மன்னாரில் இருவாரங்களாக விசேட சுற்றிவளைப்புத் தேடுதல்

வீரகேசரி இணையம் 3/31/2009 3:06:22 PM – மன்னார் நகர்ப் பகுதியில் கடந்த இரு வாரகாலமாகப் படையினர் விசேட சுற்றி வளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவத்தினரும்,பொலிஸாரும் இணைந்து மேற்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் படையினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மன்னார் நகர்ப் பகுதியின் முக்கியமான வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளினால் மாலை 7.30 மணிமுதல் மன்னார் நகரம் வெறிச்சோடிக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. E-mail to a friend

Source & Thanks : virakesari

Leave a Reply

Your email address will not be published.