பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தவறியது : அத்வானி

புவனேஸ்வர் : பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி தவறிவிட்டது என பா.ஜ., பிரதமர் வேட்பாளர் அத்வானி குற்றம்சாட்டியுள்ளார். ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் அத்வானி தேர்தல் பிரசாரம் செய்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது : சமீபத்தில் பாகிஸ்தானில் போலீஸ் பயிற்சி நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் . இது குறித்து அறிக்கை வெளியிட்ட பிரதமர் மன்மோகன்சிங் கூறியது அதிர்ச்சியளிக்கிறது . பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவும் – பாகிஸ்தானும் கூட்டாக செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்து இந்தியாவுக்கு எதிராக மறைமுக போர் நடத்தி வருகிறது . மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னணியில் பாக்., உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் பிரதமரோ பாகிஸ்தானுடன் சேர்ந்து பயங்கரவாதத்தை ஒழிக்க அழைப்பு விடுத்துள்ளார். இது வேடிக்கையாக உள்ளது . இந்தியாவின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்காத ஐக்கிய முற்போக்கு அரசுக்கு வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் . இவ்வாறு அத்வானி கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.