‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (02.04.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள் உட்பட 39 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கணைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லெறி, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 17 சிறுவர்கள் உட்பட 39 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

கொல்லப்பட்டவர்களினதும் காயமடைந்தவர்களினதும் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

முல்லைத்தீவில் மோதல்கள் காரணமாக காயமடைந்து கப்பல் மூலம் திருமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் 46 பேரும் புல்மோட்டை தற்காலிக வைத்தியசாலையில் 14 பேருமாக இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி ஜி.ஞானகுணாளன் தெரிவித்துள்ளார்.


முல்லைத்தீவிலிருந்து காயமடைந்த நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் இதுவரை 6597 பேர் திருகோணமலைக்கு கப்பல் மூலம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இவர்களிலேயே சிகிச்சை பலனின்றி 60 பேர் உயிரிழந்துள்ளனர்.


இது குறித்து ஞானகுணாளன் மேலும் தெரிவித்த ஞானகுணாளன் முல்லைத்தீவில் இருந்து இதுவரை 16 தடவைகள் காயமடைந்தவர்கள் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டனர். திருகோணமலை வைத்தியசாலைக்கு 3635 பேரும் புல்மோட்டைக்கு 2962 பேரும் அழைத்துவரப்பட்டனர். இவர்களில் காயமடைந்தவர்களுக்கு உதவிபுரிவதற்கு வந்தவர்களும் அடங்குவர்.


திருகோணமலை பொது வைத்தியசாலையில் 10 தடவைகளில் அழைத்து வரப்பட்டோரில் 46 பேர் உயிரிழந்தனர். இதேபோல் 14 பேர் புல்மோட்டை வைத்தியசாலையில் மரணமாகினர். 16வது தடவையாக அழைத்து வரப்பட்டவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி இவ்வாரம் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3 பெண்களும் ஒரு குழந்தையும் ஆணொருவரும் அடங்குவர்.


இறுதியாக 164 ஆண்களும் 227 பெண்களும் கப்பல் மூலம் முல்லைத்தீவில் இருந்து அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 60 பேர் 8 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளாவர். 8 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் 54 பேரும் இறுதியாக அழைத்து வரப்பட்டவர்களில் அடங்குவார்கள்.


திருகோணமலை வைத்தியசாலையில் தற்போது 254 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 128 பேர் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சையை அடுத்து வவுனியா, பதவியா போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை மாநாட்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பல நிறுவனங்கள் உள்ளிட்ட 300 உள்நாட்டு, வெளிநாட்டு அரசசார்ப்பற்ற நிறுவனங்கள் மற்றும் 4 ஐரோப்பிய நாடுகள் என்பன இலங்கையில் இடம்பெறும் மோதல்களை நிறுத்துவதற்காக 28 நாட்களாக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இவ்வாறான பெரும் எண்ணிக்கையிலான அமைப்புகள், நாடொன்றில் நடைபெறும் இராணுவ நடவடிக்கை நிறுத்தும் முனைப்புகளை மேற்கொள்ளவில்லை.


இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு தன்னார்வ அமைப்புகளின் பெருபாலானவை விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புகளை கொண்டிருந்த நிறுவனங்கள் எனவும் அந்த சிங்கள நாளிதழ் மேலும் கூறியுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எங்கிருந்தும் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை. தற்காலிகமானதொரு போர் நிறுத்தத்தை அது ஆகக்குறைந்தது ஒரு மணிநேரமாக இருப்பினும் கூட அரசாங்கம் மேற்கொள்ளாது. இந்நிலையில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடனோ அல்லது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டோ சரணடைவதை தவிர வேறு வழி இல்லை என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.


தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இது குறித்து அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், யுத்தத்தின் மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நடவடிக்கை தற்போது 95வீதமளவு நிறைவடைந்துள்ளது. படிப்படியான வெற்றிகளுக்கு மத்தியில் போரின் இறுதித் தருணத்தை படையினர் எட்டியுள்ளனர். போரின் மூலம் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று கருத்துக்களை வெளியிட்ட தேசிய மற்றும் சர்வதேஅமைப்புக்களும் இதனை இன்று ஏற்றுக் கொண்டுள்ளன.


புலிகளுடன் அரசாங்கம் தற்காலிகப் போர் நிறுத்தத்தினை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றது என்று பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். இதன்மூலம் அவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அறிந்திருக்கவில்லை என்பது புலனாகிறது. உண்மையில் போர் நிறுத்தத்துக்கும் தற்காலிகப் போர் நிறுத்தத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. தற்காலிகப் போர் நிறுத்தமானது போர் இடம்பெறும் நாடுகளில் பொதுமக்களின் நலன் கருதி அடிக்கடி மேற்கொள்ளப்படும். இதனை எமது அரசாங்கமும் கையாண்டது.


வன்னியில் சிக்குண்டுள்ள அப்பாவிப் பொதுமக்களை வெளியேற்றுமாறு கோரி அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முப்படைத் தளபதிகளின் ஆலோசனையின் பேரில் 48 மணித்தியாலங்கள் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இருப்பினும் இதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இனி ஒருபோதும் ஒரு மணித்தியாலத்துக்கேனும் யுத்த நிறுத்தத்தினைக் கடைப்பிடிக்க அரசாங்கம் தயாரில்லை. போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனும் நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம்.


வன்னியில் சிக்குண்டு அல்லல்படும் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் மனப்பூர்வமாக நினைத்தால் ஆயுதங்களை கீழே வைத்தேனும் அல்லது ஆயுதங்களுடனேனும் அவ்வியக்கத்தினர் சரணடைய வேண்டும். அவ்வாறு அவர்கள் ஆயுதங்களுடன் சரணடைவார்களாயின் அவர்களது ஆயுதங்களைக் களைவதற்கு அதன் பின்னர் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.


இவ்வாறில்லையெனின் பாதுகாப்பு வலயத்துக்குள் சிக்குண்டுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதியளிக்க வேண்டும். அவ்வாறு அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவது உணரப்பட்டால் பாரிய தாக்குதல்களை நடத்துவதை படையினர் தவிர்த்துக்கொள்வர். இவ்வாறான கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் படையினர் தாக்குதல்களைத் தவிர்த்துள்ளனர் என்பதை அனைத்துத் தரப்பினரும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.


எனவே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் குழுக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சிக்குண்டுள்ள பொதுமக்களை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கிழக்கில் காத்தான்குடியில் இருந்து வெளிவரும் வாரந்தப் பத்திரிகையான வாரஉரைக்கல் என்ற பத்திரிகையின் ஆசிரியர் புவி எனப்படும் எம்..றஹ்மத்துல்லாஹ் New;W இரவு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

அஹ்பர் ரவுன் புதிய காத்தான்குடி என்ற முகவரியை உடைய இவர் தனது வீட்டில் தங்கியிருந்தபோது New;W இலங்கை நேரம்இரவு 10.45ற்கு இனம்தெரியாத நபர்களின் கடுமையான தாக்குதலுக்கும் கத்தி வெட்டுக்கும் இலக்காகி படுகாயம் அடைந்த நிலையில் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இரவு 11.45 அளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

03.09.2005ல் இருந்து வெளிவரும் இந்தப் பத்திரிகை அரசாங்க மற்றும் அரசாங்க சார்புடையவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் என அனைத்து தரப்பினரின் ஊழல் நடவடிக்கைகளையும் வெளிக் கொணர்வதில் கணிசமான பங்களிப்பை செய்து வந்தது.

இந்த நிலையில் கிழக்கில் வெளிக்கொணரப்படாத பல விடயங்களை துணிந்து எழுதிக்கொண்டிருந்த இன்னும் ஒரு பத்திரிகையாளரும் அடித்து உதைக்கப்பட்டு வெட்டப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வடக்குகிழக்குப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தென்பகுதிக்கு வந்துள்ள தமிழர்களை இணையத் தளத்தின் மூலமாகப் பதிவு செய்து கொள்வதற்கான நடவடிக்கையை சிறிலங்காவின் காவல்துறை இன்று தொடங்கப்படவுள்ளது.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்துக்கான இணையத்தளம் இன்று வியாழக்கிழமை தொடங்கப்படவிருக்கும் அதேவேளையில் இதற்கான நடமாடும் சேவைப் பிரிவு ஒன்றும் இன்று செயற்படத் தொடங்கும் என காவல்துறையின் செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் யோசனைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி தென்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் இணையத்தளத்தில் தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இதற்கான இணையத்தளத்தை தொடங்கும் நிகழ்வு வெலிக்கடையில் உள்ள மகிந்தராம விகாரையில் இன்று பிற்பகல் 4:30 நிமிடத்துக்கு நடைபெறவிருக்கின்றது.
சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்னவால் இந்த இணையத்தளம் தொடங்கி வைக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான சிறப்பு நடமாடும் சேவையும் செயற்படத் தொடங்கும் . இந்த நடமாடும் சேவை தென்பகுதியில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பிட்ட காலங்களில் தமது சேவையை மேற்கொள்ளும் எனவும் அக்காலப் பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் தம்மைப் பதிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடமாடும் சேவையில் காவல்துறையின் குழு ஒன்று பணியில் ஈடுபட்டிருக்கும் எனவும் , ஒவ்வொரு பகுதியாகச் சென்று அந்தப் பகுதியிலுள்ள தமிழர்களின் விபரங்கள் அனைத்தும் இதில் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கையின் வடபகுதியில் அரசாங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக பாரியளவு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக தென் ஆசிய ஆய்வாளரும், எழுத்தாளருமான அப்ரடிம் முகர்ஜீ தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச மனிதாபிமான சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்ட மா அதிபர் பதவியில் கூட அரசியல் மயமாக்கல் காணப்படுவதாகவும், புதிய சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஜனாதிபதிக்கு வேண்டப்பட்டவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் பிரதம நீதியரசராக அவரை பதவி உயர்த்தும் நோக்கில் இந்த சட்ட மா அதிபர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச முதன்மையாளர்கள் குழு வெளியேறியமை, இலங்கைக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்திக் கொண்டமை உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களை அரசின் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களாக முகர்ஜீ வரிசைப் படுத்தியுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தைப் போன்றே தமிழீழ விடுதலைப் புலி அமைப்பும் பல்வேறு உரிமை மீறல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது கட்டுப்பாட்டில் உள்ள சிவிலியன்கள் மீது பல்வேறு அழுத்தங்களை விடுதலைப் புலிகள் பிரயோகித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவிலியன்கள் சுதந்திரமாக இடம்நகரக்கூடிய உரிமையை புலிகள் தொடர்ந்தும் மறுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர் போராளிகளை தமது போராட்டத்தில் ஈடுபடுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு விஜயம் செய்து .நா. அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சிவில் , இராணுவ அதிகாரிகளையும் சந்தித்து, நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.


அத்துடன், வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்துள்ள மக்களின் இடைத்தங்கல் முகாம்களையும் பார்வையிட்டு, நிலைமைகளை நேரடியாகவே அவதானித்துள்ளார்.


நேற்றுக் காலை வவுனியாவுக்கு விஜயம் செய்த அவர், பின்னர் அங்கிருந்து மன்னாருக்குமு விஜயம் செய்துள்ளார். அங்கு மன்னார் அரசாங்க அதிபரைச் சந்தித்ததுடன், இடம்பெயர்ந்த மக்ககள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களையும் பார்வையிட்டதன் பின்னர் கொழும்பு திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, இலங்கைக்கான பிரித்தானிய பிரதி தூதரும் நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்து யு.என்.எச்.சி.ஆர். நிறுவன அதிகார்pகளைச் சந்தித்ததுடன், வவுனியா அரச அதிபரையும் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியுள்ளார்.


இதேவேளை செக் குடியரசின் இந்திய மற்றும் இலங்கைக்கான இராணுவ இணைப்பாளர் கேணல் ஜி. ஹொக்கர் நேற்று பலாலி விமானப்படைத் தளத்திற்கு சென்று இலங்கை விமானப்படையினருடன் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கடும் பாதுகாப்புக்கு மத்தியில் யாழ். நகர் மற்றும் யாழ். பொது நூலகம் ஆகியவற்றிற்கும் அவர் விஜயம் செய்துள்ளார்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவில் காயமடைந்த நிலையில் அழைத்து வரப்பட்ட நோயாளிகள் பலருக்கு வெடிகுண்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் அவயவங்களை துண்டிக்க வேண்டிய பரிதாபநிலை நிலவுவதாக செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு கவலை தெரிவித்துள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் சத்திரசிகிச்சை நிபுணர் மார்ட்டின் ஹேர்மன் இதனைத் தெரிவித்தார்.

செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் உத்தியோகபூர்வத் தகவல் அறிக்கையில் அவரது பேட்டி வெளியாகியுள்ளது. திருகோணமலைக்கு அழைத்து வரப்படும் இந்த நோயாளர்கள் மிகவும் பலவீனமான நிலையில் காணப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் பொதுமக்கள் சிக்குண்டுள்ள பகுதிகள் மீது குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதை இலங்கை அரசு நிறுத்தினால், அதன் பொருளாதார நெருக்கடிகளுக்கு சர்வதேச சமூகம் உதவும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் கோடி காட்டியுள்ளனர்.
இதன் மூலம் இலங்கை அரசு உலகப் பொருளாதாரத்துடன் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுமக்கள் சிக்குண்டுள்ள பகுதிகள் மீது குண்டுத் தாக்குதல்களை இலங்கை அரசு நிறுத்தினால் , அதற்கு மேலதிக உதவிகள் வழங்கப்படலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரியொருவர் இன்னர் சிட்டி பிரஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
ஆடைத் தொழிற்துறையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான திறமைவாய்ந்த தொழில்துறை இலங்கையிடம் உள்ளது என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் விடுதலைப் புலிகளுக்கு அவமானம் ஏற்படாத வகையில், பொதுமக்களை அங்கிருந்து எவ்வாறு வெளியேற்றுவது என்பது பற்றியும், விடுதலைப் புலிகளை அதற்கு இணங்கச் செய்வது பற்றியும் ஐக்கிய நாடுகள் சபை சிந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
இதேவேளை, இலங்கை அரசு யுத்த நிறுத்த வேண்டுகோள்களை நிராகரித்தமை குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மிச்செல் மொண்டஸ் கருத்துக்கூற மறுத்துள்ளார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பூசாமுகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது பேரனை பார்க்கச் சென்ற 71 வயது வயோதிபப் பெண்ணான செல்லன் தெய்வானை என்பவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிய வருகிறது.


நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு பூசா முகாமிற்கு சென்ற வயோதிபப் பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.


கொழும்பு கதிரேசன் வீதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த இவர் 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது பேரனைப் பார்வையிடுவதற்காக வாரம்தோறும் பூசா முகாமுக்குச் சென்று வந்துள்ளார். இதேபோல் நேற்று முன்தினம் சென்றபோதே இவர் காணாமல் போயுள்ளார்.


இவர் காணாமல் போயுள்ளமை தொடர்பாகக் காவல்நிலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதேவேளை முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் டி கேம்ப், கல்முனைக்குடி புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு பிள்ளையின் தந்தையான ஏ. மரிக்கார் றிக்காஸ் என்பவரை சிவில் உடையில் வந்தவர்கள் துப்பாக்கி முனையில் கடந்த 25.02.2009 அன்று கடத்திச் சென்றுள்ளனர்.


இவர் கடந்த 19 வருடங்களாக முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார்.


இவர் கடத்தப்பட்டது குறித்து இவரது மனைவியான திருமதி றிப்பாஸ்னா மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்ப பயிற்சி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

படையினர் தம்மால் இயன்ற அனைத்தையும் தியாகம் செய்தே இந்த யுத்தத்தில் வெற்றிப் பெற்றுள்ளனர்;, இதனால் யுத்தத்தின் வெற்றித் தொடர்பான கௌவரம் படையினருக்கு வழங்கப்பட வேண்டும் தவிர அரசாங்கத்திற்கு அல்ல என ஜே.வீ.பீயின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார்.


கம்பஹா மாவட்டம் பியகமவில் நடைபெற்ற ஜே.வீ.பீயின் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான உயிர் தியாகங்களை செய்தே படையினர் வெற்றிகளை பெற்றனர். மேலும் பல படையினர் கண் மற்றும் கைகால்களை இழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் பலர் அங்கவீனர்களாகியுள்ளனர். இவ்வாறு படையினர் தம்மால் இயன்ற அனைத்துத் தியாகத்தை செய்துள்ளனர். இதனை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். படையினர் பெறும் வெற்றிகளுக்கு மக்கள் தம்மாலான பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமோ, அதன் ஊடாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களோ எந்த தியாகங்களை செய்யவில்லை.


இதனால் படையினர் பெற்ற வெற்றிகளை அடிப்படையாக கொண்டு, வாக்களிக்குமாறு கோரும் உரிமை அரசாங்கத்திற்கு இல்லை. இதன் மூலம் படையினரின் வெற்றி இழிவு படுத்தப்படும் எனவும் சோமவன்ஸ அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்த கிழக்கு மாகாணத்தை படையினர் முழுமையாக மீட்டெடுத்தனர். அதன் பின்னர் அங்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது. மாகாண சபையின் முதலமைச்சராக பிள்ளையான் நியமிக்கப்பட்டார்.

!!!!!!!!!!!!!!
பிள்ளையான் பிரபாகரனிடம் இருந்து பிரிந்தவர் எனினும் பிரிவினைவாதத்தில் இருந்து விலகாதவர். தற்போது அவர் அரசாங்கத்திடம் காணி அதிகாரங்களை கோருகிறார். அரசாங்கம் அவற்றை வழங்க போகிறது. அவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாயின் படையினரின் வெற்றியை மீண்டும் பிரிவினைவாத்திடம் காட்டி கொடுப்பதாகும் எனவும் ஜே.வீ.பீயின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க மேலும் கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஐரோப்பாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இயங்கி வரும் அமைப்புக்களின் கணக்கு விபரங்களை குறித்த நாடுகள் பரிசீலனை செய்ய வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆசிரியசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மோசடியான முறையில் நிதி திரட்டி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் அமைப்புக்களை பயங்கரவாத இயக்கமாக கருதி தடை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்மையில் நெதர்லாந்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் .

தீவிரவாத நடவடிக்கைகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து இந்த கருத்தரங்கின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்கள் ஐரோப்பாவில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வெறுமனே இலங்கைப் பிரச்சினையாக கருதாது அதனை ஓர் சர்வதேச பிரச்சினையாக கருத வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் ஏனைய புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புக்களாக கருதி தடை செய்யப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்கும் நிவாரணக் கப்பல்கள் குறித்து கண்காணிப்பு மேற்கொள்ள விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

வன்னி யுத்த வலயத்தில் அல்லலுறும் அப்பாவி சிவிலியன்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் பிரித்தானியாவிலிருந்து நிவாரணக் கப்பலொன்று விரைவில் இலங்கைக்கு புறப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதனைத் தவிர்க்கும் வகையில் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வணங்கா மண் என்ற கப்பலின் மூலம் மருந்துப் பொருட்கள், உணவு உள்ளிட்ட வன்னிச் சிவிலியன்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது .

எனினும், இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் கப்பல்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை , இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் குறித்த கப்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என பிரித்தானிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் அனுமதி கிடைத்ததன் பின்னர் எதிர்வரும் நாட்களில் குறித்த கப்பல் இலங்கைக்கு புறப்படும் என தெரிவிக்கப்படுகிறது .

சிவிலியன்களுக்கு நிவாரணங்கள வழங்கும் போர்வையில் வணங்கா மண் கப்பல் 2000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான பொருட்களை புலிகளுக்கு எடுத்துச் செல்ல முயற்சிப்பதாக கடற்படை அதிகாரியொருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ்நாடு செங்கல்பட்டிலுள்ள ஈழத்தமிழர் சிறப்பு முகாமிலுள்ள 4 பேர் கடந்த 30-03-2009 முதல் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர்.

செங்கல்பட்டில் ஈழ அகதிகள் சிறப்பு முகாம் ஒன்று உள்ளது. தமிழகத்தில் ஏதேனும் வழக்கில் சிக்கியிருக்கக் கூடிய ஈழ அகதிகள் , வழக்கிலிருந்து ஒட்டு மொத்தமாக விடுதலை ஆனாலோ அல்லது பிணை விடுதலைப் பெற்றாலோ அவர்கள் சிறப்பு முகாம் என்ற பெயரில் உள்ள சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
அவர்கள் வெளி உலகத்தினருடன் தொடர்பு கொள்ளவோ, வெளியே செல்லவோ முடியாது. வழக்கறிஞர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மட்டுமே அவர்களை சந்திக்க இயலும். முழுமையாக உளவுத்துறை மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்படியான சிறப்பு முகாம்கள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளன.

செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளவர்களில் நால்வர் சில மனித உரிமை கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4 நாட்களாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் பெயர்கள் வருமாறு :
நாகேந்திரன் (வயது 44) பெ மார்டின்
பாரிஸ் ராஜ் (வயது 24) பெ தேவராஜா
சுரேஸ் (வயது 29) பெ ஜெபமாலை
தயானந்தன் (வயது 52) பெ விநாயகமூர்த்தி

அவர்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்

1. வழக்கு முடிந்து வழக்கிலிருந்து விடுதலை பெற்றவர்களை தங்கள் நாடுகளுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும்.
2. 47
பேர் மீதான வழக்குகளில் இன்று வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் கடந்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர் . அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
3.
உடல்மன நலமில்லாத 8 பேர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தமிழகத்தில் உள்ள திறந்த வெளி அகதிகள் முகாம்களில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்து அவர்கள் மருத்துவ சிகிச்சைப் பெற அனுமதிக்க வேண்டும்.

மேற்கண்ட மனித உரிமை கோரிக்கைகளை முன் வைத்து சாகும்வரை பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களை, மூன்று நாட்களாகியும் எந்த அதிகாரியும் சந்திக்கவோ சிக்கலைத் தீர்க்கவோ முனையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் தெற்கில் பாரிய தாக்குதல்களை நடத்த விடுதலைப் புலிகள் இயக்கம் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதுஎன்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார எச்சரிக்கை விடுத்தார்.

இதனால் பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இக்காலப்பகுதியில் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது :

“வன்னியில் படையினரின் போர் முன்னெடுப்புக்களினால் ஆயுதம் மற்றும் ஆள் பலத்தை இழந்துள்ள விடுதலைப் புலிகள் தெற்கில் பாரிய தாக்குதல்களை நடத்தி இராணுவத்தினரை மனரீதியாக பாதிப்படையச் செய்ய முயல்கின்றனர்.

இதற்காக எதிர்வரும் உற்சவக் காலத்தை அவர்கள் பயன்படுத்தவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்பாக இருந்து புலிகளின் தாக்குதல் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அமைச்சர்களின் எண்ணிக்கையை இருபத்தைந்தாகக் குறைப்பது தொடர்பாக அமைச்சரவையில் நேற்று ஆராயப்பட் டுள்ளதாகத் தெரியவந்தது.

அமைச்சர்களின் எண்ணிக்கை நூறை யும் தாண்டி விட்டதால் ஏற்படும் நிதி நெருக்கடிகளைத்தவிர்க்கவும்

அரசுக்கு ஆதரவு வழங்கும் தேசிய முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச விடுத்துவரும் கோரிக்கையை சமாளிக் கவும் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாக அரசு ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் விரிவாக ஆராயப்பட்டுள்ளது .
அமைச்சர்களின் எண்ணிக்கையை 25ஆகக் குறைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட் டுள்ளன என நம்பகமாகத் தெரியவந்தது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள, அமைச் சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள் என இப்போது நூறுக்கும் மேற்பட்ட வர்கள் அமைச்சர்களாகப் பணிபுரிகின் றனர் என்பது தெரிந்ததே
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!
ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் மூன்றாவது அணி சார்பில் நாளை நடைபெற இருக்கும் பேரணியில் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவார் பங்கேற்க இருப்பது காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாடு செய்து கொண்டுள்ளது . ஆனால், அக்கூட்டணி சார்பில் பிரதமர் பதவி வேட்பாளராக மன்மோகன்சிங் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, சரத்பவார் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மூன்றாவது அணி சார்பில், ஒரிசா மாநிலம் புவனேசுவரில் நாளை நடைபெற இருக்கும் பேரணியில் சரத்பவார் பங்கேற்கப் போவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் இருந்து வெளியேறி மூன்றாவது அணியில் சரத்பவார் சேரலாம் என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சித் தலைவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
!!!!!!!!!!!!!!!
2009ஆ‌ம் ஆ‌ண்டு‌க்கான ம‌க்களவை‌த் தே‌ர்த‌ல் அ‌றி‌க்கையை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி செ‌ன்னை அ‌ண்ணா அ‌றிவாலயத்த‌ி‌ல் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டா‌ர். அ‌தி‌ல், இல‌ங்கை‌யி‌ல் உடனடியாக போ‌ர் ‌நிறு‌த்த‌ம் செ‌ய்ய‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், த‌மிழ‌ர்க‌ள் அமை‌தியாக வாழ வ‌‌ழிவகை செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம் த‌‌மிழக ‌மீன‌வ‌ர்களை பாதுகா‌க்க ம‌த்‌திய அரசு நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் சேது சமு‌த்‌திர கா‌ல்வ‌ா‌ய் ‌தி‌ட்ட‌த்தை ‌விரை‌ந்து முடி‌க்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

க‌ச்ச‌த்‌தீ‌வி‌ல் இழ‌‌ந்த உ‌ரிமையை ‌மீ‌ட்க ம‌த்‌திய அரசை ‌தி.மு.க வ‌லியுறு‌த்து‌ம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

தே‌சிய அள‌வி‌ல் பெ‌‌ண்க‌ள் சொ‌த்து‌ரிமை ச‌ட்ட‌‌த்தை ம‌த்‌திய அரசு கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம், ‌தே‌சிய கிராம‌ப்புற‌ ஊரக வேலை வா‌ய்‌ப்‌பு ‌உறு‌தி தி‌ட்ட‌த்த‌ி‌‌ன் மூல‌ம் செ‌ய‌ல்படு‌த்த‌ப்படு‌ம் 100 நா‌ள் வேலை வா‌ய்‌ப்பை 150 நா‌ட்களாக ம‌த்‌திய அரசு உ‌ய‌ர்‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

பொருளாதார ச‌ரி‌வினா‌ல் வேலை‌யிழ‌ந்தவ‌ர்களு‌க்கு உத‌வி‌த் தொகை வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் வருமான உ‌ச்ச வர‌ம்பை ரூ.2.5 ல‌ட்சமாக உய‌ர்‌த்த ம‌த்‌திய அரசை வ‌லியுறு‌த்துவோ‌ம் எ‌ன்று‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

நெ‌‌ல், கரு‌ம்பு கொ‌ள்முத‌ல் ‌விலையை உய‌ர்‌த்த ம‌த்‌‌திய அரசை ‌தி.மு.க. வ‌லியுறு‌த்து‌ம் எ‌ன்று‌ம் மா‌நில ப‌ட்டிய‌லி‌ல் ‌மீ‌ண்டு‌‌ம் க‌ல்‌‌வி‌த்துறையை சே‌ர்‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌ம‌‌த்‌திய அரசு கே‌‌ட்டு‌க் கொ‌ள்வோ‌ம் எ‌ன்று‌ம் தெ‌‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட, பழ‌ங்‌குடி‌யினரு‌க்கு இலவச க‌ல்‌வி வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் பொது ‌சி‌வி‌ல் ச‌ட்ட‌‌த்தை ‌தி.மு.க. எ‌தி‌ர்‌க்கு‌ம் எ‌ன்று‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
!!!!!!!!!!!!
தே.மு.தி.. மாநில துணை செயலராக இருந்த கு..கிருஷ்ணன் அக்கட்சியில் இருந்து விலகினார். நேற்று மாலை ஜெயலலிதா முன்னிலையில் அவர் .தி.மு..வில் இணைந்தார்.

1991-1996 அ.தி.மு.. ஆட்சிக் காலத்தின் போது விவசாயத்துறை அமைச்சராக இருந்தவர் கு..கிருஷ்ணன். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி `தமிழர் பூமிஎன்ற கட்சியை தொடங்கி நடத்தினார்.

2 ஆண்டுகளுக்கு முன்பாக விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் இணைந்தார். அக்கட்சியின் மாநில துணை செயலராக பொறுப்பு வகித்து வந்தார்.

கு..கிருஷ்ணன் நேற்று மாலை .தி.மு.. பொதுசெயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

இது குறித்து கு..கிருஷ்ணன் கூறுகை‌யி‌ல், விஜயகாந்த் கட்சியை நடத்தும் விதத்தில் என்னால் ஒத்துப் போக முடியவில்லை . கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து விஜயகாந்த் மத்தியில் உள்ள காங்கிரசையும், தமிழகத்தில் உள்ள தி.மு.. ஆட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் .

இப்போது தனித்து போட்டியிட்டு வாக்குகளை பிரிப்பதால், ஆளும் கூட்டணிக்கு சாதகமாகவும் , எதிர்கட்சியாக இருக்க கூடிய .தி.மு.கவுக்கு ஒரு பலவீனத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வோடும் அமைவதாக நான் கருதுகிறேன்.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய, என்னை வளர்த்த .தி.மு..வில் அந்த கூட்டணிக்கு வாக்குசிதறல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, தே.மு.தி..வில் இருந்து விலகி .தி.மு..வில் இணைந்தேன்.

13 ஆண்டுகள் வனவாசம் போன ராமர் அயோத்தியில் வந்த போது என்ன மகிழ்ச்சியை பெற்றாரோ, அதே போல போயஸ் தோட்டத்திற்குள் இன்று நான் மீண்டும் நுழைந்து ராமர் பெற்ற மகிழ்ச்சியை பெற்றே‌ன் எ‌ன்று கூ‌றினா‌ர்.
!!!!!!!!!!!!
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள .தி.மு.. கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத்து‌க்கு ‌‌பிணை கோ‌ரி அவரது மனை‌வி ச‌சிகலா செ‌ன்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர்.

சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அவ‌ர் தாக்கல் செய்துள்ள மனு‌வி‌‌ல், ‘இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என்று நாஞ்சில் சம்பத்தை கைது செய்துள்ளனர். இது சட்ட விரோதமானது. அவரை ‌‌பிணை‌யி‌ல் விடுதலை செய்யவேண்டும்என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்போது .தி.மு. பொதுச்செயலர் வைகோ ஆஜராவார் என்று தெரிகிறது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Tô_L RûXYo AjYô²ûV Uj§V EsÕû\ AûUfNo T.£RmTWm Cuß Nk§jÕl úT£]ôo.
Ød¡Vj RûXYoL°u E«ÚdÏ TVeLWYô§L[ôp AfÑßjRp HtTPdáÓm G] Uj§V AWÑ GfN¬j§ÚkRÕ. CûRVÓjÕ RûXYoLÞdÏ TôÕLôlûT A§L¬dL úYiÓm G]Üm Y#ÙßjRlThPÕ. CÕ ùRôPoTôL BúXô£lTRtLôLúY AjYô²ûV £RmTo Nk§jÕl úT£VRôLd á\lTÓ¡\Õ.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
úYiPôRYoLs ÁÕ úR£V TôÕLôl×f NhPm TôÙm GuTÕ YÚi Lôk§ ®`Vj§p ¨ìTQUô¡Ùs[Õ Guß Tô_L Uô¨Xj RûXYo CX. LúQNu á±Ùs[ôo.
CÕ Ï±jÕ ×Ru¡ZûU AYo ùY°«hP A±dûL:
“”úRNm Utù\ôÚ ©¬®û]ûVf Nk§dL úS¬Óm” Guß §p# _ýmUô Uv´j§u CUôm ×Lô¬Ùm, “” TôWRm TX ÕiÓL[ôLf £Rßm” Guß LôxÁ¬p Es[ Øl§ ØLmUÕ NÂj Lh£«u RûXYo ùULéTôÜm úT£Ùs[]o.
AÕúTôXúY “”WôUo JÚ Ï¥LôWu” Guß ØRpYo LÚQô¨§Ùm, “”Sôu JÚ CkÕYôL ©\kRRtLôL ùYhLlTÓ¡ú\u” Guß Uj§V AûUfNo ¥.Bo. TôÛÜm úT£Ùs[]o.
“”LôYpÕû\ YôL]eLû[j ¾«ÓeLs. ÕlTôd¡ HkÕeLs. Uôod£vÓLû[ ùLôpÛeLs ApXÕ E«ÚPu ×ûRÙeLs. ú_ô§TôÑûYÙm AYWÕ BsLû[Ùm ¾ojÕd LhÓeLs. C² A¥ Yôe¡d ùLôi¥ÚdL úYiPôm. §Úl© A¥ÙeLs” Guß úUtÏ YeL Lôe¡Wv RûXYo H.©.H. L²Lôu ùN[j¬ úT£VRôL _]Y¬ 14-m úR§ Tj§¬ûLL°p ùNn§ YkÕs[Õ.
G]úY úR£V TôÕLôl×f NhPm úRûYlTÓmúTôÕ ReLÞdÏ úRûY«pXôRYoLs ÁÕ TôÙm NhPm GuTÕ YÚi Lôk§ ®`Vj§p ¨ìTQUô¡Ùs[Õ Guß CX. LúQNu á±Ùs[ôo.
!!!!!!!!!!!!!!!!!!!!
Ru ÁÕ ©\l©dLlThÓs[ úR£V TôÕLôl× NhPjûR WjÕ ùNnVd úLô¬ Ck§Wô Lôk§ úTWàm Tô_L úYhTô[ÚUô] YÚi Lôk§ EfN ¿§Uu\j§p ×Ru¡ZûU Uà RôdLp ùNnRôo.
CkR UàûY RôdLp ùNnV AàU§ A°jR RûXûU ¿§T§ úL.´. TôX¡ÚxQu, Uà ÁÕ Cuß ®NôWûQ SûPùTßm Guß A±®jRôo.
Cj RLYûX YÚi Lôk§ Nôo©p B_WôÏm YZdL±Oo Nk¾l Léo á±]ôo.
YÚi Lôk§ ÁÕ EjRWl ©WúRN AWÑ úR£V TôÕLôl× NhPjûRl ©\l©jRÕ RY\ô]Õ. E¬V SûPØû\Ls HÕm ©uTt\lTPôUp AYNW, AYNWUôL CkRf NhPm ©\l©dLlThÓs[Õ Guß Uà®p á\lThÓs[Õ.
R]Õ ULu YÚi Lôk§«u E«ÚdÏ BTjÕ Es[Õ. AYÚdÏ HRôYÕ úSokRôp ARtÏ Lôe¡Wv Lh£Ùm UôVôY§ÙúU ùTôßlúTtL úYiÓm Guß YÚiLôk§«u RôÙm Øu]ôs Uj§V AûUfNÚUô] úU]Lô Lôk§ á±]ôo.
!!!!!!!!!!!!!
லோக்சபா தேர்தலில் சிதம்பரம் (தனி), விழுப்புரம ஆகிய தொகுதிகளில் தனியான, ஒரே சுயேச்சை சின்னத்தில் போட்டியிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது .

இதைத்தொடர்ந்து, சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று காலை சென்னை வேளச்சேரி தாய்மண் அரங்கத்தில் நடைபெற்றது
நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் ஒரே சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும்.

– விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளரை தேர்வு செய்யும் முழு அதிகாரம் தலைவருக்கு வழங்கப்படுகிறது .

விடுதலை சிறுத்தைகளின் தேர்தல் அறிக்கையும், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான விடுதலை சிறுத்தைகளின் வேட்பாளரும் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலிலும் திருமாவளவனின் கட்சி சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!!!!
பல சிக்கல்கள் இருந்த போதிலும் வியாழனன்று நடக்கும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு, தற்போதுள்ள பொருளாதார சூழலை எப்படி கையாள்வது என்பது குறித்து பெரிய அளவிலான கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதை எதிரொலிக்கும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தின் போது சிக்கலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று எதிர்பார்ப்பதாக லண்டனில் இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒமாமாவும், பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனும் கூறினர்.
நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகள் மிகைப்படுத்தப்படுவதாக அவர்கள் கருத்து வெளியிட்டனர்.
பிறகு சீன அதிபர் ஹூ ஜூண்டாவை ஒபாமா சந்தித்தார். இரு தலைவர்களும், பொருளாதார தற்காப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட ஒத்துக்கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது .
வளரும் நாடுகளின் மூலதனப் பற்றாக் குறையைப் போக்க சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு அவர்கள் உதுவுவார்கள் என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!
முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் , போருக்கு எதிராக செயல்படுவர்கள் என பல தரப்பைச் சேர்ந்த ஆர்பாட்டக்காரர்கள் ஜி 20 மாநாடு நடக்கும் லண்டன் நகரில் குழுமியுள்ளனர்.
ஆர்பாட்டக்கார்களுக்கும் கலவரத் தடுப்பு போலீசுக்கும் இடையே இங்கிலாந்து மத்திய வங்கிக் கட்டிடத்துக்கு அருகே தள்ளுமுள்ளு இடம்பெற்றது.
பிரிட்டிஷ் அரசால் நிதி அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட ராயல் போங்க் ஆப் ஸ்காட்லாந்தின் கிளை அலுவலகத்தின் ஜன்னல்களை உடைத்துக் கொண்டு அதனுள் சிலர் புகுந்தனர்.
இவர்கள் பிறகு அப்புறப்படுத்தப்பட்டனர். போலீஸ் சீருடை அணிந்துகொண்டு கவச வாகனம் ஒன்றில் வந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். நிலைமையை சமாளிக்க 2500 போலீஸ் அதிகாரிகள் கூடுதலாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர
!!!!!!!!!!!!!!!!!!!!
ஜி 20 மாநாட்டின் வெற்றி என்பது, வங்கி முறைமைகளை தூய்மைப்படுத்துவதற்கான தலைவர்களின் அர்ப்பணிப்பின் மூலமே கணிப்பிடப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனரான டொமினிக் ஸ்டாரஸ் கான் தெரிவித்துள்ளார்.
வங்கியியலுக்கான புதிய ஒழுங்கு விதிகளை ஏற்படுத்துவதிலும், மற்றும் பிரச்சினைக்குரிய சொத்துக்கள் தொடர்பில் வங்கிகளின் வரவு செலவுக் கணக்கை சரி செய்வதிலும், ஜி 20 மாநாடு உடன்பாடு காண வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உலக நிதித்துறையின் தற்போதைய பிரச்சினைகளை முன் கூட்டியே கணிப்பதில், தாமதம் காட்டியதில் , தனது பங்குப் பொறுப்பை சர்வதேச நாணய நிதியம் ஏற்றாக வேண்டும் என்றும் கான் அவர்கள் குறிப்பிட்டார
!!!!!!!!!!!!!!!!!
இங்கு லண்டனில் சந்தித்த அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் டிமித்ரி மெட்வெடேவ் அவர்களும், அணு ஆயுதங்களை குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பது என்று உடன்பட்டுள்ளனர்.
இது தொடர்பான முன்னேற்றங்களை எதிர்வரும் ஜூலையில் சமரசப் பேச்சுவார்த்தையாளர்கள் அறிக்கையிடுவார்கள் என்றும், தற்போதைய ஒப்பந்தம் டிசம்பர் மாதத்தில் முடிவடைவதற்கு முன்னதாக புதிய உடன்பாடு ஒன்றை அவர்கள் உருவாக்குவார்கள் என்றும் அவர்கள் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அணு ஆயுதங்களை மூன்றில் ஒரு பங்கால் குறைக்க இரு தரப்பும் உடன்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!
பூமியில் உயிரினங்களின் எண்ணிக்கை அளவுகடந்துவிட்டதாக அமெரிக்க நுண்கூற்று உயிரியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
டாக்டர். ஃபெடறோஃப் அவர்கள், 2007 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசுத்துறைக்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கிறார்.
ஒபாமாவின் புதிய நிர்வாகத்தில், ஹிலாரி கிளிங்டனின் கீழ் அவர் பணியாற்றுகிறார்.
நுண்கூற்று உயிரியல் பேராசிரியரான அவர், பிபிசி நிகழ்ச்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் , எமது புவி மண்டலம், ஏற்கனவே அளவுக்கு அதிககமான உயிரினங்களைக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
” எமது பூமி எந்த அளவுக்கு தாக்குப் பிடிக்க முடியுமோ, அந்த எல்லையை நாம் ஏற்கனவே தண்டிவிட்டோம் என்று நான் நினைக்கிறேன். எம்மிடம் இன்னமும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலங்களையும், குறிப்பாக தண்ணீரையும், நாம் சிறப்பாக நிர்வகிக்க, சமாளிக்க வேண்டும் என்றால், நாம் தொடர்ச்சியாக எமது சனத்தொகையை குறைத்தாக வேண்டும். இதற்கு மேலும் சனத்தொகை வளர்ச்சியை தாக்குப் பிடிக்க எமது பூமியினால் முடியாது என்றார் அவர்.
சிறப்பான நில முகாமைத்துவம் என்பது, மரபணு ரீதியில் மாற்றியமைக்கப்பட்ட உணவுப்பொருட்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். – இந்த விடயத்தில் பல விமர்சகர்கள் ஏற்கனவே முரண்பட்டிருக்கிறார்கள்.
புவியை வெப்பமடையச் செய்யும் கரியமில வாயுவின் வெளியேற்றத்தில் தமக்குள்ள பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக்ககொண்டு விட்டதா என்று கேட்கப்பட்டதற்கு பதிலளித்த டாக்டர். ஃபெடறோஃப் , இன்னமும் இல்லை என்று கூறியுள்ளார்.
இருந்த போதிலும், இந்த விடயத்தில் உண்மையில் புரையோடிப்போயிருக்கின்ற பிரச்சினையை நாம் எவரும் சரரியாக விவாதிக்கவில்லை என்றும், எதிர்வரும் மாதங்களில் இதுவிடயத்தில் அமெரிக்கா யதார்த்தமான ஒரு கொள்கையை முன்வைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published.