ஏர்போர்ட்டில் வேலை வாங்கி தருவதாக பலே மோசடி *போலி இன்டர்வியூ கார்டு அனுப்பி ரூ.33 லட்சம் சுவாகா

சென்னை:விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, போலி இன்டர்வியூ கார்டு அனுப்பி, 33 லட்சம் ரூபாயை மோசடி செய்தவர்கள் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம், பவர் ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்தவர் ஏழுமலை. இவர், சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் மனு கொடுத்தார்.அதில் கூறியிருப்பதாவது:

நான் மதுராந்தகம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறேன். எனது மகன்கள் படித்து வேலையில்லாமல் உள்ளனர். என்னுடன் நகராட்சியில் பிட்டராக பணிபுரிபவர் தனபால்.அவரின் மனைவிக்கு குரோம்பேட்டை, சஞ்ஜை காந்தி நகரில் வசிக்கும் மணிபாரதி என்பவர், அரசு வேலை வாங்கிக் கொடுத்ததாகவும், அவரை தொடர்பு கொண்டால் எனது மகன்களுக்கு வேலை வாங்கிக் கொடுப்பார் என்று கூறினார். மேலும், மணிபாரதியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மணிபாரதி, என்னிடம் கூறுகையில், “சென்னை விமான நிலையத்தில் எனக்கு நெருக்க மானவர்கள் முக்கிய பொறுப்பில், அதிகாரிகளாக உள்ளனர். நான் அ.தி.மு.க., வில் முக்கிய பொறுப்பில் இருக்கிறேன். எம்.பி – எம்.எல்.ஏ.,க்கள் எனக்கு நல்ல தொடர்பு உண்டு.சென்னை விமானநிலையத்தில் உனது மகன்களுக்கு வேலை வாங்கி தருகிறேன். அதற்கு, ஒன்ரறை லட்சம் ரூபாயும், எனக்கு ஒரு லட்சம் ரூபாயும் தரவேண்டும்,’ என்றார்.அதை நம்பி, பல தவணைகளில் ஏழு லட்சம் ரூபாய் பணத்தை மணிபாரதியிடம் கொடுத்தேன்.

சில நாட்கள் கழித்து என்னிடம் தொடர்பு கொண்ட மணிபாரதி, “விமான நிலையத்தில் துப்புரவு பணியாளர், டிராலிமேன், உதவி செக்கர், கம்ப்யூட்டர் பணி, எலக்ட்ரீசியன் மற்றும் கார் பார்க்கிங் பணி உள்ளது.உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் அழைத்து வாருங்கள். அவர்களுக்கும் வேலை வாங்கிக் கொடுக்கிறேன்,’ என்றார். இதை யடுத்து, எனக்கு தெரிந்த 20க்கும் மேற்பட்டவர்களிடம் விவரத்தை கூறி, தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 24 லட்சம் ரூபாயை மணிபாரதியிடம் கொடுத்தேன்.

அப்போது, அங்கு வந்த கவுதம், ரவிச்சந்திரனை விமான நிலைய அதிகாரிகள் என்று மணிபாரதி அறிமுகப்படுத்தினார்.பணம் கொடுத்த சில நாட்களில் டிராலி வேலைக்கு பதிவு செய்திருந்தவர்களுக்கு பிப்ரவரி மாதம் 16ம் தேதியும், துப்புரவு பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 20ம் தேதியும், கார் பார்க்கிங் வேலை உள்ளிட்ட மற்ற பணிகளுக்கு மார்ச் மாதம் 2ம் தேதியும் நேர்முக தேர்வு நடக்கிறது என கூறி, அதற்கான இன்டர்வியூ கார்டுகளை மணிபாரதி கொடுத்தார்.அதில், கையெழுத்து பெற்றுவரும்போது, மீதி தொகையினை எடுத்து வரும்படி கூறினார்.

அதன் படி கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை கவுதமிடம் கொடுத் தேன். நேர்முகத் தேர்வில் பொது மேலாளர் கவுரிசங்கர் என்பவர் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வார் என்று கூறினார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 16ம் தேதி காலை, போனில் தொடர்பு கொண்ட மணிபாரதி நேர்முகத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.சந்தேகமடைந்த நாங்கள் சென்னை விமான நிலையம் சென்று விசாரித்தபோது, மணிபாரதி கூறியது அனைத்தும் தவறான தகவல் என்றும், சென்னை விமான நிலைய முகவரியுடன் அவரே போலி யான இன்டர்வியூ கார்டு அனுப்பியதும் தெரியவந்தது.

மணிபாரதியை தேடியபோது, அவர் தலைமறைவாகி விட்டார்.பின், மொபைல் போனில் தொடர்பு கொண்ட அவர், “எங்களை தேடுவதை இத்தோடு நிறுத்திக் கொள். இல்லா விட்டால் உன்னை கொலை செய்து விடுவோம்,’ என மிரட்டினார். எனவே, இது குறித்து விசாரணை நடத்தி, எங்கள் பணத்தை மீட்டு தரவேண்டும்.இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஏழுமலையுடன் 15க்கும் மேற்பட்டோர் புகார் மனுக்கள் கொடுத்துள்ளனர்.

வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி:திருவள்ளூர் மாவட்டம், பழையனூரைச் சேர்ந்த மாரிமுத்து உள்ளிட்ட 10 பேர் புகார் மனு கொடுத்தனர்.அதில்,”அம்பத்தூர், பானுநகர்,பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் சுங்குவார் சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி எங்க ளிடம் தலா 60 ஆயிரம் ரூபாய் வீதம் 15 பேரிடம் ஒன்பது லட்சம் ரூபாய் பணம் வாங்கினார்.

ஆனால், வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. தற்போது தலைமறைவாக உள்ள ரவிக்குமார் மீது உரிய நட வடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத் தரவேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.இந்த புகார்கள் குறித்து தீவிர விசா ரணை நடத்தும் படி புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.