சிறீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் போரையும் படுகொலைகளையும் நிறுத்தும்வரை சிறீலங்கா விமானசேவையைப் புறக்கணியுங்கள் அம்சர்டாமில் வெளிநாட்டவர்களிடம் வேண்டுகோள்

தமிழர்களிற்கெதிரான போரையும் படுகொலைகளையும் சிறீலங்காஅரசு நிறுத்தும்வரைசிறீலங்கா விமானசேவையை புறக்கணியுங்கள் என நெதர்லாந்திலுள்ள அம்சர்டாமில், உல்லாசப்பயணிகள் அதிகமாகக் கூடும் டாம் பிளைன் எனுமிடத்தில் 29.03.2009 அன்று கவனயீர்ப்புபோராட்டம் ஒன்று தமிழ் மகளிர் அமைப்பினராலும், தமிழ் இளையோர் அமைப்பினராலும் முன்னெடுக்கப்பட்டது.

இங்கு சிறீலங்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு சிங்களஅரசிற்கு அந்நியச் செலவாணியை பெற்றுத்தரும், புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் பாவிக்கும்பொருட்களும் வைக்கப்பட்டு அப்பொருட்களைப் புறக்கணிக்குமாறும் தமிழ்மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இங்கு மாறிமாறிவருகின்ற சிங்களத்தலைவர்கள் தமிழ்த்தேசியத்தை அழித்து இலங்கையை பௌத்தசிங்கள நாடாக்குவதிலேயே செயற்பட்டார்கள் என்றும் இன்றும் மகிந்தஅரசு இதையே புரிகின்றது என்றும், ஆகவே தமிழர்களிற்கென்று தனியரசே தமிழர்களிற்கான சிறந்ததீர்வு என்பதை விளக்கும் கண்காட்சியும் பார்வைக்குவைக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்களும் அங்கு இளையோர்களால் விநியோகிக்கப்பட்டன.

மதியம் 2மணியிலிருந்து மாலை 5மணிவரை நடாத்தப்பட்ட இக்கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் சிறீலங்காவின் சிங்ககொடி எரியூட்டப்பட்ட பின்னர் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

Source & Thanks : .sankathi

Leave a Reply

Your email address will not be published.