இராணுவ இணையத்தளத்தில் மீட்ட புலிகளின் சடலங்கள் என இராணுவ சடலங்களின் புகைப்படங்கள் வெளியாகின்றன

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீட்ட சடலங்கள் என கூறி கொல்லப்பட்ட சிங்கள இராணுவத்தினரின் சடலங்களை கொண்ட புகைப்படங்களை பிரசுரிக்கப்பட்டு வந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கடந்த ஒருவாரமாக இராணுவ செய்தி இணையத்தளம் தமது ஆக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை கட்டுப்படுத்தியுள்ளது

ஏற்கனவே பிரயோகிக்கப்பட்ட புகைப்படங்களையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருவதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உயர் அதிகாரிகள் பார்வையிட்டு அனுமதிப்பதற்கு முன்னர் எவ்வித புகைப்படங்களையும் பிரசுரிப்பதற்கு அனுமதியளிக்கப்படுவதில்லை என இந்த இணையத்தளத்தின் இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புகைப்படங்கள் போலியானவை என்பதாலும், ஏற்கனவே இவை பாதுகாப்பு இணையத்தளத்தில் பல முறை பிரசுரிக்கப்பட்டிருந்தததையடுத்தும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இராணுவ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட 20 ஆக்கங்களில், இரண்டில் மாத்திரமே புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த இரண்டு ஆக்கங்களுக்கும் துருப்பினர் 15 விடுதலைப் புலிகளின் சடலங்களை கைப்பற்றியுள்ளதாகவும், 20 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தலைப்பிடப்பட்டிருந்தன.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.