அனுராதபுரத்தில் சிறுவனும் இளைஞனும் கைது

மன்னார் நாணாட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் 15 வயது சிறுவனும் 17 வயது இளைஞனும் அனுராதபுரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்டகாலமாக அனுராதபுரத்தில் தங்கியிருந்த இரு இளைஞர்களும் அங்குள்ள இந்து ஆலயம் ஒன்றின் பணியாளர்கள் என்றும் கூறப்படுகின்றது.

போரினால் பாதிக்கப்பட்டு வறுமையின் காரணமாக அனுராதபுரத்திற்கு வந்ததாக இருவரும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளையில் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த இருவரும் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா காவல்துறை ஊடக பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.