‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (01.04.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

நோர்வேயின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளதென இலங்கை அரசாங்கம் அந்நாட்டு தூதுவரின் ஊடாக அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளர் ஜோன் ஹோல்ம்ஸிற்கும், புலிகளின் சர்வதேச பிரதிநிதி குமார் பத்மநாதனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த நோர்வே அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறித்தே அரசாங்கம் அதிருப்தியடைந்துள்ளது.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் டோர் ஹார்ட்டெமை அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திடம் கலந்தாலோசிக்காமல் இவ்வாறான ஓர் சந்திப்பை நோர்வே ஏன் ஏற்பாடு செய்ததென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நோர்வேத் தூதுவரின் செயற்பாடுகள் குறித்தும் வெளிவிவகார அமைச்சு ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தை உதாசீனம் செய்து இவ்வாறான கூட்டங்களை ஏற்பாடு செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாதென வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது .

இதேவேளை, நோர்வே தூதுவரை மீண்டும் நாட்டிற்கு அழைத்துக் கொள்ளும் வரையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக ஜே.என்.பி.யின் தலைவா விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதன் விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகஸ்தர் எனவும் இவ்வாறான நபருடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த நோர்வேக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமளவிற்கு அரசாங்கத்திற்கு முதுகெலுப்பு இருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தூதுவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதில் அர்த்தமில்லை என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் இந்திய எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய் போலிப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பகிரங்க இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் அனாயாசமான கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக அருந்ததி ராய் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற வரும் இனச் சுத்திகரிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார் .

அருந்ததி ரோயின் அண்மைய செய்திக் கட்டுரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், சிவிலியன்களை தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வாய்ப்பாக அமையும் எனவும் இலங்கைத் தூதுவராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிங்களப் பெரும்பான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் 54 வீதமான தமிழ் மக்கள் சிக்கல்கள் எதுவுமின்றி வாழ்ந்து வருவதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய முதல் செயலாளர் சுகேஸ்வர குணரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டங்களை புலிகள் நிராகரித்து வந்துள்ளமை நோக்கப்பட வேண்டியதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவிலியன் நலனை முதன்மை நோக்காகக் கொண்டே வடக்கில் படையினர் மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்திய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றிலேயே இந்தக் கருத்தை தமிழக மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இந்தியாவின் முன்னணித் தொலைக்காட்சி நிறுவனமான என்.டி.ரி.வி. நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பிலேயே இந்தப் பெறுபேறுகள் வெளியாகியிருக்கின்றன.
இந்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளை ஆதரிக்க வேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலளித்தவர்களில் 66 வீதமானவர்கள்ஆம்எனக் கூறியிருக்கின்றனர் என நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட என்.டி.ரி.வி.யின் இந்த கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கின்றது .
இதேவேளையில் தமிழக அரசியல் விவகாரங்களைப் பொறுத்தவரையில் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு , முதலமைச்சர் கருணாநிதிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவி ஜெயலலிதாவுக்கும் இடையில் கடுமையான நேரடிப் போட்டி இருக்கும் என்பது போலவும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கின்றது.
தற்போதைய நிலையில், கருணாநிதிக்கு 41 வீதமானவர்களும் ஜெயலலிதாவுக்கு 40 வீதமானவர்களும் ஆதரவளித்திருப்பதாக என்.டி.ரி.வி.யின் இந்த கருத்து கணிப்பு முடிவு காட்டுகின்றத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!*

.நா.வின் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் .நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் முகமாக தமிழீ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில்,
எமது பகுதியில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்களும் மனிதாபிமான உதவிகளும் சென்றடையும் வண்ணம் வன்னியில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்கா அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கூட்டாக விடுத்துள்ள வேண்டுகோளை எமது அமைப்பு வரவேற்கின்றது .

உடனடியான போர் நிறுத்தம் வேண்டும் என்ற எமது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். ஒவ்வொரு தடவையும் நாம் இதனைக்கூறுவதும் உங்களுக்கு தெரிந்ததே.

ஆனால் , அரசு அதனை நிராகரித்து வருகின்றது. போர் நிறுத்தத்தை நிராகரிப்பதுடன் சுதந்திரமான பத்திரிக்கையாளர்களும், மனிதாபிமான அமைப்புக்களை சேர்ந்தோரும் எமது பகுதிக்கு வந்து கண்காணிப்பில் ஈடுபடுவதையும், உதவி புரிவதையும் அரசு தடுத்தும் வருகின்றது.

அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளை மதித்து நடக்க வேண்டும் என எமது அமைப்பிடம் இருந்து எதிர்பார்க்கும் உலகம், அதே அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளை மதித்து நடக்குமாறு தன்னை ஜனநாயக நாடாக கூறிக்கொள்ளும் சிறிலங்கா அரசை கோருவதுடன் நாள் தோறும் எறிகணை வீச்சுக்களினால் கொல்லப்படும் மக்களின் மனித அவலங்களை நிறுத்தவும் முன்வர வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு என்னும் வரையறைக்குள் அடங்கவில்லையா? சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களை அனைத்துலக சமூகம் நிறுத்துவதற்கு முன்வராத போது அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பிற்கு துணை போவதாகவே நாம் கருத முடியும்.

சிறிலங்கா .நா. சபையில் உறுப்புரிமையுள்ள நாடு . ஆனால் அதன் உறுப்புரிமையுள்ள நாடு ஒன்று நாள் தோறும் ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவிப்பது தொடர்பாக .நா. அதிக கவனம் கொள்ளவில்லை. ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளும், கர்ப்பிணி தாய்மார்களும் எறிகணை வீச்சுக்களினாலும், பட்டினியாலும் நாள்தோறும் இறப்பை சந்தித்து வருகின்றனர்.

சிறிலங்காவில் இருந்து தமிழ் மக்களை முழுவதுமாக இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையையே அரசு மேற்கொண்டு வருகின்றது.

சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்க்கும் முகமாகவே தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். எமது அமைப்பும் அவ்வாறே உருவாகியது ஆனால், உலகம் எமது அபிலாசைகளை இன்றுவரை புரிந்து கொள்ளவில்லை.

தமிழ் மக்கள் தமது அடிப்படை மனித மற்றும் பொது உரிமைகளுக்காகவும், சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், அடக்குமுறையான சட்டங்களில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவுமே போராடி வருகின்றனர்.

தற்போது சிறிலங்கா அரசாங்கத்தின் அழித்தொழிப்பு போரில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கும் , தமது வாழ்க்கையை வாழ்வதற்கும், பிள்ளைகளை காப்பாற்றவும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால், அனைத்துலக சமூகம் அடிப்படை காரணங்களை புரிந்துகொள்ள மறுப்பதுடன் , ஆயுதங்களை கீழே போடுமாறு மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றது. எதற்காக? நாட்டில் உள்ள தமிழ் இனத்தை அழித்த பின்னர் சிங்கள மக்கள் எஞ்சிய மக்களை அடக்கி ஆட்சி புரிவதற்காகவா?

வன்னியில் இருந்து மக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. அனைத்துலக சமூகம் தமிழ் மக்களின் நிலையில் இருந்தால் அவர்கள் விருப்பத்துடன் அரசின் பாதுகாப்பு தேடி செல்வார்களா?

அரச படையினரின் எறிகணைத்தாக்குதலில் உங்களின் ஒரு பிள்ளை கொல்லப்பட்ட பின்னர் மறுநாள் ஏனைய பிள்ளைகளுடன் நீங்கள் அதே அரசின் பாதுகாப்பு தேடிச் செல்வீர்களா ?

.நா.வின் நிதி உதவியில் இயங்கிவரும் தங்கும் முகாம்களில் கூட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கப்படுவதில்லை.

அங்கு மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் ஏனைய மக்களும் அங்கு செல்ல வேண்டும் என அனைத்துலக சமூகம் எவ்வாறு எதிர்பார்க்கலாம்.

மக்களை பலவந்தமாக தடுத்துவைக்க வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளுக்கு இல்லை. தமிழ் மக்களே உங்களுக்கு இதனை தெரிவிப்பார்கள்.

.நா.வின் பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் அவர்கள் கூட வவுனியாவில் மக்கள் தங்கியுள்ள முகாமுக்கு சென்று முயற்சிக்கவில்லை. முகாமுக்கு செல்லும் போது சுதந்திரமான மொழிபெயர்ப்பாளர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும்.

அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ் மக்களோ, மருத்துவர்களோ, உதவி அமைப்புக்களோ ஏதாவது கருத்தை தெரிவித்தால் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் என அரசு குற்றம் சுமத்தி வருகின்றது.

ஆனால், அரசினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மக்களை சுற்றி சிறிலங்கா அரசின் கடுமையான கண்காணிப்பு உள்ள போது அவர்கள் எவ்வாறு உண்மையை கூறுவார்கள்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார பேச்சாளர் எஸ். பத்மநாதனினால் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த கோரிக்கையை இலங்கை அரசு முற்றாக
நிராகரித்துள்ளது.
போர் நிறுத்த அமுலாக்கல் குறித்து சர்வதேச சமூகம் உரிய முறையில் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென பத்மநாதன் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், விடுதலைப் புலிகளின் யுத்த நிறுத்த கோரிக்கைகளை நம்ப முடியாது எனவும் , அதனை எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை எனவும் இலங்கை சமாதான செயலகத்தின் தலைவர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து படையினர் அவதானம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளின் ஊடாக பொதுமக்களை வெளியேற்ற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!
எதிர்வரும் தமிழ்சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளை நடத்தக் கூடாதென ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு விழாக்கள் மற்றும் நிகழ்வுகளை தவிர்க்குமாறு அரசாங்க அமைச்சர்களுக்கு பணப்புரை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு தரப்பினரின் அனுமதியின்றி பொது நிகழ்வுகளில் எந்தவொரு அமைச்சரோ அல்லது முக்கியஸ்தர்களோ கலந்து கொள்ளக் கூடாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப் போட்டியொன்றின் போது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே படுகொலை
செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
!!!!!!!!!!!!!!!!!!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கக் கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அமைச்சுப் பதவியை வகிக்கும் MAjjhup கருணாவுடன் தொடர்ச்சியாக நீடித்து வரும் கருத்து முரண்பாடுகள் காரணமாக பிள்ளையான் இவ்வாறானதோர் தீர்மானத்தை விரைவில் எடுக்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளையான் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்ட தலைவர்களுடன் தற்போது இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக MAjjhupகருணாவை பிள்ளையானும், பிள்ளையானை MAjjhupகருணாவும் பொது இடங்களில் கடுயைமாக விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காவற்துறை அதிகாரங்கள் தேவையில்லை என்ற MAjjhupகருணாவிற்கு கருத்துக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கடும் ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளது.

MAjjhupகருணாவின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு காத்து வரும் அசாமான்ய மௌனம் பிள்ளையானை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த நிலைமையின் காரணமாகவே பிள்ளையான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனது ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளார் என பிரபல ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாண சபைக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதி கிடைப்பதில்லை எனவும் அபிவிருத்தி பணிகளுக்கான வெளிநாட்டு உதவிகள் கூட கிடைப்பதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார் .

இதேவேளை முதலமைச்சர் பிள்ளையானுடன் அரசியல் பனிபோரில் ஈடுபட்;டுள்ள MAjjhupகருணா, கடந்த வருடம் கிழக்கு மாகாணத்திற்கு சமூர்த்தி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியில் 4 கோடி ரூபா செலவிடாத நிலையில் அந்த நிதி மீண்டும் மத்திய அரசாங்கத்திற்கு திரும்பி சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன் வெளிநாட்டு உதவிகளும் கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்துள்ளதாகவும் பிள்ளையான் உண்மைக்கு புறம்பான விடயங்களை கூறுவதாகவும்MAjjhup கருணா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 15 தமிழ் அரசியல் கட்சிகள் செயற்படுவதாகவும் இந்த கட்சிகள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள சர்வக்கட்சி பிரதிநிதிகள் குழுவில் தனித் தனியாக கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிப்பதற்கு பதிலாக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்திற்கு வந்து, ஒரு யோசனையை முன்வைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டும். அத்துடன் தமிழ் கட்சிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளMAjjhup கருணா, அவ்வாறு ஆதரவளிக்காது போனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது எனவும் கூறியுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

உலக செல்வந்தர் பட்டியலில் இரண்டு இலங்கைத் தமிழர்களது பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரபல ஆங்கில இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் உலகின் முதனிலை வர்த்தக சஞ்சிகைகளில் ஒன்றான போர்பஸ் சஞ்சிகையில் குறித்த இரண்டு இலங்கைத் தமிழர்களது பெயர் விபரங்கள் பிரசூரிக்கப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மலேசியரான ரீ.ஆனந்த கிருஸ்ணன் என்பவர் உலகின் 62 ஆவது செல்வந்தராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவின் முதனிலை செல்வந்தராகவும் ஆனந்த கிருஸ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

70 வயதான ஆனந்த கிருஸ்ணன் சுமார் ஏழு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு அதிபதி எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவரின் தந்தை யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பெருமளவு பங்குகளை ஆனந்த கிருஸ்ணன் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

இதேவேளை, மற்றுமொரு இலங்கையரான ராஜ் ராஜரட்னம் என்ற இலங்கைத் தமிழரது பெயரும் போர்பஸ் பில்லியன் அதிபதிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ராஜ் ராஜரட்னம் உலகின் 559 ஆவது செல்வந்தராக போர்பஸ் சஞ்சிகை அடையாளப்படுத்தியுள்ளது.

இவரது மொத்த சொத்துக்களின் பெறுமதி 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜ் ராஜரட்னம், முன்னணி வர்த்தக நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழும நிறுவனத்தின் 10 வீத பங்குகளைக் கொள்வனவு செய்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!
8:23:30 AM – முல்லைத்தீவு மாவட்டத்தில் உக்கிரமாக மோதல்கள் நடைபெறுகின்ற போர்ப் பிரதேசத்தில் இருந்து கடந்த சில தினங்களாக மீண்டும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இதுவரையில் இவ்வாறு 61 ஆயிரம் பேர் வந்துள்ளதாகவும் இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. வவுனியா பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் இடம்பெயர்ந்து வந்துள்ளவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் அதேவேளை, வவுனியா நகரம் உள்ளிட்ட முக்கிய பிரதேசங்கள் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வீதிச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் முக்கிய வீதியான ஏ9 வீதியில் படையினரும், யாழ்ப்பாணத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதனால், இராணுவ வாகனத் தொடரணிகள் செல்லும் போது, இந்த வீதியின் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பனாகொட இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் நேற்று (31) சிறிய விமானம் ஒன்று தாழ்வாக பறந்து சென்றதால், பிரதேசத்தில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.


நேற்று பிற்பகல் 3.10 அளவில் இந்த விமான அந்த பகுதியில் பறந்து சென்றுள்ளது. விமானப்படையின் கண்காணிப்பு விமானம் ஒன்றை பனாகொட பிரதேசத்தில் தாழ்வாக பறந்து சென்றதாக காவற்துறையினர் அவசர அழைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். பறந்து சென்ற விமானம் விடுதலைப்புலிகளின் விமானம் என நினைத்தே பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது

!!!!!!!!!!!!!!!!
சிகிரியாக் குன்றினைப் பார்வையிடச் செல்லும் உல்லாசப் பயணிகள் தமது உடலை குளவிகள் கொட்டுவதிலிருந்து பாதுகாக்க போர்வைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கலாச்சார அமைச்சின் செயலாளர் ஜீ.எல்.எம்.சமரசிங்க தெரிவித்தார். இதேவேளை சிகிரியாக் குன்றுக்குள் ஏனைய விலங்குகள் ஊடுருவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார் .
!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் தொடர்ந்து கடுஞ்சமர் இடம்பெற்று வருகின்றது என படைத் தரப்புச் செய்திகள் தெரிவித்தன .
எனினும், இச்சமரில் இருதரப்புக்களுக்கும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன எனப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது .
இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதிகளில் நிலைகொண்டிருக் கும் 58ஆவது படைப்பிரிவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுஞ்சமர் இடம் பெற்றுள்ளது.இச்சமரில் விடுதலைப் புலிகளில் 20 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 11 பேர் வரை படுகாயமடைந்தனர் என களமுனைத் தகவல்களை மேற்கோள்காட்டி படைத்தரப்புச் செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும் இச்சண்டையில் படைத்தரப்புக்கு சிறியளவான இழப்பு ஏற்பட்டது என்று படைத்தரப்பில் கூறப்பட்டது.
அதேவேளை, முன்னரங்க நிலைகளிலிருந்து இராணுவத்தினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் 11 பேர் உயிரிழந்தனர் என்றும் படைத்தரப்புச் செய்திகள் மேலும் தெரிவித்தன.
அதேவேளை, நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை தேவாவெட்டிப் பகுதியில் 55ஆவது படைப்பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் மண்ணணை ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். இதில் விடுதலைப் புலிகளுக்கு இழப்புக்கள் ஏற்பட்டன என்று படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன.
இதேசமயம், புதுக்குடியிருப்புப் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சமரின் பின்னர் படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது விடுதலைப் புலிகளின் 5 சடலங்களை மீட்டனர் என்று படைத்தரப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது .
எனினும், இச்சமர்களில் இரு தரப்புக்களிலும் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!!!
ஈழத்தமிழர் பிரச்சினையில் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி செயல்படுவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் மக்கள் வாக்களித்து ஜனநாயக ரீதியில் தமிழீழம் உருவானால் அதைப் பார்த்து என்னைவிட மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
ஈழத்தமிழர் பிரச்சினையில் கடந்த 50 ஆண்டு காலமாக ஈடுபட்டு வருவதாகக் கூறிக் கொள்ளும் முதல்வருக்கு, இலங்கையின் மக்கள் தொகையில் 70 சதவீதம் சிங்களவர் என்பதும், 30 சதவீதமே தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது தெரியாதா?
ஈழத் தமிழரிடையே வாக்கெடுப்பு என்று கூறாமல் இலங்கை மக்களிடையே வாக்கெடுப்பு என்று கூறுவது பிரச்சினையை வேண்டுமென்றே குழப்புவதாகும்.
1977-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ பிரச்சினை முன்வைக்கப்பட்டு மிகப்பெருவாரியான தமிழர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதற்குப் பின் நடைபெற்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் தமிழீழ ஆதரவு வேட்பாளர்களையே தமிழர்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழர் பகுதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
தமிழீழம் வேண்டும் என ஈழத்தமிழர்கள் தேர்தல் மூலம் பலமுறை தீர்ப்பளித்திருப்பதை ஏற்று அதற்கு அங்கீகாரம் தர இந்திய அரசு முன்வர வேண்டும் என வற்புறுத்த வேண்டிய தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் செயல்படும் கருணாநிதியை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீண்டு வாழ்வதற்கு உலக நாடுகள் எத்தகைய ஏற்பாடுகளை செய்தாலும், அதற்கு துணை நிற்க தமிழகமும் தி.மு..வும் தயாராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புதுச்சேரி: திரைப்பட இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்ட நடவடிக்கை பழிவாங்கும் செயல் என்று, சிறையில் அவரை சந்தித்துப் பேசிய பா... நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுளார்
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டு இயக்குனர் சீமானை புதுச்சேரி காவல்துறையினர் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது தமிழக காவல்துறை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது .

இந்நிலையில் சிறையில் உள்ள இயக்குனர் சீமானை பா... நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடம் வரை நீடித்த இந்த சந்திப்பின் போது, அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனந்தராமன், பன்னீர்செல்வம், அருள்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறுகையில், “அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் சீமான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தென்திசையிலே (இலங்கை) ஒரு இனம் அழிக்கப்படுகிறது. இலங்கை தமிழர்கள் இனமே கூண்டோடு அழிக்கப்படுவதைக் கண்டித்து, குரல் கொடுத்து திரைப்பட கலைஞர்களை திரட்டியும், மற்ற கலைஞர்களை திரட்டியும் சீமான் போராட்டம் நடத்தினார்.

தமிழ் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும் நோக்குடன் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .

இயக்குனர் சீமானை இந்த தேர்தல் நேரத்தில் விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களுடைய ஆர்வம் மட்டுமல்ல. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் வேண்டுகோள் ஆகும்என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக, தே.மு. தி.. தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் தே.மு.தி.. தலைவர் விஜயகாந்த் நேற்று தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் சென்ற இடங்களில் தேர்தல் ஆணைய விதிகளுக்கு மாறாக டிஜிட்டல் விளம்பரப் பலகைகள், கட்சிக் கொடி தோரணங்கள் வைக்கப்பட்டிருந்ததாகப் புகார் எழுந்தது.

மேலும், விஜயகாந்துடன் 10-க்கும் மேற்பட்ட கார்கள் பின் தொடர்ந்து சென்றதாகவும் மானாமதுரை பேருந்து நிலையம் அருகே முன்அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறாகப் பிரசாரம் செய்ததாகவும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக விஜயகாந்த் மீதும், அவரது கட்சியைச் சேர்ந்த சுமார் 100 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதே போல் திருப்பாச்சேத்தி காவல்நிலையம் உட்பட மேலும் சில இடங்களில் விஜயகாந்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உலகில் நடைபெறும் பயங்கரவாதச் செயல்களின் மையமாக பாகிஸ்தான் இருந்து வருவதாகவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஜி– 20 நாடுகளின் இரண்டாவது உச்சி மாநாடு நடைபெறுகிறது . இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தற்போது லண்டன் சென்றுள்ளார்.

தனது பயணத்திற்கு முன்பாக ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு பிரதமர் அளித்த பேட்டியில் பாகிஸ்தானின் செயல்பாடுகளை கடுமையாகக் குறைகூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் ‘165 பேர் இறக்கக் காரணமான மும்பைத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்தாய்பா அமைப்பே காரணம். இந்த அமைப்பைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானால் இயலவில்லை அல்லது அதற்கு விருப்பமில்லை என்று கூறலாம்.

இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் களமாக இருக்காது என்று கடந்த காலங்களில் அந்த நாடு வாக்குறுதிகளை அளித்திருந்தாலும், பயங்கரவாதிகளுக்கு எதிராக பயனளிக்கக் கூடிய நடவடிக்கைகளை எடுக்கவோ, கட்டுப்படுத்தவோ அது தவறிவிட்டது.

உலகில் நடைபெறும் பயங்கரவாதச் செயல்களின் மையமாக பாகிஸ்தான் விளங்குகிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இந்த உண்மையை உலக சமுதாயம் நன்கு பற்றிக் கொள்ள முன்வர வேண்டும்என்றார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பா... வேட்பாளர் வருண் காந்தியை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து அவர் வேறு சிறைக்கு மாற்றப்பட்டார்
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் பா... சார்பில் வருண் காந்தி போட்டியிடுகிறார். அண்மையில் அங்கு நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் , வகுப்பு மோதல்களைத் தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது . இதைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், உத்தரப்பிரதேச அரசு அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது. இதனால், மற்ற வழக்குகளில் முன் பிணை கிடைத்தும் விடுதலை செய்யப்படாமல் வருண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வருண் காந்தியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ள தகவல் உளவுத் துறைக்கு கிடைத்துள்ளது.

தலைமறைவு தாதா சோட்டா ஷாகீல்ரஷீத் மலபாரி ஆகியோர் இடையே நடந்த தொலைபேசி உரையாடலை இடைமறித்துக் கேட்டபோது, இந்த சதித்திட்டம் வெளிப்பட்டதாக , உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வருண் காந்தியைக் கொலை செய்ய நடக்கும் முயற்சி குறித்து உத்தரப் பிரதேச அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை செய்தது. இதையடுத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் பிலிபிட் சிறையில் இருந்து, பலத்த பாதுகாப்புடன் எடா சிறைக்கு வருண் மாற்றப்பட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
ஆப்கானிஸ்தான் நிலைமையை மேம்படுத்துவதற்கு பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்கும் அமெரிக்காவின் திட்டத்தை, இரான் எச்சரிக்கையுணர்வுடன் வரவேற்றுள்ளது.
ஆப்கானில் இருந்து எல்லைகளின் ஊடாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளுக்கும் , அந்த நாட்டின் சிவில் மறுகட்டமைப்புக்கும் இரான் உதவும் என்று, ஹேக்கில் நடந்த சர்வதேச மாநாடு ஒன்றில் உரையாற்றிய இரானிய துணை வெளியுறவு அமைச்சர் மெஃதி அக்குன்சதே கூறியுள்ளார்.
ஆனால், ஆப்கானில் வெளிநாட்டுப் படைகளை அதிகரிப்பதற்கான திட்டம் வெற்றியைத் தராது என்றும் அவர் கூறியுள்ளார்.
வன்செயல்களை கைவிடும் அல்கைதா உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கிலாரி கிளிங்டன் கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானில் லாகூரில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் மீது திங்களன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமது அமைப்பே பொறுப்பு என்று பாகிஸ்தானில் உள்ள தலிபான்களின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதில் பயிற்சியாளர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானிய பழங்குடியின பகுதிகள் மீது தீவிரவாதச் சந்தேக நபர்கள் மீது நடத்தப்பட்ட அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதலும், அண்மையில் நடந்த வேறு சில தாக்குதல்களும் நடத்தப்பட்டதாக, பைதுல்லாஹ் மெஃசுட் என்ற அந்த நபர் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிலும், அமெரிக்காவிலும் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார் .
பொலிஸ் பயிற்சிக் கல்லூரி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களை பாகிஸ்தான் பொலிஸார் புலன் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானில் 3-வது தடவையும் பிரதமர் ஆவேன்: நவாஸ் செரீப் நம்பிக்கை njuptpj;Js;shh;
பாகிஸ்தானில் எதிர்க்கட்சி தலைவர் நவாஸ் செரீப் அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு எதிராக பேரணியை நடத்தினார். இதை தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தில் கவர்னர் ஆட்சியை நீக்கவும், முஷரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்திரியை மீண்டும் பதவியில் அமர்த்தவும் ஒப்புக்கொண்டார் .
இதையடுத்து சர்தாரிக்கும் நவாஸ் செரீப்புக்கும் இடையேயான பிரச்சினை முடிவுக்கு வந்தது . இந்த நிலையில் பாகிஸ்தானில் ஒருவர் 2 முறை மட்டுமே பிரதமர் பதவியில் நீடிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து நவாஸ் செரீப்பிடம் நிருபர்கள் கேட்டபோது சர்தாரி அரசின் 4 ஆண்டு கால பதவி முடிந்த பிறகு மீண்டும் தேர்தல் நடைபெறும். இதில் வெற்றி பெற்று 3-வது முறையாக நான் மீண்டும் பிரதமர் ஆவேன் என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published.