தமிழக மக்களில் பெரும்பாலானோர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு

தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியா ஆதரவு வழங்கவேண்டும் என்று என்.டி.டி.வி ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமா என்ற ஆய்வின் போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள பொதுமக்களில் 66 வீதமானோர் ஆம் என தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், தமிழகத்தில் அடுத்து முதலமைச்சராக வருவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிக்கும் மக்களில் 41 வீதம் கருணாநிதிக்கும் 40 வீதமானோர் ஜெயலலிதாவுக்கும் ஆதவளிக்கவேண்டும் என்ற கருத்தும் இந்த ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.