குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை

தளவாய்புரம்: ராஜபாளையம் அருகே குளிர்பானம் குடித்து குழந்தைகள் இறந்த வழக்கில், அவர்களது தந்தை விஷம் கலந்தது தெரிய வந்துள்ளது. மீனாட்சிபுரம் மேட்டுப்பட்டித் தெருவைத் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜெயராஜ்(35).


இவரது மனைவி முருகேஸ்வரி(28). கடந்த மார்ச் 31ம் தேதி வீட்டில் வாங்கி வைக்கப்பட்டிருந்த குளிர்பானத்தை குடித்த இவர்களது குழந்தைகள் ஞானசெல்வி(10), பிரியா(7) இறந்தனர். இது குறித்து தளவாய்புரம் போலீசார் விசாரித்தனர். அதில், வேலைக்காக அடிக்கடி வெளியூர் செல்லும் ஜெயராஜுக்கு முருகேஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட் டுள்ளது. குழந்தைகள் தனக்கு பிறக்கவில்லை என நினைத்தார். அதனால் கடந்த மார்ச் 30ம் தேதி முருகேஸ்வரியையும், குழந்தைகளையும் கொலை செய்ய திட்டமிட்டு குளிர்பானத்தில் விஷத்தை கலந்துள்ளார். அதை குழந்தைகள் குடித்து இறந்தது தெரியவந்தது. ஜெயராஜை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.