யுஎஸ்: வேலையிழந்தோர் எண்ணிக்கை 6.6 லட்சம்

வாஷிங்டன்: 26 வருடங்களில் சந்திக்காத மோசமான வேலையின்மையை கடந்த ஆறே மாதங்களில் சந்தித்துள்ளது அமெரிக்கப் பொருளாதாராம்.

கடந்த ஆண்டு அக்டோபர் தொடங்கி, இந்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி வரையிலான 6 மாதங்களுக்குள் 6,69,000 அமெரிக்கர்கள் தங்கள் வேலைகளை இழந்து, மாற்று வேலைகளுக்கு வாய்ப்பின்றி பெரும் துயரில் இருப்பதாக அமெரிக்க தொழிலாளர் நலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொருளாதார மந்தம் காரணமாக தொடர்ச்சியாக வேலைவாய்ப்புகளை நிறுத்தியதோடு, தங்கள் வர்த்தக நடவடிக்கைகளையும் முடக்கிக் கொண்டன ஆயிரக்கணக்கான அமெரிக்க நிறுவனங்கள். மிகப் பெரிய நிறுவனங்களான போர்டு, கிரிஸ்லர் மற்றும் ஜிஎம் மோட்டார்ஸ் மட்டுமே இதுவரை 2 லட்சம் பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளன.

இதைத் தொடர்ந்து வேலையிழந்த அனைவருக்கும் புதிய பணிகள் வழங்கும் வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க அரசு இறங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இவர்களுக்கு மாற்று வாய்ப்புகள் படிப்படியாக வழங்கப்படும் என ஒபாமா நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.