முல்லைத்தீவு நிலவரம் தொடர்பாக செஞ்சிலுவைச் சங்க, ஐ.நா. பிரதிநிதிகளுடன் ஆராய்வு

முல்லைத்தீவில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை கொண்டு செல்வது குறித்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் கொழும்பில் இன்று புதன்கிழமை கூடி ஆராய்ந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் பின்னர் திடீரென பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுத்திருந்தது.

இந்நிலையில் நிவாரணப் பொருட்களை அங்கு கொண்டு செல்வது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளையில் மருந்து மற்றும் நிவாரணப் பொருட்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் உதவியுடன் கொண்டு செல்ல வேண்டும் என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் காயமடைந்துள்ள மக்களை புல்மோட்டைக்கு கொண்டு வருவதற்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் செல்லும் கப்பலில் தேவையான மருந்துப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த மருந்துகள் போதுமானவை அல்ல என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் கூறுகின்றது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.