ஜி 20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் பலி

வீரகேசரி இணையம் 4/2/2009 12:17:52 PM – லண்டனில் இன்று ஆரம்பமான ஜி 20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் லண்டன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தின் போது லண்டன் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள உலக பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்க ஜனாதிபதி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் லண்டனின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கலந்துகொண்ட 63 ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உட்பட பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து இவ் ஜி20 மாநாட்டில் பராக் ஒபாமா கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. E-mail to a friend

Source & Thanks : virakesari

Leave a Reply

Your email address will not be published.