250 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக சிறிலங்கா இராணுவம் அறிவிப்பு

கடும் சண்டையில் 250 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. மேலும் புலிகள் கைவசம் இருந்த புதுக்குடியிருப்பு பகுதியை கைப்பற்றியிருப்பதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 4ஆம் தேதி இரவு இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போரில் விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களான தீபன், ரூபன், நாகேஷ், கடாபி, விதுஷா, துர்க்கா, கமலினி உட்பட 250 பேர் கொல்லப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் கைவசம் இருந்த புதுக்குடியிருப்பு பகுதியை இராணுவம் தற்போது கைப்பற்றியுள்ளது.

இராணுவத்தின் 53வது பிரிவு, 58வது பிரிவினர் விடுதலைப்புலிகள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 120 விடுதலைப்புலிகளின் உடல்கள் போர் பகுதியில் சிதறிக் கிடப்பதாக இராணுவம் கூறியுள்ளது.

புதுக்குடியிருப்பு பூரண கட்டுப்பாட்டில்; 250 புலிகளின் சடலங்கள் மீட்பு

புதுக்குடியிருப்புப் பிரதேசம் இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இன்று கொண்டு வரப்படடுள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்தது.

பாதுகாப்பு வலயம் தவிர்ந்த மீதமாகவிருந்த ஒரு சதுர கிலோ மீற்றர் பரப்பும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவித்துள்ள பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நேற்று முதல் இந்தப் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் 250 சடலங்களை இன்று மீட்டதாகவும் தெரிவித்தது.

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.