குழந்தைகளுடன் பெண்கள் தற்கொலை அதிகரிப்பு: ஒரே நாளில் எட்டு பேர் பலி

கணவன் இறந்து போனதால் விரக்தி அடைந்த மனைவி, இரு குழந்தைகளை கொன்று, தானும் தற்கொலை செய்த சம்பவம், சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது. மேட்டூர் அருகே, கூழையூர், அண்ணாநகரைச் சேர்ந்தவர் கருப்புசெட்டி (எ) அழகரசன் (28).

அவரது மனைவி மகேஸ்வரி (24). இத்தம்பதிக்கு மோனிஷா (5), ஹரிஸ் (2) என இரு குழந்தைகள்.வாணவெடி தயாரித்து விற்பனை செய்து வந்தார்கருப்பு செட்டி. அதற்கான அவரது லைசென்ஸ், புதுப்பிக்கப்படவில்லை. கடந்த பிப்.,6ம் தேதி மாலை கருப்புசெட்டி குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.கணவர் விபத்தில் இறந்ததால் மகேஸ்வரி உப்புகல்லூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிலும், தன் வீட்டிலும் மாறி, மாறி வசித்தார். குழந்தைகள் அடிக்கடி, “அப்பா வந்தால் தான் சாப்பிடுவோம்’ என அடம் பிடித்தனர்.

கணவர் இறந்து போனதால் விரக்தியில் இருந்த மகேஸ்வரி, நேற்று முன்தினம் குழந்தைகளை அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டில் இருந்து தன் வீட்டிற்கு வந்தார். இரவில் “டிவி’யை சத்தமாக வைத்து விட்டு தன் இரு குழந்தைகளையும் சேலையில் தூக்கு போட்டு கொன்று விட்டு, தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் சுற்றுபகுதி மக்கள் அங்கு சென்றுள்ளனர். அப்போது மகேஸ்வரி குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சாப்பாட்டில் விஷம்: விஷம் கலந்த பிரியாணியை தின்று தாயும், இரண்டு குழந்தைகளும் தற்கொலை செய்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பல்லன்விளை பகுதியைச் சேர்ந்தவர் சுனில்ராம். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்திரகலா (30) மகள்கள் அருணா (8) அஞ்சு(5) மூவரும், பிரியாணியில் விஷம் கலந்து தின்று வீட்டில் இறந்து கிடந்தனர். விசாரணை நடத்திய போலீசார், சந்திரகலா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில், “தங்கள் சாவுக்கு காரணம் எதுவும் இல்லை’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி: நெஞ்சுவலியால் அவதிப்பட்ட தாயும், அவரை பிரிய மனமில்லாத மகளும் விஷம் குடித்து தற்கொலை செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, உசிலங்குளம் ஏசையா மனைவி பிரேமா(50) நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார். விரக்தியடைந்த பிரேமா நேற்று முன்தினம் மகள் உஷாவின்(21) முன் வைத்து பூச்சி மருந்தை குடித்தார். அதைப்பார்த்த உஷாவும் அதே மருந்தை குடித்து இறந்தார். பிரேமா, நெல்லை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். போலீசார் விசாரணை நடத்தினர். –

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.