அனைத்துலக நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்படாமலேயே நிதி உதவிகளை பெறுவோம்: சரத் அமுனுகம

அனைத்துலக நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்று அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி உதவிகள் எதனையும் பெறும் நோக்கம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இல்லை என்று அந்நாட்டின் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்த அமைச்சர் சரத் அமுனுகம, அனைத்துலக நாணய நிதியம் வழமை போன்று நிதி உதவிகளை வழங்கவுள்ளது. அது தொடர்பாக தற்போது அவர்கள் பரிசீலிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

நிதி உதவிகளை வழங்குவது தொடர்பாக அனைத்துலக நாணய நிதியம் சிறிலங்கா அரசாங்கதிற்கு நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை. போரை நிறுத்துவது உட்பட 17 நிபந்தணைகளுக்கு அரசாங்கம் உடன்பட்டுள்ளது எனக் கூறப்படும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை. அது ஐக்கிய தேசியக் கட்சியின் பொய்யான பரப்புரை என்றும் அமைச்சர் சரத் அமுனுகம மேலும் விளக்கமளித்தார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.