‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (04.04.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்மக்கள் பாதுகாப்பு வலயம்என சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கடற்கரைப் பகுதிக்குள் ஐந்து முனைகளில் ஒரே வேளையில் தாக்குதல்களை நடத்திக்கொண்டு உட்பிரவேசிப்பதற்கு சிறிலங்கா படையினர் தயாராகி இருப்பதாக களமுனை மற்றும் கொழும்பு படைத் தலைமையக வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பச்சைப்புல்மோட்டைப் பகுதி கடுமையான மோதல்களைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை படையினரால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பகுதி படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு வலயப் பிரதேசம் படையினரால் முற்றாகச் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சிறிலங்கா படையினரின் 58 ஆவது படைப் பிரிவே இந்தப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
சுமார் ஒரு வார காலமாக இடம்பெற்ற கடுமையான மோதல்களையடுத்தே இப்பகுதியை படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இப்பகுதியைப் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் 58 ஆவது படையணியினர், 53 ஆவது படையணியினருடன் இணைப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையிலேயே சிறிலங்கா படையினரின் பலம் வாய்ந்த ஐந்து படையணிகள் வன்னியில் பெருந்தொகையான பொதுமக்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் ஐந்து முனைகளினால் பிரவேசிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கையை எவ்வாறு மேற்கொள்வது என்பதையிட்டு களமுனைத் தளபதிகளுடன் முக்கிய ஆலோசனைகளை நடத்துவதற்காகவே சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று சனிக்கிழமை அவசரமாக வவுனியாவுக்குச் சென்றிருந்ததாகவும் தெரிகின்றது.
களமுனையில் உள்ள முக்கிய மூத்த தளபதிகளும் இராணுத் தளபதியுடனான இந்தச் சந்திப்புக்காக நேற்று அவசரமாக வவுனியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இராணுவத் தளபதியுடனான ஆலோசனைகளையடுத்து களமுனைத் தளபதிகள் உடனடியாகவே முல்லைத்தீவுப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களுக்கு முக்கியமான உத்தரவுகளை இராணுவத் தளபதி பிறப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னிப் போர் தீவிரமடைந்த போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவின் கடற்கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பு வலயமாக அறிவித்த சிறிலங்கா படையினர், பொதுமக்கள் அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

புதுமாத்தளன், அம்பலவன்பொக்கனை , வலைஞர்மடம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கடற்கரையோரப் பகுதிகளே பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பகுதிக்குள் தற்போது சுமார் மூன்று லட்சம் மக்கள் அடைக்கலம் புகுந்திருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா படையின் 55 ஆவது படைப்பிரிவு, 58 ஆவது படைப் பிரிவு, 53 ஆவது படைப் பிரிவு, 59 ஆவது படைப் பிரிவு மற்றும் சிறப்புப் படைப்பிரிவு – 8 என்பன இந்தப் பாதுகாப்பு வலயப் பகுதியைத் தற்போது சுற்றிவளைத்திருப்பதாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படைப் பிரிவுகள் பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் ஒன்றை நடத்தி அதற்குள் பிரவேசிப்பதற்குத் தயாராக இருப்பதாக படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்ற போதிலும், இந்த நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பாக எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

இருந்தபோதிலும் , இந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் மீது விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்திருப்பது படையினருடைய திட்டங்களைச் சீர்குலைப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதாக அமைந்துவிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

படையினரின் முன்னரங்க நிலைகளின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்துள்ள விடுதலைப் புலிகள், சிறிய குழுக்களாக படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதிகளுக்குள்ளும் பிரவேசித்து தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.

கடந்த வாரத்தில் மட்டும் விசுவமடு மற்றும் கொக்காவில் பகுதிகளுக்குள் ஊடுருவிச் சென்ற விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான தக்குதல்களை விடுதலைப் புலிகள் தீவிரப்படுத்தியிருப்பது படையினருடைய திட்டங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையலாம் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சட்டவிரோதமான நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக டச்சு வங்கி சர்வதேச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளது .

பில்லியன் கணக்காண தொகைப் பணத்தை அரசாங்கம் செலுத்த தவறியுள்ளதாக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது .

ஜெர்மனிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட முதலீடு தொடர்பான ஒப்பந்தத்தை ஒரு தலைப்பட்சமாக இலங்கை மீறியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இலங்கை அரசாங்கம் சர்வதேச வங்கிகளுடன் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், தமது வங்கிக்கு கிடைக்கப் பெறவேண்டிய பெருந் தொகை பணத்தை அரசாங்கம் வழங்கத் தவறியுள்ளதாக டச்சு வங்கி மனுத் தாக்கல் செய்துள்ளது.

ஏற்கனவே சிட்டி வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
,NjNtisapy; சிறிலங்காவுக்கான அபிருத்தி உதவிகளை நெதர்லாந்து இடைநிறுத்தியுள்ளதாக அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றது.
சிறிலங்கா உட்பட பொஸ்னியா, எரித்திரியா, அல்பானியா, ஆர்மேனியா, மசடோனியா, கம்போடியா ஆகிய நாடுகளின் அபிவிருத்திக்கு வழங்கப்படும் உதவிகளையே நெதர்லாந்து தற்காலிகமாக இடைநிறுத்தியிருக்கின்றது .

குழப்பமான அரசியல் நிலை, பாதுகாப்பில்லாத நிலை, பிற நிறுவனங்களிடம் இருந்து அதிகமான உதவிகளைப் பெறுகின்றமையை காரணம் காட்டி மேற்படி நாடுகளுக்கான உதவிகளை இடைநிறுத்துவதாக நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
அபிவிருத்தி உதவிக்கான இடைநிறுத்தம் தொடர்பாக அந்நாட்டின் அமைச்சர் கூன்டோஸ் அறிவித்திருப்பதுடன் வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் சிறிலங்காவுக்கு அதிக உதவிகளை அபிவிருத்திக்கு என நெதர்லாந்து அரசாங்கம் வழங்கியிருந்தும் அதனை தமிழின அழிப்பிற்கே மகிந்த அரசாங்கம் பயன்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திருகோணமலையில் ஆறு வயது சிறுமி மேரி வர்சா கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சந்திரகாந்தன் தலைமையிலான துணை இராணுவக் குழுவினரே சம்பந்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தமது விசாரணைகளையடுத்து திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதிலும், இந்தக் கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவங்களுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ள சந்திரகாந்தன், இதில் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்டு பின்னர் சயனைட் உட்கொண்டு மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படும் ஜனார்த்தனன் தமது கட்சி உறுப்பினர் அல்ல எனவும், தேர்தல் காலத்தில் மட்டுமே அவர் தம்முடன் இணைந்து செயற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இருந்தபோதிலும் இந்த விசாரணை தொடர்பான விபரங்களை தற்போது வெளியிட்டுள்ள காவல்துறையினர் சந்திரகாந்தனின் கருத்தை நிராகரித்துள்ளனர் .

கிழக்கு மாகாணத்தில் சந்திரகாந்தன் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் பெறுவதற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள பலர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அச்சம் காரணமாக வெளியிடுவதில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அரசாங்கத்தில் குறிப்பிடத்தக்க உறவை கொண்டுள்ள ஒரு கட்சியாக சந்திரகாந்தன் குழு இருப்பதனால் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் காவல்துறையினராலும் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் கல்வி பயிலும் வர்சா, மார்ச் 11 ஆம் நாள் கப்பம் கோரி துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த ஒரு குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டார்.

இது தொடர்பான விசாரணைகளின் போது இந்தக்கடத்தலின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது அடையாளம் காணப்பட்ட பின்னர் கடத்தல்காரர்கள் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கொடூரமாகக் கொலை செய்தனர். அதன்பின்னர் கோணிப் பை ஒன்றில் போடப்பட்ட நிலையில் அவரது உடலம் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது .

இது தொடர்பான விசாரணைகளை நடத்திய காவல்துறையினர் இதில் தொடர்புடையவர்கள் சந்திரகாந்தனின் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்களே என்பதைத் திட்டவட்டமாகக் கூறியிருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கிர வார இதழ் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் கடத்தல், பாலியல் வல்லுறவு, கொலை மற்றும் கப்பம் கோரியமை தொடர்பான குற்றச்சாட்டுக்களில் சந்திரகாந்தன் குழுவைச் சேர்ந்த நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சந்திரகாந்தன் குழுவின் திருகோணமலை அலுவலகப் பொறுப்பாளர் ஜனார்த்தனனும் இவ்வாறு கைது செய்யப்பட்டபோதிலும் பின்னர் அவர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மற்றையவர்களும் சந்திரகாந்தனின் குழுவைச் சேர்ந்தவர்களே என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதானவர்கள் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மற்றைய இருவர் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது .

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினருக்கு மேலும் அதிர்ச்சியயான தகவல்கள் கிடைத்திருக்கின்றது.
அதாவது, திருகோணமலை பல தமிழ் வர்த்தகர்கள் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் கோரப்பட்ட சம்பவத்துடன் சந்திரகாந்தனின் குழுவே சம்பந்தப்பட்டிருக்கின்றது என்பதை காவல்துறையினர் இப்போது கண்டறிந்துள்ளனர்.

இவ்வாறான பல கடத்தல் மற்றும் கப்பம் பெறப்பட்ட சம்பவங்கள் அச்சம் காரணமாக தொடர்புபட்டவர்களால் மூடிமறைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில் வர்சா கொலையாளிகள் கைது செய்யப்பட்ட பின்னர் திருகோணமலையில் இடம்பெற்று வந்த மர்மமான கடத்தல் சம்பவங்கள் முடிவுக்கு வந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திருகோணமலை இறங்கு துறைமுகத்திற்கு வந்திறங்குபவர்களின் பயணப்பையில் இருந்து பணம் மற்றும் நகைகள் அபகரிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

காயமடைந்த நிலையில் வன்னிப்பிரதேசத்தின் புதுமாத்தளன் பகுதியில் இருந்து மேலதிக சிகிச்சையின் நிமித்தம் பெரும்பாலானோர் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் உதவியோடு திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்படுபவர்களோடு உதவிக்கு செல்லும் நபர்களின் பயணப்பைகள் அவசர அவசரமாக அரச படையினரால் சோதனை இடப்படுவதாகவும், சோதனையின்போது பைகளில் இருக்கும் பணம் மற்றும் நகைகள் காணாமல் போவதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்தமாதம் இதுபோன்ற சம்பவங்கள் பல தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்ததாகவும் பணம் மற்றும் நகைகளை பறிகொடுத்தவர்கள் இது குறித்து எவரிடம் முறையிடுவது எனத்தெரியாமலும் அச்சம் காரணமாகவும் மௌனம் சாதிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதால் பொருளாதார நெருக்கடிகளின் மத்தியிலும் கட்டுப்பாட்டு பகுதிக்குள் நம்பிக்கையுடன் வரும் மக்கள் தமக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரியவருகின்றது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கை விமானப்படைத் தளபதி எயர் வைஸ் மார்ஷல் ரொசான் குணதிலக்கவினால் மேற்கொள்ளப்பட்ட அதிகார துஸ்பிரயோகம் குறித்து குறித்து பிரபல வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தனது புதல்வரை விமானப்படைச் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக பல்வேறு ஊழல்களை விமானப்படைத் தளபதி மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

விமானப்படையின் கெடட் அதிகாரியாக இணைத்துக் கொள்வதற்கு பின்பற்றப்படும் குறைந்தப்பட்ச தகுதிகளை கருத்திற் கொள்ளாது விமானப்படைத் தளபதி தனது மகனை படையில் இணைத்துக் கொண்டுள்ளார்.

பொதுவாக உயர்தர பரீட்சையில் சித்தியெய்திவர்களே விமானப்படையின் கெடட் அதிகாரிகளாக உள்வாங்கப்படுவது வழக்கமாகும் .

எனினும், இம்முறை இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்படடுள்ளது.

முதலில் உயர்தரத்தில் சித்தியடைந்தவர்கள் மட்டுமே வி;ண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் தனது புதல்வரை இணைத்துக் கொள்ளும் நோக்கில் தகுதி திடீரென சாதாரண தரப் பரீட்சை சித்தி வரையில் குறைக்கப்பட்டுள்ளது.

விமானப்படைத் தளபதியின் புதல்வர் ரெஹான் குணதிலக்க தற்போது இலங்கை விமானப்படை கெடட் பிரிவின் அதிகாரியாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார் .

மேலும், தனியார் விமான பயிற்சி நிலையமொன்றில் ரெஹான் பயிற்சிகளை முடித்துக் கொண்டுள்ளதாகவும், சுமார் 700,000 ரூபா பெறுமதியான குறித்த கற்கை நெறிக்கான கட்டணம் இதுவரையில் செலுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தந்தை விமானப்படையின் தளபதி என்ற ஒரே காரணத்தினால் கட்டணம் செலுத்தப்படவில்லை என குறித்த தனியார் பயிற்சி நெறியின் உயரதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டின் உயர் அதிகாரிகளே இவ்வாறு அதிகார துஸ்பிரயோகங்களை மேற்கொள்வது வேதனையளிப்பதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தென்னிலங்கை பூசா முகமில் கடந்த 8 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் 16.7.2008 கொழும்பு வெள்ளவத்தை கம்டன் வீதியில் வைத்து அவர் கையடக்க தொலலைபேசி ஒன்றை ஒருவருக்கு வாங்கிக்கொடுத்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறையடைக்கப்பட்டிருந்தார் .
இந்நிலையில் அவரை விசாரணை செய்த நீதிபதி அவர் குற்றமற்றவர் எனக்கூறி நேற்று விடுதலை செய்துள்ளார்.
இவர் சிறீலங்கா படையினரின் மற்றும் காவல் துறையினரின் செயலால் கடந்த பல மாதங்கள் சிறையில் வாடியமையும், இவ்வாறு பல தமிழ் இளம் ஆண்கள், பெண்கள் தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!
மாகாணசபை முறையின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாதென ஜனநாயக மக்கள் முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினரும், கொழும்பு மாவட்ட வேட்பாளருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை முறைமை அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள மிகவும் உசிதமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கு வாழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையிலான தீர்வுத் திட்டமொன்றின் மூலம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார் .

வெறுமனே மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதன் மூலம் இனப்பிரச்சினை தீர்வுக்கான எந்தவொரு சாதக பலனும் கிட்டாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு லிபியா செல்ல உள்ளார். அவர் வரும் வாரத்தில் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் 8 ஆம் திகதி லிபியா செல்லும் மகிந்த ராஜபக்ஷ அங்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தங்கியிருப்பார்.

அவர் லிபியா ஜனாதிபதி முஹம்மர் கடாபி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம உள்ளிட்ட பிரதிநிதிகளும் லிபியா செல்ல உள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!

முல்லைத்தீவில் முன்னேறிக்கொண்டிருக்கும் படையினர் இறுதிவெற்றியை நெருங்கிவிட்டார்கள் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரா தெரிவித்தார்.
நேற்று முழுநாளும், முன்தினமும் நடந்த கடும் சண்டையில் விடுதலைப் புலிகளின் நூறு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர் . தேடுதல் மேற்கொண்ட படை யினர் அந்தச் சடலங்கை மீட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.


விடுதலைப்புலிகளின் இறுதிக் கோட் டையாக விளங்கும் புதுக்குடியிருப்பில் பல பகுதிகள் படையினர் வசம் வீழ்ந்து விட்டன. எந்த நேரத்திலும் படையினர் தமது இறுதி இலக்கை அடைந்து விடுவார் கள் என்று அவர் மேலும் குறிபிட்டார்.


புதுக்குடியிருப்பில் படையினர் கடைசி யாக மீட்ட ஆனந்தபுரம் பகுதியில் கூட்டம் கூட்டமாக நின்று படையினர் மீது தாக் குதல் நடத்தும் புலி உறு”ப்பினர்களை தேடி அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


படையினர் மீது 130 மி.மி. ஆட்லறி தாக்குதல்களை விடுதலைப்புலிகள் தொடர்ந்து மேற்கொள்கின்றனர். இத்தாக்கு தல்களுக்கு மத்தியிலும் படையினர் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று பாது காப்பு அமைச்சு மேலும் தெரிவித்தது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மூதூர் கிழக்கு பிரதேசவாசிகள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர மறுத்தால் அவர்களை இடம் பெயர்ந்தவர்களாக கருத வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொகான் விஜய விக்கிரம அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.கடந்த ஏப்ரல் முதலாம் திகதியுடன் இந் நடைமுறை அமுலுக்குவரும் வகையில் இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு மூதூர் கிழக்கு பிரதேசத்தில் இடம் பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக இடம் பெயர்ந்தவர்களில் சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 834 குடும்பங்கள் 2923 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களிலும் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளிலும் தொடர்ந்தும் தங்கியிருக்கின்றார்கள்.

சம்பூர் பிரதேசம் அனல் மின் உற்பத்தி நிலையம் மற்றும் பொருளாதார வலயமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் இக் குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதியில் மாற்று இடங்களில் இவர்களைக் குடியமர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ள போதிலும் அது பொருத்தமற்ற இடம் என இக் குடும்பங்கள் கருதுவதால் இது தொடர்பாக கிழக்கு மாகாண சபை நிர்வாகம் சில நடைமுறைச் சிக்கல்களை எதிர் நோக்கியுளள்து.

இதேவேளை கிழக்கு மாகாண புனர்வாழ்வு இணைப்பாளர் .செல்வேந்திரன் திருகோணமலை மாவட்ட புனர்வாழ்வு திட்ட இணைப்பு பணிப்பாளர் ரியல் அட்மிரல் எச் .ஆர்.அமரவீர ஆகியோர் மட்டக்களப்பில் தங்கியுள்ள இக் குடும்பங்களை கிளிவெட்டியிலுள்ள முகாம்களுக்கு திரும்ப தயாராகுமாறு கேட்டுள்ளனர்.

தொடர்ந்தும் மட்டக்களப்பில் தங்கியிருந்தால் இடம் பெயர்ந்தவர்களாக கருத முடியாத நிலை ஏற்படலாம் என்றும் அவ் அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.இப்புதிய அறிவிப்பு குறித்து அதிர்ச்சி அடைந்துள்ள இக்குடும்பங்கள் இது தொடர்பாக .நா.வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் கவனத்திற்கு இதனை கொண்டு வந்துள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பப்படும் மக்கள் தொலைக்காட்சியை இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களில் ஒளிபரப்புவதற்கு சிறிலங்கா படைத்தரப்பு தடைவிதித்துள்ளது.

யாழ்க்குடாநாட்டில் வன்னிப் பெருநிலப்பரப்பில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் 7 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் பயன்பாட்டுக்கென பொது அமைப்புக்களாலும் உள்ளுர் மக்களாலும் பொழுதுபோக்குச் சாதனமாக தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டிருந்தன.

இந்தத் தொலைக்காட்சிகளில் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையிலேயே பலாலி ராணுவத் தலைமையகத்தில் இருந்து விடுக்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் இந்த முகாம்களில் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வன்னியில் இடம்பெறுகின்ற யுத்த நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை மக்கள் தொலைக்காட்சி தமிழ்நாட்டில் இருந்து ஒளிபரப்பி வருகி;ன்றமையே இந்தத் தடைக்குக் காரணம் என நம்பப்படுகின்றது. ஏற்கனவே யாழ்க்குடாநாட்டில் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மீள் ஒளிபரப்பு செய்வதற்கு கேபில் ரிவி ஒப்பரேட்டர்களுக்கு சிறிலங்கா படைத்தரப்பு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்ற உள்துறை அமைச்சர் . சிதம்பரம், தேர்தல் வாக்குறுதிகளை அளித்ததாகக் கூறி அவருக்கு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.

பாஜக அளித்த புகாரின்பேரில், பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து சென்ற இந்துக்களுக்கு குடியுரிமை போன்ற வாக்குறுதிகளை மத்திய அமைச்சர் ஏன் அளித்தார்? என்பதற்கு விளக்கம் கொடுக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது .

சிதம்பரம் இந்த தாக்கீதுற்கு திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழர் நலனுக்கு எதிராக இருக்கின்ற காங்கிரஸ்திமுக கூட்டணியை மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறவிடக் கூடாது. அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்.
தமிழ்த் தேசிய அமைப்புகள், முற்போக்கு இயக்கங்கள் உள்ளிட்ட அமைப்பகளின் சார்பில் மக்களவைத் தேர்தலில் தமிழர் கடமைகலந்தாய்வுக் கூட்டம்திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இலங்கைத் தமிழர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கடிதம் எழுதுகிறார்கள் . அவர்கள் கடிதம் எழுத வேண்டியது கருணாநிதிக்கு அல்ல, இலங்கை அதிபர் ராஜபக்ஷவுக்குத்தான் . எத்தனை காலம்தான் நம்மை ஏமாற்றுவார்கள்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாம் விறுவிறுப்பாகச் செயல்பட வேண்டிய நேரமிது. காங்கிரஸ்திமுக கூட்டணியை மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறவிடக் கூடாது. அவர்கள் வெற்றி பெறுவார்களேயானால் தமிழர் உணர்வுக்கு துரோகம் செய்தவர்களாக ஆகிவிடுவோம்.
தேர்தலில் அவர்கள் ரூ. 500 கோடி முதல் ஆயிரம் கோடி வரை செலவு செய்யட்டும் . ஆனால், மக்கள் சக்தியின் முன் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றார் பழ. நெடுமாறன்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
லோக்சபாத தேர்தலில் ஐந்து தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை முடிவு செய்துள்ளது.

இந்த அமைப்பின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.

பின்னர் அமைப்பின் அமைப்பாளர் தனியரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், கொங்கு இளைஞர் பேரவை வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட விரும்பியது.

இதையொட்டி பேரவையின் சார்பில் .தி .மு.. மற்றும் தி.மு.. தலைவர்களை சந்தித்து நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருமாறு கேட்டோம்.

அவர்கள் நாமக்கல் தொகுதியை ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதாக கூறிவிட்டனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் உரிய தொகுதிகள் தருவதாக கூறினர்.

நமது பேரவை இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதால் , உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கரூர் ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்து உள்ளோம்.

அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். மீண்டும் பிரதான கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்தால், கூட்டணி பற்றி முடிவு செய்வோம் என்றார் அவர் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி நேற்று தனது தாயார் சோனியாவுடன் சென்று அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவில் தனக்கு ரூ. 2.25 கோடி சொத்து இருப்பதாகவும், வங்கி ஒன்றில் ரூ. 23 லட்சம் கடன் வாங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். அவரது பெயரில் சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம்.

உத்தர பிரேதம் மாநிலம் அமேதி தொகுதி நேரு குடும்பத்தின் சொந்த தொகுதி என்று சொல்லலாம்.

இந்த தொகுதியில் தான் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கடந்த 2004ல் இங்கு போட்டியிட்ட ராகுல் 2 லட்சத்து 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தற்போது அவர் இங்கு இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வரும் 23ம் தேதி நடக்கும் இரண்டாவது கட்ட தேர்தலின் போது ஓட்டுபதிவு நடக்கிறது.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ராகுல்காந்தி, நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து வந்தார். நேற்று காலை அவர் முசாபிர்கானா என்ற இடத்தில் இருந்து தனது தாயார் சோனியாவுடன் திறந்த ஜீப் காரில் சுல்தான்பூருக்கு ஊர்வலமாக சென்றார் .

வழி எங்கிலும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ராகுல் காந்தி பகல் 12.20 மணிக்கு சுல்தான்பூர் போய் சேர்ந்தனர் . அங்கு மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ண சிங்கிடம் தனது வேட்புமனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்தார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி முசாபர்பூர் தொகுதியில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ள ஜார்ஜ் பெர்னாண்டஸ் இனியும் கட்சி முடிவை ஏற்க மறுத்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் , முசாபர்பூரில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளார்.

இதையடுத்து அவரை கட்சிக்கும் தற்போது எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.

ஐக்கிய ஜனதாதள அலுவலகத்தில் வைத்திருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸின் படத்தையும் நீக்கி விட்டனர்.

கடந்த புதன்கிழமைதான் முசாபர்பூரில் போட்டியிட மனு தாக்கல் செய்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அவருடன் ராஜ்யசபாயில் சீட் மறுக்கப்பட்டுள்ளது), முன்னாள் பீகார் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா, முன்னாள் எம். பி. ராம் ஜீவன் சிங் உள்ளிட்ட திரளான ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.

இதற்கிடையே , ஐக்கிய ஜனதாதளம் சார்பில் முசாபர்பூரில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் பிரகாஷ் நிஷாத்துக்கு புதுப் பிரச்சினை வெடித்துள்ளது. அவருக்கு ஆதரவுதர மாட்டோம்
என கூட்டணிக் கட்சியான பாஜக அறிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களை தோற்கடிப்பதற்கான புதிய யுக்தி ஒன்று குறித்து நேட்டோ மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் மத்தியில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நடக்கவுள்ள தேர்தல்களுக்கு உதவியாக படைகளை நேட்டோ அங்கு நிறுத்தும் என்றும், மற்றும் விரிவுபடுத்தப்பட்ட ஆப்கானிய இராணுவம் மற்றும் பொலிஸ் படைக்கு அது நிதி மற்றும் பயிற்சியை வழங்கும் என்றும் பதவிக்காலம் முடிந்து செல்லும் நேட்டோவின் தலைமைச் செயலர் ஜாக் ஹூப் ஷெஃபர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக மேலும் 5000 படையினரை அங்கு அனுப்ப தமது நேட்டோ கூட்டாளி நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
மாநாட்டு மண்டபத்துக்கு வெளியே, ஸ்டார்ஸ்பேர்க் நகரில், பிரஞ்சுப் பொலிஸார் ராக்கட்டுக்களையும் , பெட்ரோல் குண்டுகளையும் வீசித்தாக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களோடு மோதலில் ஈடுபட்டனர்.
ஒரு ஹோட்டலும், எல்லைக் காவல் நிலையும் தீவைக்கப்பட்டன.
!!!!!!!!!!!!!!!!!!!
நேட்டோ அமைப்பின் அடுத்த செயலாளராக டென்மார்க் பிரதமர் அண்டர்ஸ் ஃபோக் ரஸ்முஸன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்கவுள்ளார்.
இவருடைய நியமனத்திற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்தது. டென்மார்கில் நபிகள் நாயகம் குறித்து கேலிச்சித்திரம் வெளியானது மற்றும் டென்மார்கில் குர்து இன ஆதரவு தொலைக்காட்சி நிலையம் செயற்படுவது போன்ற விடயங்களில் இவர் மீது துருக்கிக்கு அதிருப்தி உள்ளது .
எனினும் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து துருக்கியின் கவலைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக தற்போதைய நேட்டோ செயலாளர் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகாமையில் இருக்கின்ற பாகிஸ்தான் பகுதியில் இடம்பெற்ற ஏவுகணை தாக்குதலில் குறைந்தப்பட்சம் பதிமூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் தீவிரவாதிகளுடன் சேர்ந்து பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டதாக வடக்கு வாசிர்ஸ்தானில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒரு சிலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
கடந்த நான்கு நாட்களில் ஆளில்லா அமெரிக்க விமானம் நடத்தும் இரண்டாவது தாக்குதல் இது.
இதற்கிடையே, இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்றும், பதிலடிக்கு காத்திருக்குமாறு உள்ளூர் தலிபான் தலைவர் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கண்டெய்னர் ஒன்றில் சுமார் 150 பேர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர்களில் 44 பேர் இறந்து விட்டதாக குவெட்டா மருத்துவமனையில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சட்டத்திற்கு புறம்பாக குடியேற முயன்ற இவர்கள் மூச்சு திணறி இறந்து விட்ட்தாக பொலிஸார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேட்டோ படைகளுக்கு பொருட்களை ஏற்றி செல்லும் இந்த வாகனம் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் ஊடாக இரான் செல்லவிருந்தது.
!!!!!!!!!!!!!!!!!
பிரிட்டனில் இளம்பெண்கள் மிக அதிகமாக குடிப்பதாகவும், குடிப்பதால் ஏற்படும் விஷத்தன்மையால் மருத்துவமனைக்கு கொண்டு செல்பவர்களில் ஆண்களை விட இளம்பெண்கள் மூன்று மடங்கு அதிகம் என சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரச்சனைக்காகவே சிகிச்சையளிக்க பேருந்து ஒன்று பயன்படுத்தபடுகிறத
!!!!!!!!!!!!
sports
ùY#eP²p SûPùTtßYÚm 3-YÕ ¡¬dùLh ùPvh úTôh¥«p 41 BiÓLÞdÏl ©\Ï ùRôPûW ùYpÛm YônlûT ©WLôNlTÓj§d ùLôiÓs[ Ck§V A¦ 5 ®dùLh CZl×dÏ 349 WuLû[f úNojÕs[Õ.
úStß CWiPôm Sôs BhPj§p CWiPôYÕ Cu²eû^j ùRôPe¡V Ck§V A¦ JÚ ®dùLhûP CZkÕ 51 WuLû[f úNoj§ÚkÕ. Cuû\V êu\ôm Sôs BhPj§p Ck§V A¦ 5 ®dùLh CZl×dÏ 349 WuLû[f úNojÕs[Õ.
úNYôdûL 12 . LmÀo 167 , §Wô®h 60, Nf£u 9, XhÑUi 61 WuLû[ GÓjR]o. ÙYWôw £e 15 , úRô² 16 WuLÞPàm BhPªZdLôUp Es[]o.
ØRp úTôh¥«p ùYt± ùTt\Ru êXm Cj ùRôP¬p 1-0 G] Ck§Vô Øu²ûX ùTtßs[Õ.

.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published.