செக். குடியரசின் இராணுவ அதிகாரி யாழ்ப்பாணம் விஜயம்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கான செக். நாட்டின் இராணுவ அதிகாரியான கேனல் ஜின்ரிச் ஹேக்கர் நேற்று யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்திற்கு விஜயம் செய்தார்.
அவர் அங்கு இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இதன் பின்னர் அவர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் யாழ்ப்பாண நகருக்கு அவர் விஜயம் செய்தார். அங்கு பொது வாசிகசாலைக்கும் அவர் சென்று பார்வையிட்டார்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாம் யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது இலங்கைப்படையினர் பலாலி விமானத்தளத்தில் இருந்து தம்மை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.

எனினும் நிலைமை மேம்பட்டிருப்பது சந்தோசமளிக்கிறது என ஹேக்கர் குறிப்பிட்டார்

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.