நெதர்லாந்து அரசானது சிறீலங்காவிற்கான அபிவிருத்தி உதவிகளை இடைநிறுத்தியுள்ளது.

நெதர்லாந்து அரசானது அபிவிருத்திக்கென வழங்கப்படுகின்ற உதவிகளை ஏழு நாடுகளிற்கு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. சிறிலங்கா உட்பட பொஸ்னியா எரித்திரியா அல்பானியா ஆர்மேனியா மசடோனியா காப்போர்டி நாடுகளே அவ்நாடுகளாகும்.


குழப்பமான அரசியல்நிலை பாதுகாப்பில்லாத நிலை பிறநிறுவனங்களிலிடமிருந்து அதிகமான உதவிகளைப்பெறுகின்றமையை காரணம்காட்டி இந்நாடுகளிற்கான உதவிகளை நிறுத்தவதாக தனது காரணத்தை நெதர்லாந்துஅரசு தெரிவித்துள்ளது. இத்தகவலை அந்நாட்டின் அமைச்சர் திரு. கூன்டோஸ் தெரிவித்துள்ளதுடன் வெளிநாட்டமைச்சின் இணையத்தளத்திலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தகாலங்களில் சிறீலங்காவிற்கு அதிகஉதவிகளை அபிவிருத்திக்கென நெதர்லாந்து அரசு வழங்கியிருந்தும் அதை தமிழின அழிப்பிற்கே மகிந்தஅரசு பயன்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.