நாளை முதல் எந்த ஏ.டி.எம். மிலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் : கட்டணம் கிடையாது

புதுடில்லி : சாதாரன மக்களுக்கு பெரிதும் பயன்படும் திட்டம் ஒன்றை ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இதன்படி நாளை முதல் ( ஏப்ரல் 1 ) எந்த வங்கியின் ஏ.டி.எம்.மிலும் நீங்கள் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

அது உங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். ஆகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்காக கட்டணம் எதையும் வசூலிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி சொல்லி விட்டது. இதுவரை நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கி, அல்லது அதனுடன் ஒப்பந்தம் செய்திருக்கும் வங்கிகள் ஆகியவற்றின் ஏ.டி.எம்.களில் மட்டுமே கட்டணம் ஏதுமின்றி பணம் எடுத்துக்கொள்ள முடியும். இது தவிர வேறு வங்கிகளின் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தால் ஒவ்வொரு தடவைக்கும் குறைந்தது ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இப்போது அது நீக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பை அடுத்து, பல வங்கிகள் தங்களின் ஏ.டி.எம்.நெட்வொர்க்கை அதிகரிக்க திட்டமிட்டிருக்கின்றன. ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், புதிதாக 60 ஏ.டி.எம்.களை திறக்க உள்ளதாக அதன் எக்ஸிகூடிவ் டைரக்டர் சின்ஹா தெரிவித்தார்.ஆனால் கிரிடிட் கார்டை கொண்டு ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலோ, இந்தியாவுக்கு வெளியே இருக்கும் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினாலோ கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.