ரிலையன்ஸால் இந்தியாவுக்கு ரூ.50000 கோடி மிச்சம்!

மும்பை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இன்று புதிய சரித்திரம் படைத்துள்ளது.

தனது கிருஷ்ணா – கோதாவரி ஆற்றுப் படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் இயற்கை எரிவாயு உற்பத்தியைத் துவங்கிவிட்டது.

இதனால் நாளொன்றுக்கு 5 மில்லியன் க்யூபிக் மீட்டர் அளவுக்கும் எரிவாயு உற்பத்தி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் படுகையில் ரிலையன்சுக்கு சொந்தமாக 15 எரிவாயு கிணறுகள் உள்ளன. அவற்றுள் டி-6 பிளாக்கில் ஒரு கிணற்றிலிருந்துதான் இப்போது எரிவாயு எடுக்கும் பணியைத் துவங்கியுள்ளனர். 15 கிணறுகளிலும் எரிவாயு உற்பத்தி ஆரம்பமாகும்போது ஆரம்பத்தில் 40 மில்லியன் க்யூபிக் மீட்டரும், இந்த ஆண்டு இறுதிக்குள் அது 80 மில்லியன் க்யூபிக் மீட்டர் அளவாகவும் அதிகரிக்கும்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனையால், இந்தியாவுக்கு ரூ.50000 கோடி வரை எரிவாயு இறக்குமதி செலவு மிச்சமாகும் என்பதுதான் மிக மிக முக்கியமானது.

“இதுமட்டுமல்ல… இந்த கிணறுகளிலிருந்து அடுத்த 11 ஆண்டுகளுக்கு 42 பில்லியன் டாலர் அளவுக்கு இயற்கை எரிவாயுவை விற்க முடியும். இதில் அரசுக்கு வரும் பங்கு மட்டும் 14 பில்லியன் டாலர்கள்” என்கிறார் மத்திய பெட்ரோலிய துறை செயலாளர் ஆர்.எஸ்.பான்டே.

சாதனைகள் தொடரட்டும்!

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.