மே மாதம் முதல் மின்வெட்டு இருக்காது : அமைச்சர் வீராசாமி ஆரூடம்

ஸ்ரீபெரும்புதூர் : மே மாதம் முதல் மின்வெட்டு இருக்காது என தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.


ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட உயர் மின்அழுத்த டிரான்ஸ்பார்மர்கள் தயாரிப்பு தொழிற்சாலை திறப்பு விழா நடந்தது. அமைச்சர் அன்பரசன் தலைமை தாங்கினார். முதன்மை நிர்வாகி ராவ் முன்னிலை வகித்தார். அரிவா தொழிற்சாலைத் தலைவர் பிலிப் கில்மாட், மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடுவீராசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

தொழிற்சாலையை அமைச்சர் ஆற்காடு வீராசாமி திறந்து வைத்து பேசியதாவது: படப்பையில் உயர் மின்னழுத்த சாதனங்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க கடந்த ஆண்டு பூமி பூஜை போட்டனர். 20 கோடி மதிப்பில் கட்டுமானப் பணி நடந்தது. தற்போது, தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது. இவ்வளாகம் 58 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவு கொண்டது. 20 ஆயிரத்து 300 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலையில், 500 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். வரும் 4 ஆண்டுகளில் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும்.மே மாதம் முதல் வாரத்திலிருந்து தமிழ்நாட்டில் மின் வெட்டு இருக்காது.இவ்வாறு அமைச்சர் வீராசாமி பேசினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.