வன்னியில் இன்றும் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: 25 தமிழர்கள் படுகொலை

வன்னியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 25 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.

‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில் இன்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லெறி, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 25 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டோர் விபரம்:

சுந்தரலிங்கம் தர்சா (வயது 16)

காளிமுத்து குமாரதாஸ் (வயது 30)

செபமாலை தாஸ் (வயது 25)

சீமான் மனோன்மணி (வயது 51)

நாகலிங்கம் தவம் (வயது 32)

திலகராசா சசிகரன் (வயது 23)

சுப்பிரமணியம் வசந்தமாலா (வயது 32)

இராசையா தனபாலசிங்கம் (வயது 53)

தனபாலசிங்கம் பாஸ்கர் (வயது 22)

தனபாலசிங்கம் கோமளா (வயது 46)

தவராசா வினோஜா (வயது 22 )

மோகன் மயூரதன் (வயது 07)

பாக்கியநாதன் தர்சினி (வயது 10)

சந்திரசேகரம் பொன்னம்மா (வயது 45)

கணபதிப்பிள்ளை தங்கராசா (வயது 44)

தங்கராசா தங்கலட்சுமி (வயது 50)

வல்லிபுரம் விவேகானந்தன் (வயது 60)

மான்பாலன் கிருத்திகா (வயது 12)

செழியன் பிரதீபன் (வயது 14)

தேவன் சியாமளா (வயது 11)

காந்தி மரிஸ்ரலா (வயது 15)

சண்முகம் தர்சன் (வயது 14)

மருதன் கனியின்பன் (வயது 10)

கேசவன் தேவநாயகி (வயது 29)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரின் பெயர் விபரம் கிடைக்கப்பெறவில்லை.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.