கண்டியில் தமிழ்ப் பெண் கைது

சிறிலங்காவின் கண்டி நகரில் பேருந்து நிலையத்தில் தமது சொந்தக் கிராமத்துக்குச் செல்வதற்காகக் காத்திருந்த தமிழ்ப் பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கண்டி நகரில் உள்ள ஹன்டல என்ற இடத்தில் ரூபவாஹினி தொலைக்காட்சி கோபுரத்துக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த போதே இந்தத் தமிழ்ப் பெண் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது நடமாட்டத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்தே அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்து கொண்டு சென்றனர்.

இவரிடம் இருந்து இரண்டு கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைதான பெண் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.