிழர்களின் வாக்குகள் இல்லாமலேயே தம்மால் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என மஹிந்த கருதுவதாக அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே இனப்பிரச்சினை மற்றும் அரசில் நிலை தொடர்பில் கலநதுரையாட , தமிழ் கட்சிகளுக்கு மஹிந்தவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், யுத்த நிறுத்தத்தினை முன்வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த அழைப்பினை நிராகரித்தனர்.
பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசங்களில் பொது மக்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் பாரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் பாரிய மன அழுத்தங்களுக்கும் உள்ளான நிலையில் வாழ்கின்றனர் . மோதல் பிரதேசங்களில் உள்ள மக்கள், அச்சத்துடன் கூடிய சூழ்நிலையில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் யாழ் . சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நேற்று தப்பி ஓடிய கைதி மதில்yhy; பாய்ந்து தப்பி ஓட முயற்சித்த வேளை சிறைச்சாலை அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத் துணைக்குழுவின் உறுப்பினரான யாழ். ஊர்காவல்துறையைச் சேர்ந்த வீரசிங்கம் சதீஸ்வரன் (வயது 28) என்பவரே தப்பியோட முயற்சித்தார் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவத்தின் பின்னர் யாழ். சிறைச்சாலையின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது .
!!!!!!!!!!!!!!!
சிறிலங்காவின் கம்பஹா மாவட்டத்தில் உள்ள வியாங்கொடவில் ஜே.வி.பி.யின் ஆதரவாளர் ஒருவர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேல்மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் 25 ஆம் நாள் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தலுடன் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் பரவலாக அதிகரித்து வருவதாக கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்து வரும் நிலையிலேயே இந்தக் கொலைச் சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றிருக்கின்றது.

மேல்மாகாண சபையுடன் தொடர்புபட்ட 50-க்கும் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் இதுவரையில் பதிவாகியிருப்பதாக கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தேர்தல் வன்முறையுடன் தொடர்புபட்ட முதலாவது கொலைச் சம்பவமாக இன்றைய சம்பவம் பதிவாகியிருக்கின்றது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி. வட்டாரங்கள், தற்போதைய தேர்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட வன்முறைகளில் பெரும்பாலானவை ஜே.வி.பி.யை இலக்கு வைத்ததாகவே இருக்கின்றது எனக் குறிப்பிட்டார்.

கடந்த வாரமும் ஜே.வி.பி.யின் ஆறு தேர்தல் அலுவலகங்கள் கொழும்பு மாவட்டத்தில் தாக்கப்பட்டன எனவும் அவர் சுட்டிக்காட்டினார் .
!!!!!!!!!!!!!!!!!!!
மதவாச்சி சோதனைச் சாவடியில் செய்மதி தொலைபேசி உட்பட அதிநவீன சாதனங்களை கொண்டுவந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிங்களவர் எனவும் மற்றைய இருவரும் இந்திய குடிமக்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது .

இவர்களிடம் இருந்த செய்மதி தொலைபேசியும் வேறு சில சாதனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றை வவுனியா நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

எதற்காக இவர்கள் இவற்றை வடபகுதி நோக்கிக் கொண்டு செல்ல முற்பட்டனர் என்பது தொடர்பாக காவல்துறையினர் விரிவான விசாரணைகளை தொடங்கியுள்ளனர் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் வடக்கில் உள்ள அகதி முகாம்களுக்குச் சென்று எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கான முன்கூட்டிய பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களில் தாம் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட உள்ளதாக குறித்த அமைச்சர் பிரச்சாரம் செய்து வருவதாக ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து அகதி முகாம்களில் தங்கியிருக்கும் அப்பாவிச் சிவிலியன்களிடம் மேற்கொள்ளப்படும் இவ்வாறான பிரச்சாரங்கள் அறுவருக்கத் தக்கவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அகதி முகாம்களில் வசிக்கும் மக்களின் பாவனைக்கென வழங்கப்படும் வெள்ளை அரிசிக்கு பதிலாக சிகப்புப் பச்சை அரிசி வழங்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வட பகுதி மக்கள் சிகப்பு பச்சை அரிசியையே அதிகம் உட்கொள்வதாகவும் அதனால் வெள்ளை அரிசியை அகதி முகாம்களுக்கு விநியோகிக்க வேண்டாம் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் .

இதேவேளை, அகதி முகாம்களின் நிலைமைகள் குறை கூறும் அளவிற்கு இல்லை எனவும் , படையினர் சிறந்த முறையில் செயலாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் அதற்கு ஒருபோதும் அனுமதியளிக்கப்பட மாட்டாது எனவும் ஜே.வி.பி . தெரிவித்துள்ளது.

13 ஆவது திருத்தச் சட்ட அமுலாக்களின் மூலம் மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது .

மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை பகிர்வதன் மூலம் பிரிவனைவாதத்திற்கு மஹிந்த அரசாங்கம் துணை போவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார் .

38 ஆவது சித்திரை வீரர்கள் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முட்டையை உடைக்காமல் எப்படி ஒம்லட் போடுவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வு என்ற தர்க்கம் நடைமுறைச் சாத்தியமற்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுமாயின் அதற்கு எதிராக மக்களுடன் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்த ஜே.வி.பி. ஒருபோதும் பின்நிற்காதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி பலவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல எனவும், ஒரு ஜே.வி .பி. உறுப்பினர் ஆயிரம் அரசியல் கட்சித் தொண்டர்களுக்கு ஈடானவர் என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்சியடைய ஜே.வி.பி. காத்திரமான பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நாட்டின் ஏனைய பிரதேசங்களைப் போன்றே வடக்கிலும் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டுமென பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

அனுராதபரத்தில் நடைபெற்ற சட்டத்தரணிகள் பேரவை புதிய கட்டடத் தொகுதி அங்குரார்ப்பண வைபத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு சீரின்மை மற்றும் பயங்கரவாதம் குறித்து உன்னிப்பாக அவதானித்து அவற்றுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து இன சமூகங்களுக்கும் இடையில் காணப்படும் நல்லிணக்கத்தின் மூலமே நிரந்தர சமாதானத்தை எட்ட முடியும் என பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!
சில ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை காப்பாற்றும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக ஐரேப்பிய ஒன்றிய . பாராளுமன்றத்தின் இலங்கைப் பிரதிநிதி ரவின்த ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோல்வியிலிருந்து மீட்கும் நோக்கில் சிலர் உறுப்பினர்கள் யுத்த நிறுத்த கோரிக்கையை முன்வைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான கரிசனையிருந்தால் விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக தடுத்து வைத்துள்ள சிவிலியன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐரேப்பிய ஒன்றிய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வன்னிச் சிவிலியன்கள் குறித்து ஏனைய அனைவரை விடவும் இலங்கை அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

மனிதப் பேரவலம் குறித்து பேசப்படுவதாகவும், உண்மையில் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலேயே மனிதப் பேரவலம் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

30 ஆண்டு கால யுத்தத்தில் அராசங்கம் 98 வீதம் வெற்றி கொண்டுள்ள நிலையில் யுத்த நிறுத்த கோரிக்கைகள் அர்த்தமற்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகளின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செய்மதித் தொழில்நுட்பத்தின் மூலம் அலரி மாளிகையிலிருந்து கொண்டு பிரதான பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்ற ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் .

தமிழீழ விடுதலைப் புலிகளினால் தாக்குதல் நடத்தப்படக் கூடும் என புலனாய்வுத் துறையினர் விடுத்த எச்சரிக்கையை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் நிலவும் மோதல் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக இந்தோனேஷிய அரசு நிவாரண உதவி வழங்கியுள்ளது. இதில் 500 தொன் அரிசி மற்றும் 2 தொன் மருந்து பொருட்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் பபாக் ஹச்சன் பிரஜுடா இந்த நிவாரண பொருட்களைக் கையளித்துள்ளதாக இலங்கையின் தெற்காசியாவுக்கான தூதுவர் மேஜர் ஜெனரல் நந்தன மல்லவராச்சி ஜகார்த்த போட் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் இந்தோனேஷியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவ்வேளை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம விடுத்த அழைப்பின் பேரில் இலங்கைக்கான விஜயத்தை இவர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியிலுள்ள மக்களுக்காக நிவாரணப் பொருட்களை கொண்டு வரும் போர்வையில்வணங்கா மண்என்ற கப்பல் பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு வர முயற்சிப்பதென்பது விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச ரீதியில் பிரசாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கே ஆகும். எனவே இலங்கை கடல் எல்லைக்குள் கப்பல் வந்தால் தாக்கியழிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கு , பொறுப்பான செயலாளர் நரேந்திர குணதிலக மேலும் தெரிவிக்கையில், பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு கப்பல் வருவதென்றால் எமது அரசாங்கத்திடம் அனுமதி பெற முனைவதை விடுத்து பலாத்காரமாக நுழைய முடியாது. அதேவேளை சர்வதேச செஞ்சிலுவைக் கொடியுடனோ .நா. கொடியுடனோ கப்பல் வருமானால் எமது நாட்டிலுள்ள அவ் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி அனுமதியைப் பெற வேண்டும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயேவணங்கா மண்என்ற கப்பலில் வன்னி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பப் போவதாக சர்வதேச ரீதியில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தோல்வியின் விளிம்பில் உயிர் மூச்சு விடும் புலிகளுக்கு சர்வதேச ரீதியிலான உதவிகளை பெற்றுக் கொடுத்து ஒட்சிசன் ஏற்ற முனையும் புலி ஆதரவாளர்களின் தந்திரோபாயமே இதுவாகும்.
அத்தோடு வன்னியில் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் உதவி செய்வதில்லையென்ற பிரசாரத்தை முன்னெடுப்பதும் இதன் உள்நோக்கமாகும். இதன் மூலம் சர்வதேச நாடுகளின் தலையீடுகளை அதிகரிக்கச் செய்ய புலி ஆதரவாளர்கள் முயன்று வருகின்றனர்.
விடுதலைப் புலிகளே வன்னியில் மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இதனை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே இந்தவணங்கா மண்என்ற கப்பல் பலாத்காரமாக எமது நாட்டு கடல் எல்லைக்குள் புக முனைந்தால் அழித்தொழிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் எமது கட்சியின் தேசிய அமைப்பாளருமான சம்பிக ரணவக கோரிக்கை விடுத்துள்ளார் என்றும் நரேந்திர குணதிலக தெரிவித்தா
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திருகோணமலை கோணேசர் ஆலய குருக்கள் மனைவி கொலை வழக்கில் மேல் நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு எதிராக எதிரி மேன்முறையீடு செய்துள்ள?ர்.
இந்த ஆலய முன்னாள் பிரதம குருக்கள் சிவகடாட்சக் குருக்களான விசாகேஸ்வர ஐயர் மீது அவரின் மனைவி அம்பிகாவை கொலை செய்ததாக குற்றம் சாட்டி தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிவில் எதிரியை குற்றவாளியாகக்கண்ட திருகோணமலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
கடந்த மாதம் 23 ஆம் திகதி இத்தீர்ப்பு வழங்கப்பட்டு அரை மணித்தியாலத்தில் எதிரியின் மேல் முறையீட்டு மனுவை சட்டத்தரணி கே. எம். தில்லைநாதன் தாக்கல் செய்திருந்தார்
குற்றச்சாட்டு நியாயமான அளவு சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை எனவும் அம்பிகாவின் மரணம் தொடர்பாக நிரூபிக்கப்படவில்லை எனவும், மேன் முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது .
அத்துடன் அரசு தரப்பு சாட்சியான பாலமுரளி சர்மா என்பவரின் சாட்சியம் ஒப்புறுதி செய்யப்படவில்லை என்ற காரணமும் மேன் முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!
வன்னி மக்களின் துன்ப துயரங்களை உலகறியச் செய்வதற்காக ஈழத் தமிழ் இளைஞரொருவர் ஆபிரிக்க கண்டத்திலுள்ள மிக உயரமானகிளிமஞ்சாரோஎன்ற மலையிலேறி கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
யாழ். குடாநாட்டைச் சேர்ந்த கீரன் அரசரட்ணம் (33 வயது) என்பவரே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தனது 13 ஆவது வயதில் பிரிட்டனுக்குச் சென்று அங்கு பட்டப் படிப்பை முடித்து தற்போது லண்டனில் வங்கியொன்றில் பணியாற்றி வரும் இளைஞரே வன்னி மக்களின் அவல நிலையை முழு உலகிற்கும் எடுத்துக் கூறுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார் .
ஆபிரிக்காவில் தன்சானியாவிலுள்ள கிளிமஞ்சாரோ மலையின் உயரம் 5,891.8 மீற்றர் (19,330 அடி). இந்த மலை மீதே அவர் நேற்று முதல் ஏறத் தொடங்கியுள்ளார்.
வன்னி மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுடன் வன்னி நோக்கி புறப்படவுள்ளவணங்காமண்கப்பலுக்காக இந்த முயற்சியின் மூலம் நிதி சேகரிக்கவும் கீரன் திட்டமிட்டுள்ளார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துள்ள மலையேறும் முயற்சி ஐந்து நாட்களுக்கு தினமும் பத்து மணித்தியாலங்கள் என்ற ரீதியில் நடைபெறுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!
சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேக நபரான சிறிய தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சாமிமலை ஓல்டன் தோட்ட கிங்கேரா பிரிவைச் சேர்ந்த இச் சிறுமியின் (வயது 13) தந்தை அவரின் தாயை பிரிந்து சென்றதால் இச்சிறுமி பாடசாலை விடுதியிலேயே தங்கி கல்வி கற்றுள்ளார்.
பாடசாலை விடுமுறைக்கு வீடு சென்று திரும்பிய இச்சிறுமியின் நடத்தையில் மாற்றத்தை அவதானித்த பாடசாலை ஆசிரியை, இச்சிறுமையை வைத்தியரிடம் அழைத்து சென்ற போது அவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சிறுமி தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இச்சிறுமி விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த வேளை சிறிய தந்தையால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது .
இது குறித்து சிறுமியின் தாய் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து சிறுமியின் சிறிய தந்தையை கைது செய்து அட்டன் நீதிவான் பிரதீப் ஜயதிலக்க முன் ஆஜர் செய்தனர்.
சந்தேக நபரை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிரப்பித்ததுடன் சிறுமியை நாவலபிட்டிய ஆதார வைத்திய சாலையின் மகபேற்று வைத்தியரின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளார்.
!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!!!
இந்திய மீனவர்கள் சில சமயம் இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளதாக ..என்.எஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும்,இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எனது இலங்கை விஜயத்தின் போது இவ்விடயம் குறித்து அரசதரப்பினருடன் கலந்துரையாடியதாகவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார் . இலங்கை கடற்பகுதிக்குள் தவறுதலாக நுழையும் மீனவர்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பிரணாப் முகர்ஜி மேலும் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யாததற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, சென்னையில் நிருபர்களின் கேள்விகளுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் தெரிவித்துள்ளதாவது,
நிருபர்: இலங்கையில் விடுதலைப் புலிகளின் அனைத்து பகுதிகளையும் இராணுவம் கைப்பற்றி விட்டதாகவும், அவர்களது இராணுவ தளங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், பிரபாகரனும், அவருடைய புதல்வரும் தமிழர்கள் வாழ்கிற பகுதியில் மறைந்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றனவே?
கருணாநிதி: இது போர்க்களத்துச் செய்தி. நாங்கள் இலங்கையில் நடைபெறுகிற இந்தப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. போர் நிறுத்தம் வேண்டும் என்று கடந்த 6 மாத காலமாகத் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.

எங்களுடைய குரலை மதித்து வெளிநாட்டு அரசுகள், .நா . சபை மூலமாக போரை நிறுத்துமாறு இலங்கைக்கு சொல்லி வருகிறார்கள். அதைப் போலவே , நாங்கள் வலியுறுத்தியதன் காரணமாகவும், பொதுவாக இலங்கைத் தமிழர்கள் மீது மத்திய அரசுக்கு உள்ள அனுதாபம் காரணமாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோர், பிரச்னைக்கு போர் தீர்வல்ல; பேச்சுவார்த்தை தான் பிரச்னையைத் தீர்த்து வைக்கும். எனவே, போரை நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் ராஜபக்ச போரை நிறுத்தவில்லை. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
நிருபர்: இனியாவது அவர்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களா ?
கருணாநிதி: போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றுதான் தொடக்கம் முதல் கேட்டு வருகிறோம். இப்போதும் அதைத்தான் வலியுறுத்துகிறோம்.
நிருபர்: இலங்கையில் இனிமேலாவது அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்களா?
கருணாநிதி: அங்கே அதிகாரப் பகிர்வு செய்யப்பட இந்திய அரசு இன்னும் முனைப்பாக உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார
!!!!!!!!!!!!!!!!!!
கா‌வ‌ல்துறை உயர் அதிகாரிக‌ள் இர‌ண்டு பேரை த‌ற்க‌ா‌லிக ப‌ணிநீ‌க்க‌ம் செய்யக்கோரி வரும் 9ஆ‌ம் ‌‌நீ‌திம‌ன்ற‌ங்‌களை புறக்கணிக்க வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் கூட்டமைப்பு முடிவு செ‌‌ய்து‌ள்ளது .

சென்னையில் உள்ள பார் கவுன்சில் அலுவலகத்தில் வழ‌க்க‌‌றிஞ‌ர்க‌‌ளி‌ன் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. உய‌ர்நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், தமிழ்நாடு வழ‌க்க‌‌றிஞ‌ர்கள் சங்கத் தலைவர் எஸ் .பிரபாகரன், ஈரோடு பார் பெடரேஷன் தலைவர் பரமசிவம் உள்பட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், இர‌ண்டு காவ‌ல்துறை அதிகாரிகளையும் த‌ற்கா‌லிக ப‌ணிநீ‌க்க‌ம் செய்ய வலியுறுத்தி வரும் 9ஆ‌ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும். இதுதவிர ஒவ்வொரு ‌‌நீ‌‌திம‌ன்ற வளாகத்திலும் தர்ணா போராட்டங்கள் நடத்தப்படும்.

சி.பி.. விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். விசாரணையை விரைவில் முடித்து தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரு உயர் கா‌வ‌ல்துறை அதிகாரிகளையும் த‌ற்கா‌லிக ப‌ணிநீ‌க்க‌ம் செய்யாததால் தமிழக அரசு மீது உய‌ர்நீ‌திம‌ன்ற‌ம்நீ‌திம‌ன்ற அவமதிப்பு வழக்கு மேற்கொள்ள வேண்டும் எ‌ன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
!!!!!!!!!!!!!!!!!!!!!
பெரியார் திராவிடர் கழகத்தை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தற்கு அக்கட்சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் விடுதலை ராஜே‌ந்‌திர‌ன் கடு‌ம் கண்டனம் தெரிவித்துள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்தாத காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதற்கும் அவர்களை தோற்கடிக்க கூடிய எதிரணிக்கு வாக்களிக்க மக்களிடம் பிரசாரம் செய்வதற்கும் உள்ள கருத்துரிமையை காங்கிரஸ் பறிக்க துடிக்கிறது.

பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட குறுந்தகட்டையும், பெரியார் திராவிடர் கழகத்தையும் தடை செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு புகார் மனு அளித்துள்ளார் . இந்த குறுந்தகட்டில் வெளியிட்டுள்ள ஈழத் தமிழர் அவலக்காட்சிகள் ஏற்கனவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டவைதான். வேறு எந்த சட்டவிரோத கருத்துகளும் இடம்பெறவில்லை. ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் களத்தில் ஆதரவுஎதிர்ப்பு கருத்துக்களை வெளியிடும் உரிமை ஒவ்வொரு கட்சிக்கும் உண்டு.

கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டில் பெரியார் திராவிடர் கழகம் தொண்டாற்றி வருகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும்போது மட்டும் மக்களை சந்திக்க வரும் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரியார் விட்டு சென்ற தமிழர்களின் சுயமரியாதைக்கான உரிமைகள் பற்றியான கவலையோ, அக்கறையோ இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாதுதான். அதனால்தான் பெரியார் திராவிடர் கழகத்தையே தடை செய்ய வேண்டும் என்று மனு தருகிறார்கள். பெரியார் திராவிடர் கழகம் இதை வன்மையாக கண்டிக்கிறது எ‌ன்றுவிடுதலை ராஜேந்திரன் கூறியு‌ள்ளா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மக்களவைத் தேர்தலில் தமது மகன், மகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால், அதிருப்தி தெரிவித்திருந்த மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங்கிற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதில் அளித்துள்ளார்.

அர்ஜூன் சிங் போன்ற தலைவர்கள் தங்களின் குறைகளை, அதிருப்தியை பத்திரிகைகளுக்கு தெரிவிக்க வேண்டாம். கட்சிக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி புதுடெல்லியில் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இதேபோன்ற அறிவுரையை மற்றொரு காங்கிரஸ் தலைவர் மார்கரெட் ஆல்வாவிற்கும் தாம் விடுப்பதாக அவர் கூறினார்.

மார்கரெட் அல்வாவின் மகனுக்கு கர்நாடக மாநிலத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று அர்ஜூன் சிங் அளித்த பேட்டியில், தமது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காதது மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
!!!!!!!!!!!!!!!
சென்னை எண்ணூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் பலியாகினர் . 3 பேர் நீந்தி உயிர் தப்பினர். கடலில் மூழ்கிய மேலும் 4 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எண்ணூர் அருகே சிவகாமி நகரில் அம்மன் கோயில் ஒன்றில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்துகொண்ட 10 பேர், பைபர் படகு ஒன்றில் கடலில் உல்லாச பயணம் மேற்கொண்டுள்ளனர். 5 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய படகில் கூடுதலாக 5 பேர் பயணம் செய்ததால், படகு கவிழ்ந்ததாகத் தெரிகிறது.
சம்பவத்தில் படகின் அடியில் சிக்கிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் தண்ணீரில் நீந்தி கரை சேர்ந்தனர். இதனையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, 3 பேரின் உடல் கைப்பற்றப்பட்டது .
படகில் பயணம் செய்த மேலும் 4 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
!!!!!!!!!!
©Lôo ØRpYo ¨¾x ÏUôo Utßm Id¡V _]Rô R[ Lh£«u Uô¨Xj RûXYo WôËq WgNu £e XXû] AYç\ôLl úT£VRôL ©Lôo Øu]ôs ØRpYo Wôl¬ úR® ÁÕ, Tôh]ô úTôÄ^ôo YZdÏl T§Ü ùNnÕs[]o.
CÕùRôPoTôL AYo ÁÕ ØRp RLYp A±dûL T§Ü ùNnVlThÓs[Õ.
world
!!!!!!!!!!!!!!!
நடப்பாண்டுக்கான நோபல் அமைதி விருதுக்கு பாலஸ்தீனத்தைச் சேர்ந்த மருத்துவர் எஸ்ஸெல்தீன் அபு அல்ஐஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

பாலஸ்தீனம்இஸ்ரேல் இடையே நடந்த சண்டையில் , எஸ்ஸெல்தீனின் மூன்று மகள்களும் காஸாவில் உள்ள வீட்டில் தங்கியிருந்த போது இஸ்ரேலியப் படையினரின் குண்டுவீச்சில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி உயிரிழந்தனர்.

எனினும், தனது மகள்களின் உயிரிழப்பால் உணர்ச்சி வசப்படாமல் பாலஸ்தீன மக்களின் நலன் கருதி இஸ்ரேலுடன் சமாதானப் பேச்சுகள் நடத்தப்பட வேண்டும் என எஸ்ஸெல்தீன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இதுதொடர்பாகஒய்நெட்என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் , நோபல் பரிசுக் குழு எஸ்ஸெல்தீனுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும், அதில் அவர் நோபல் அமைதி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரையை இஸ்ரேலும் வரவேற்றுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

அந்த இணையதளத்திற்கு எஸ்ஸெல்தீன் அளித்துள்ள பேட்டியில், சமீபத்தில் பெல்ஜியம் சென்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபரை சந்தித்த பின்னர், நோபல் அமைதி விருதுக்கு எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வக் கடிதம் கிடைத்ததாக கூறியுள்ளார்.

அமைதிக்கான நோபல் விருது தனக்கு வழங்கப்பட்டால் அதனை பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய பகுதியில் உள்ள எளிய மக்களுக்கு அர்ப்பணம் செய்வேன் என எஸ்ஸெல்தீன் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்காவில் போலீசாரை வீட்டுக்கு வரவழைத்து 3 பேரை சுட்டுக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாலிபர் ஒருவர் 13 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்த ரிச்சர்டு (23) என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, தனக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் , உடனடியாக தன்னை காப்பாற்ற வரும்படியும் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதைதொடர்ந்து , காவல்துறையினர் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது, அந்த நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலியாகினர்.

இதனால், சுதாரித்துக்கொண்ட பிற காவல்துறையினர் பதிலடி தாக்குதல் நடத்தி ரிச்சர்டை மடக்கி பிடித்தனர். அவனிடம் இருந்த துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சமீபத்தில் வேலையை இழந்த ரிச்சர்டு , அந்த விரக்தியில் இந்த படுகொலைகளை செய்ததாக கூறப்படுகிறது.

!!!!!!!!!!!!!!!!
அணு ஆயுத அச்சமற்ற ஒரு உலகம் அமைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார். அந்த எண்ணத்துடன் கூடிய இலக்கை அடைய அமெரிக்கா நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் கூறியுள்ளார் .
செக் நாட்டின் தலைநகர் பிராகில் 20,000 மக்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஒபாமா, அணு ஆயுதப் பரவல் அணு தாக்குதல் குறித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அது நிறுத்தப்பட வேண்டும் எனவும்கோரியுள்ளார்.
இதை முன்னெடுக்கும் விதமாக அமெரிக்கா தன் வசமுள்ள அணு ஆயுதங்களை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கும் என்றும், பாதுகாப்பு உத்திகளில் அணு ஆயுதங்களின் பங்கினை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஒபாமா அவர்கள் தெரிவித்துள்ளார்.
எனினும், இரானால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் உண்மையாக இருக்கும் நிலையில், மத்திய ஐரோப்பாவில் அமைக்கப்படவுள்ள ஏவுகணை பாதுகாப்பு நடவடிக்கைகள் தமது நிர்வாகம் முன்னெடுத்துச் செல்லும் என்றும் அமெரிக்க அதிபர் தெளிவுபடுத்தியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!
சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா ஏவி இருப்பதற்கு .நா பாதுகாப்பு சபை பலமான பதில் ஒன்றை கூற வேண்டும் என அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கூறியுள்ளன.
இந்த ஏவுகணை செலுத்தல் தூண்டும் வகையில் இருப்பதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர் , இருந்த போதிலும் தாங்கள் வடகொரியாவுடன் அணுத்திட்டம் குறித்து சர்வதேச பேச்சுவார்த்தை நடத்துவதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தை .நா பாதுகாப்பு சபை விவாதிக்கவுள்ளது. நிதானமாக செயல்படுமாறு ஏனைய நாடுகளுக்கு சீனாவும் ரஷ்யாவும் கோரிக்கை விடுத்துள்ளன.
தங்களுடைய ஏவுகணை செய்மதி ஒன்றை பாதையில் அமர்த்தியதாக வடகொரியா கூறியுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள அமெரிக்காவும், தென்கொரியாவும், இந்த ஏவுகணை ஏவப்பட்டது அதனுடைய செயற்திறனை சோதனை செய்வதற்காகவே என கூறியுள்ளன.
!!!!!!!!!!!!!
சோமாலிய கடற்கொள்ளையர்கள் 22,000 டன் எடை கொண்ட ஜெர்மன் நாட்டு சரக்கு கப்பல் ஒன்றை இந்திய பெருங்கடல் பகுதியில் கடத்தியுள்ளனர்.
கென்யாவுக்கும் ஷெஷல்ஸ்க்கும் இடைப்பட்ட இடத்தில், சோமாலிய கடற்கரையில் இருந்து சுமார் 400 கடல் மைல்களுக்கு அப்பால் இந்த கப்பலை இவர்கள் பிடித்துள்ளனர்.
இந்த கப்பலில் சுமார் 24 பணியாளர்கள் இருப்பதாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஏராளமான கப்பல்களை கடத்திய கடற்கொள்ளையர்கள், ஏடன் வளைகுடாவில் வெளிநாட்டு போர்க்கப்பல்கள் ரோந்து பணியை ஆரம்பித்தது முதல், இந்திய பெருங்கடல் வரையில் சென்று கடத்த ஆரம்பித்துவிட்டனர் .
!!!!!!!!!!!!!!!!!!
sport
!!!!!!!!!!!
India 379 & 434/7d=813
New Zealand 197 & 167/4 (56.0 ov)
New Zealand require another 450 runs with 6 wickets remaining
!!!!!!!!!!!!!!!!!!!!

இந்தியாநியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 379 ரன் குவித்தது . நியூசிலாந்து முதல் இன்னிங் சில் 197 ரன்னில் சுருண்டது.
182 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 349 ரன் எடுத்து இருந்தது. யுவராஜ்சிங் 15 ரன்னுடனும், டோனி 16 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது.
ஆட்டம் தொடங்கிய 1 மணி நேரத்தில் மேலும் 85 ரன் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக டோனி அறிவித்தார். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 434 ரன் எடுத்து இருந்தபோதுடிக்ளேர்” செய்தது. இதனால் நியூசிலாந்துக்கு 617 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது .
யுவராஜ்சிங் 40 ரன்னிலும், ஹர்பஜன் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். டோனி 77 பந்தில் 7 பவுண்டரியுடன் அரை சதத்தை தொட்டார். அவர் 56 ரன்னிலும், ஜாகீர்கான் 18 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
நியூசிலாந்து தரப்பில் மார்ட்டின் 3 விக்கெட்டும், வெட்டோரி, ஒபிரையின் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். 617 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலுக்குடன் நியூசிலாந்து பேட்டிங் செய்தது. ஜாகீர்கான், ஹர்பஜன்சிங் கின் அபாரமான பந்து வீச்சால் நியூசிலாந்து விக்கெட்டுகள் சரிந்தன. 84 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 4 விக்கெட்டை இழந்தது.
தொடக்க வீரர் மேக்ளின் டோஷ் 4 ரன்னிலும், பிளைன் 10 ரன்னிலும் ஜாகீர்கான் பந்தில் ஆட்டம் இழந்தனர். மார்ட்டின் குப்தில் 49 ரன்னிலும், ரைடர் ரன் எதுவும் எடுக்காமலும் ஹர்பஜன்சிங் பந்தில் பெவிலியன் திரும்பினார்கள்.
ரோஸ் டெய்லர் மிகவும் பொறுப்புடன் விளையாடினார்.
தேனீர் இடைவேளையின் போது நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து இருந்தது . டெய்லர் 48 ரன்னுடனும், பிராங்ளின் 18 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
தேனீர்இடைவேளைக்குப்பின் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணியின் டெய்லர் அரைசதம் அடித்தார். எதிர்முனையில் பிராங்க்ளின் நிதானமாக விளையாடி விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டனர் . இந்திய பந்துவீச்சாளர்களால் இவர்களை பிரிக்கமுடியவில்லை.
நியூசிலாந்து அணி 56 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன் எடுத்திருக்கும்போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினார் 4வது நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது . டெய்லர் 69 ரன்னுடனும், பிராங்க்ளின் 26 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இந்தியா வெற்றி பாதையில் செல்கிறது .
இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுகிறது. ஹேமில்டனில் நடந்த முதல் டெஸ்டில் 10 விக்கெட்டில் இந்தியா வென்று இருந்தது. 2-வது டெஸ்ட்டிரா” ஆனது.
41 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்கிறது.
!!!!!!!!!!!!!!!!!!
1 euro = 157.31sl /67.71in
1us $ =116.08sl / 49.96in
1swiss fr = 102.95sl /44.31in
1uk pound = 173.02sl /74.47in
1saudi riyal = 30.99sl /13.34 in

Leave a Reply

Your email address will not be published.