ஏறுகிறது பங்கு சந்தை

மும்பை : பங்கு சந்தையில் இன்று காலையில் இருந்தே நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பங்கு சந்தை உயர்ந்து வருகிறது.

சென்செக்ஸ் 10,300 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 3,100 புள்ளிகளுக்கு மேலும் சென்றிருக்கிறது. காலை 10.30 மணி அளவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 416.96 புள்ளிகள் உயர்ந்து 10,318.95 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 124.45 புள்ளிகள் <உயர்ந்து 3,184.80 புள்ளிகளாக இருந்தது. நிதித்துறை, ஆயில் அண்ட் கேஸ், மெட்டல், டெக்னாலஜி பங்குகள் பெருமளவில் வாங்கப்படுகின்றன. சுஸ்லான் எனர்ஜி, ரிலையன்ஸ் இன்ஃரா, ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் கேப்பிட்டல், பிஎன்பி, எல் அண்ட் டி, எஸ்பிஐ, டாடா ஸ்டீல், ஹெச்டிஎப்சி, ஆக்ஸிஸ் பேங்க், யூனிடெக், டிஎல்எஃப், ஹெச்டிஎஃப்சி பேங்க், பெல், செய்ல், டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் பங்குகள் விலை உயர்ந்திருக்கின்றன. நிப்டியில் இருக்கும் 50 முக்கிய நிறுவனங்கள் எல்லாமே விலை உயர்ந்துதான் இருக்கின்றன. மிட்கேப் வரிசையில் இருக்கும் யூகோ பேங்க், ஐஎஃப்சிஐ,யெஸ் பேங்க், வோல்டாஜ், பஜாஜ் ஹிண்டுஸ்தான், ஆப்டோ சர்க்யூட்ஸ், ஆர்என்ஆர்எல், பர்ஸ்ட்சோர்ஸ், ஏஜிபி ஷிப்யார்ட், மற்றும் மெர்காடோர் லைன்ஸ் ஆகிய நிறுவன பங்குகளும் விலை உயர்ந்திருக்கின்றன.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.