இந்திய அரசியலில் மூன்றாவது அணி என்று ஒரு அணி இல்லை : அத்வானி பரபரப்பு பேட்டி

புதுடில்லி : இந்திய அரசியலில் மூன்றாவது அணி என்று ஒன்றும் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலோ , தேசிய ஜனநாயக கூட்டணியிலோ இல்லை என்றால் அந்த கட்சி மூன்றாவது அணியில் இருக்கிறது என்பது அர்த்தமில்லை

.இவ்வாறு பா.ஜ., பிரதமர் வேட்பாளர் அத்வானி கூறியுள்ளார் . டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அத்வானி கூறியதாவது : பா.ஜ., – காங்., – கூட்டணியில் இல்லாத கட்சிகள் எல்லாம் மூன்றாவது அணி என்று கூற முடியாது . என்னை பொறுத்த வரை அப்படி ஒரு அணியே கிடையாது. லோக்சபா தேர்தலில்பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் போது சிறு சிறு கட்சிகள் பா.ஜ., வுடன் வந்து இணையும் . இப்போது மூன்றாவது அணியில் இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் தெலுங்கு தேசம் , தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி , பிஜூ ஜனதா தளம் , மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் காங்கிரசுக்கு தான் எதிராக இருக்கிறது. எனவே இந்த கட்சிகள் பா.ஜ., வுக்கு ஆதரவு அளிக்கும் . ஒரிசாவில் நவீன் பட்நாயக் அரசுடன் ஏற்பட்ட குழப்பம் விரைவில் நீங்கும் , பிஜூ ஜனதா தளம் பா.ஜ., வுடன் இணையும் . இவ்வாறு அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.