கிரிடிட் கார்டை அறிமுகப்படுத்தியது எல்.ஐ.சி

மும்பை : லைஃப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா, கிரிடிட் கார்டை நேற்று மும்பையில் அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் மும்பை மற்றும் புதுடில்லியில் மட்டும் குறைந்த அளவிலேயே இந்த கிரிடிட் கார்டு வினியோகிக்கப் படுகிறது.

எல்.ஐ.சி.,யின் துணை நிறுவனமான எல்.ஐ.சி.,கார்ட்ஸ் சர்வீசஸ் லிமிடெட் ( எல்ஐசி சிஎஸ்எல் ) மூலமாக இந்த கார்டு வெளியிடப்படுகிறது. அதன் நிர்வாகத்தை கார்பரேஷன் பேங்க் கவனித்துக்கொள்ளும். விசா பிராண்ட்டை கொண்டிருக்கும் எல்.ஐ.சி.,கிரிடிட் கார்டை உலகம் முழுவதும் நாம் பயன்படுத்தலாம்.கார்டுக்கு சொந்தக்காரரின் போட்டோ மற்றும் டிஜிட்டலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கையெழுத்து போன்றவற்றால் அந்த கார்டு அதிக பாதுகாப்பானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட எல்.ஐ.சி.ஏஜென்ட்கள் மூலமாக வினியோகம் செய்யப்படும் இந்த கார்டு மூலமாக எல்.ஐ.சி.பிரீமியத்தையும் செலுத்த முடியும் என்று எல்.ஐ.சி.ஆஃப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கப்படுகிறது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.