ஆஸி.க்கு படகில் போன இலங்கை அகதிகள் மீட்பு!

Horn Island
ஹார்ன் தீவு (ஆஸ்திரேலியா): இலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா நோக்கி வந்த 50 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நடந்து வரும் கடும் சண்டையைத் தொடர்ந்து அங்கிருந்து பல தமிழர்கள் அகதிகளாக இந்தியா வருகின்றனர். இந்த நிலையில் 50 தமிழர்கள் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குப் போயுள்ளனர்.

அவர்கள் சென்ற படகு இந்தோனேஷியா அருகே ஹார்ன் தீவு அருகே தரை தட்டியது. இதையடுத்து அங்கு விரைந்த அந்தத் தீவின் பாதுகாப்புப் படையினர் அவர்களை சுங்கத்துறை படகு மூலம் கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பாப் டெபுஸ் கூறுகையில், படகில் வந்த 50 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. அவர்களை சுங்கத்துறை படகு மூலம் கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது அவர்கள் அனைவரும் ஹார்ன் தீவில் உள்ளனர். விரைவில் அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளோம். அவர்கள் யார் என்ற விவரமும் அப்போது அறியப்படும் என்றார்.

இந்த இரு தீவுகளுமே ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.