லக்னோவில் 4வது அணியை அறிவித்தனர் லாலு, பாஸ்வான், முலாயம்

லக்னோ : இந்திய அரசியலின் நான்காவது அணியாக உ.பி., – பீகார் முன்னணியை லாலு-பாஸ்வான்-முலாயம் அறிவித்தனர். இந்த கூட்டணி லோக்சபா தேர்தலுக்கு மட்டுமல்ல சட்டசபை தேர்தலுக்கும் தான் என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் தெரிவித்தார்

. காங்.,- பா.ஜவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், லாலு, ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் இடம்பெற்றுள்ள நான்காம் அணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை லக்னோவில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு தலைமையேற்று பேசிய முலாயம் கூறியதாதவது : எங்களுக்குள் கடந்த காலத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் முடிந்து விட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எங்களது கூட்டணி போராடும். சஞ்சய்தத் போட்டியிட தடை விதிக்கப்பட்டதற்கு அரசியல் சதி தான் காரணம். தொடர்ந்து பேசிய லாலு கூறியதாவது : முலாயம் எனது மூத்த சகோதரர் மாதிரி. ஐக்கிய முற்போக்கு கூட்டணயில் ராஷ்டிரிய ஜனதா தளம் நீடிக்கிறது . சோனியாவுடனும், பிரதமருடன் நட்புறவு நீடிக்கும். மத்தியில் ஐ.மு., கூட்டணி தான் ஆட்சியமைக்கும். காங்கிரசில் உள்ள சிலருடன் தான் கருத்து வேறுபாடு நீடிக்கிறது. முலாயம் நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஐ.மு., கூட்டணியின் வெற்றிக்கு வித்திட்டுவர் என்பதை மறக்க கூடாது. இவ்வாறு லாலு கூறினார். மேலும் 4வது அணி காங்கிரசுக்கு எதிரான அணி இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.