‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (31.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும், அவர்களை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரவழைக்கும் நோக்கிலும், சிறிது காலத்திற்கு தாக்குதல்களை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் பிபிசிக்குத் தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்குப் பிரதேசங்களில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகளின்போது தரையிலும் கடலிலும் 50க்கும் மேற்பட்ட புலி கெரில்லாக்கள் கொல்லப்பட்டதாக ஏற்கனவே இலங்கை இராணுவம் அறிவித்திருந்தது.

“அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட எண்ணியுள்ளதுஎன்று வெளிவிவகார செயலர் பாலித கோகண பி.பி.சிக்குத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அமைப்புக்கள் தற்காலிகமாக யுத்தத்தை நிறுத்தி மோதல் பிரதேசங்களில் சிக்கியிருக்கும் மக்களை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது . கடந்த இரு மாதங்களில் 3,000 மக்கள் கொல்லப்பட்டும் 7,000 பேர் வரை காயமடைந்துமுள்ளதாக .நா. தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கின்றது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு மாத்தளன் பகுதியிலிருந்து 4 படகுகளில் சென்ற பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட கடற்படையினர் அதனை புலிகளுடனான சமர் என பொய் பிரசாரம் மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுதலை புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக புலிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நேற்று அதிகாலை வேளையில் மாத்தளன் பகுதியிலிருந்து பொதுமக்கள் 4 படகுகளில் பயணித்துக் கொண்டிருக்கையில் கடற்படையினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் . இவற்றில் இரு படகுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. இதில் பயணித்த பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் சடலங்களைக் கைப்பற்றிய கடற்படையினர் அதனை விடுதலைப்புலிகளின் சடலங்கள் என பொய்கூறி வருகின்றனர்.

பொதுமக்கள் மீது தாக்குதலை நடாத்திவிட்டு விடுதலைப் புலிகளுடன் கடும் சமர் இடம்பெற்றதாக அரச ஊடகங்களில் உண்மைக்கு மாறான பொய் தகவல்களை கடற்படைப் பேச்சாளர் வெளியிட்டுள்ளதாக விடுதலை புலிகள் தெரிவித்துள்ளார்கள்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நடைபெறவுள்ள மேல்மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் (ஏப்ரல் 25) புலிகளை அரசு முற்றாக அழித்துவிடும். புலிகளும், அவர்களின் தலைவர் பிரபாகரனும் இல்லாத நிலையிலேயே எமது மக்கள் தேர்தலில் வாக்களிக்கச் செல்வார்கள். இவ்வாறு மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருக்கின்றார்.
ஹம்பாந்தோட்டை வீரக்கெட்டியவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:
பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டும் எமது யுத்தம் இப்போது இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது . வடக்கு கிழக்கில் புலிகளின் வசமிருந்த அனைத்துப் பகுதிகளும் பொரும்பாலும் மீட்கப்பட்டுவிட்டன . இப்போது புலிகள் 21 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பிற்குள் முடக்கப்பட்டுள்ளனர். அந்த 21 சதுர கிலோ மீற்றர் நிலத்தையும் பிடித்து புலிகளை முற்றாக இல்லாதொழிக்க வெகு நாள்கள் செல்லாது.
யுத்தத்தில் ஈட்டப்படும் பாரிய வெற்றிகளை கௌரவிக்கும் வகையில் மக்கள் அனைத்துத் தேர்தல்களிலும் அரசை ஆதரிக்கின்றனர். இது யுத்தத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றது .
மேல் மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாக இந்தப் பயங்கரவாதம் முற்றாக ஒழித்துக்கட்டப்படும் என்று நான் நூறு வீதம் நம்புகிறேன். புலிப் பயங்கரவாதமும் அந்தப் பயங்கர வாதத்தின் தலைவர் பிரபாகரனும் ஒழித்துக்கட்டப்பட்ட நிலையில்தான் மேல்மாகாண மக்கள் தேர்தல் தினத்தன்று வாகக்ளிக்கச் செல்வர்.
மேல்மாகாண சபைத் தேர்தலில் அரசை வெற்றி பெறச் செய்வதற்கு மக்கள் தயாராகிவிட்டனர் . எல்லாத் தேர்தல்களையும் போல் இந்தத் தேர்தலிலும் எமக்கு எவரும் போட்டியில்லை . எமது வெற்றி என்றோ உறுதியாகிவிட்டது.
எதுவித சிரமமுன்றி மீண்டும் மேல் மாகாணசபையில் ஆட்சியை நடத்துவோம் என்றார். மேல் மாகாண சபைத் தேர்தலில் அடுத்த மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது தெரிந்ததே .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு இந்திய மத்திய அரசாங்கமே தீர்வினை வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களும், முஸ்லிம்களும் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தமிழக அரசியல் தலைமைகள் காத்திரமான தீர்வுகளை வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய, காங்கிரஸ் கட்சியின் இம்முறைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், இலங்கை முஸ்லிம்கள் தமிழ் மொழி பேசிய போதிலும் தனித்துவமான இன அடையாளங்களை கொண்டிருப்பதனை இந்திய மத்திய அரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியிலிருந்து தாவிய பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டே ஆட்சி நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

தேர்தல்களை வெற்றிகொள்வதற்காக அரசாங்கம் பல்வேறு துஸ்பிரயோகங்களை மேற்கொண்டு வருவதாக ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியிலிருந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்து வவுனியா வந்தபோது ஓமந்தை இராணுவ சோதனைநிலையத்தில் இதுவரை 600 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வருவோருக்கான இறுதிச் சோதனைநிலையம் ஓமந்தையில் உள்ளது. இங்கு கடந்த மூன்று மாதங்களில் நடந்த சோதனைகளின்போதே இந்த 600 பேரும் புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்தச் சோதனையின்போது ஒரு நாளில் மட்டும் 75 புலிச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். அங்கிருந்து இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களுடன் இவர்களும் சேர்ந்து தங்களை அடையாளம் காணாதவாறு இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்தபோதே இராணுவம் மற்றும் பொலிஸார் நடத்திய சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் அனைவரும் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!
நாட்டில் இடம்பெற்று வரும் யுத்தத்தை காரணம் காட்டி மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்க முடியாதென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் .

பயங்கரவாதம் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளுக்கு அனுமதியளிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

நாட்டின் தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு எவரும் தடையாக இருக்கக் கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் , நாட்டில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சாசனசபையை அமைப்பதனால் அரசாங்கத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல்சாசனசபை நாட்டின் நல்லாட்சி இடம்பெறுவதற்கான முக்கிய அடையாளங்களில் ஒன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னி புதுமத்தளான் பிரதேசத்திலிருந்து நோயாளிகளை அழைத்து வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கப்பல் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களுக்கு நடுவில் குறித்த மீட்புப் கப்பல் சிக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கப்பலுக்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

முதல் தடவையாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க மீட்பு கப்பல் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆங்கில இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மனிதாபிமான மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இரு தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மிகவும் முக்கியமானதென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

காயமடைந்த மற்றும் அவர்களது உறவினர்கள் 6000 பேரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இதுவரையில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு அழைத்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் தமிழர்களின் வீடுகள் மீது இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல் நடத்தி அதிகளவானவர்களை படுகொலை செய்துள்ளதாக நேற்று (30) தனுஷ்கோடிக்கு அகதியாக சென்ற இலங்கை பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் நடைபெற்று வரும் போரில் அப்பாவி தமிழர்கள் அதிகளவில் படுகொலை செய்யப்படுகின்றனர். இதனால் தமிழர்கள் அகதியாக தனுஷ்கோடி, பாம்பனுக்கு செல்வதாக அவர் கூறியுள்ளார்.


இந் நிலையில் மன்னார், வவுனியாவைச் சேர்ந்த 5 ஆண்கள், 5 பெண்கள், 4 சிறுவர், சிறுமியர் ஆகிய 14 பேர் தலைமன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு திங்கள்கிழமை காலை தனுஷ்கோடி ஒத்தப்பெட்டி கரையில் சென்று இறங்கியுள்ளனர். இவர்கள் விசாரணைகளின் பின்னர் மண்டபம் அகதி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!
நாட்டுக்கும், மக்களுக்கும் பாதகமான சர்வதேச நாணய நிதியத்துடனான கள்ளத் தொடர்பு ஒப்பந்தத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில
உலகப் பொருளாதார நெருக்கடியிலும் பார்க்க உள்ளூர்ப் பொருளாதாரம் மோசமடைந்து காணப்படுவதற்கும் நாடு இன்று இவ்வாறானதொரு நெருக்கடி நிலைமைக்கு முகம் கொடுப்பதற்கும் அரசாங்கமே மூல காரணமாகும்.
தேசப்பற்று என்ற சுலோகத்தை மாட்டிக்கொண்டு நாட்டைக் குட்டிச்சுவராக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நாம் உடனுக்குடன் வெளிப்படுத்தி வருகின்றோம். இது குறித்து ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டிருந்தால்இ நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்க மாட்டாது என்றார்.
நிதிக் கொள்கையொன்றை வகுத்துக் கொள்ள முடியாத, திராணியற்ற அரசாங்கம் வெளிநாடுகளிடமும் நிதிக் கம்பனிகளிடமும் கடனுக்கு மேல் கடன் வாங்கி அதனை வீண் விரயம் செய்து கொண்டிருப்பதுடன் கொள்ளையும் அடிக்கின்றது.
தற்போது இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்த வெளிநாட்டுக் கடன் 4.5 பில்லியன் டொலர்களாகும். இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் கடந்த மாதங்களில் கூறியிருந்த கருத்துகளின் படி இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற வேண்டிய தேவை இல்லை என்றிருந்தது.
எக்காரணத்தைக் கொண்டும் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்டுச் செல்லப் போவதில்லை என்று கூறிய அரசாங்கம் தற்போது அங்கு சென்று கடன் கேட்டு நிற்பதற்கு எந்த அருகதையும் இல்லை. இதனை அரசாங்கமே உணர்ந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் திருட்டுத் தனமான உடன்படிக்கையை கைச்சாத்திட்டு விட்டன. இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் அரச சேவை ஆட்சேர்ப்பு, நிவாரணங்கள், உரமானியம் ஆகியவற்றை இல்லாது செய்வதும் அத்துடன் வரிகள்இ நீர்க் கட்டணம் அதிகரிப்பு மின்சாரத் துறை தனியார் மயமாக்கல் போன்ற அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனை வெளிப்படுத்த முடியாத அரசாங்கம் சகல விடயங்களையும் மூடி மறைக்கவே முற்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்காவின் 25 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை இலங்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களின் மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே இந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அமெரிக்கப் பிரதி தூதுவர் ஜேம்ஸ் முரே தெரிவித்துள்ளார்.

இந்த மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் 10,000 நோயாளர்களுக்குப் பயன்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டமும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமும் நேற்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றன. இக் கூட்டங்களை முன்னிட்டு மட்டக்களப்பு நகரிலும் மாவட்ட செயலகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது . மாவட்ட செயலகத்தினுள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட செயலகத்துக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் வெபர் விளையாட்டு மைதானத்திலும் வாடி வீட்டுக்கு முன்னாலுமே தரித்து வைக்க அனுமதிக்கப்பட்டன. செயலக மாநாட்டு மண்டபத்தினுள் கையடக்க தொலைபேசி கொண்டு செல்லவும் எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.

இக் கூட்டங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் மொகான் விஜயவிக்கிரம,அனர்த்த நிவாரண அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, If;fpa,uhr;rpaj;jpy; rpiwjz;liz ngw;wtUk; me;jrmw;w mikr;rUk; MAjjhupAkhfpa வினõயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர்.

முதலில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் சம்பந்தமான கூட்டம் நடைபெற்றது. அடுத்து ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் திணைக்களங்களினால் மேற்கொள்ளப்படும் வேலைகளின் முன்னேற்றம், அவை எதிர்நோக்கும் பிரச்சினைகள், மக்களின் குறைகள், தேவைகள் ஆராயப்பட்டன
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பிமலைப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த 300 குடும்பங்கள் இன்று 31ஆம் திகதி மீளக்குடியமர்த்தப்படவுள்ளன.

நலன்புரி நிலையங்களில் வசிக்கும் இவர்கள் பஸ்கள் மூலம் இன்று காலை அழைத்துச் செல்லப்படவுள்ளனர் . அதேவேளை, மேற்படி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஈரலைக்குளம், அலியார் ஓடை மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்தியாவின் மும்பை நகரில் அண் மையில் நடந்தரோபோபோட்டியில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரோபோவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.


மொறட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியல் பிரிவே இந்த ரோபோவைத் தயாரித்தது.
இந்த ரோபோவின் வேகம் மற்றும் தடை அறிந்து வழியைமாற்றிக்கொள்ளும் சக்தி போன்ற சிறப்பம்சங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ரோபோவிற்கு முதலிடம் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ரோபோ போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த ரோபோக்கள் பங்கேற்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


இந்திய தொழில் நுட்ப நிறுவனமே இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டி வருடந்தோறும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தி.மு.. தலைவர் கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டிருக்கிறார்எ‌ன்று பா... ‌நிறுவனர் ராமதாஸ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்
!!!!!!!!!!!!!!!
பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்கள் பெய‌ர் நாளை அ‌‌றி‌வி‌க்க‌ப்படு‌‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி தலைவ‌ர் தொல்.திருமாவளவன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்
தமிழக‌த்த‌ி‌ல் தி.மு.. தலைமையிலான கூட்டணியில் உ‌ள்ள விடுதலை சிறுத்தைகள் க‌ட்‌சிகளு‌க்குசித‌ம்பர‌ம், ‌விழு‌ப்புர‌ம் ஆ‌கிய த‌னி‌த் தொகு‌திகளைதி.மு .. தலைவ‌ர் கருணா‌நி‌தி ஒது‌க்‌‌கினா‌ர்.

இதனைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் முதலமைச்சர் கருணாநிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நேற்று மாலை பேசினார்.

அப்போது, விழுப்புரம் தனித்தொகுதிக்கு பதிலாக, கள்ளக்குறிச்சி பொதுத் தொகுதியை விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கித்தர வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
×ÕfúN¬ LôXôlThÓ Uj§V £û\«p, Oô«tßd¡ZûU ØRp EiQô®WRm CÚkR §ûWlTP CVdÏSo ºUôu §eLs¡ZûU ©tTLp R]Õ EiQô®WRjûR ûL®hPôo.
CXeûLj RªZo ©Wfû]«p Ck§V Cû\VôiûUdÏ G§WôLl úT£VRôLj ùRôPWlThP YZd¡p CVdÏSo ºUôu LPkR ©lWY¬ 21-m úR§ ×ÕfúN¬ LôXôlThÓ £û\«p AûPdLlThPôo.
Ck¨ûX«p R]Õ EPp¨ûXûV LôWQm Lôh¥ £û\ Y[ôLj§p SûPlT«t£ ùNnV AàU§ úLô¬]ôo. CRtÏ £û\jÕû\ AàU§ UßjRûRj ùRôPokÕ Oô«tßd¡ZûU ØRp EiQô®WRm CÚkRôo.
Ck¨ûX«p §eLs¡ZûU, £û\jÕû\ LiLô¦lTô[o ù_VLôkRu ºUôàPu úTfÑ SPj§]ôo. EPtT«t£ Utßm SûPlT«t£ ùNnV AàU§ YZeLlTÓm G] ùR¬®jRôo. CûRj ùRôPokÕ ºUôu R]Õ úTôWôhPjûRd ûL®hÓ U§Vm EQÜ Nôl©hPôo.

!!!!!!!!!!!!!!!!
இந்திரா காந்தி குடும்பத்தில் மாறுபட்ட கொள்கை கொண்டவராக வருண் காந்தி இருப்பதால் அவர் பிரபலம் அடைவதை தடுக்க சூழ்ச்சி நடக்கிறதுஎ‌ன்று விஸ்வ இந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர் வேதாந்த‌ம் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

சென்னையில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், நம்நாட்டில் இந்து மக்கள் 85 சதவீதம் பேர் உள்ளனர். எந்த ஒரு நாட்டிலும் பாரம்பரிய கலாசாரத்தை யாரும் புறக்கணிக்க மாட்டார்கள் . ஆனால் நம் நாட்டில் மட்டும்தான் பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்கின்றனர்.

மக்களவை தேர்தலில் இந்துக்களுக்கு சரியான வழிகாட்டுதலை ஏற்படுத்த அறம் காக்கும் ஆன்றோர் பேரவையை உருவாக்கி இருக்கிறோம். இதில், மடாதிபதிகள், துறவிகள் பங்கேற்கின்றனர்.

நம் நாட்டை ஆன்மீக நாடாக அறிவிப்பது, மதமாற்றம் செய்வதை தடை செய்வது, பண்பாட்டு சின்னங்களை பாதுகாப்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை பேரவை மூலம் அறிவித்துள்ளோம் . இவற்றை ஏற்றுக் கொண்டு செயல்படுத்த எந்த கட்சிகள் முன்வருகிறதோ அந்த கட்சிகளுக்கு இந்துக்கள் ஓட்டு போட வேண்டும்.

இந்திரா காந்தி குடும்பத்தில் மாறுபட்ட கொள்கை கொண்டவராக வருண் காந்தி இருப்பதால் அவர் பிரபலம் அடைவதை தடுக்க சூழ்ச்சி நடக்கிறது எ‌ன்று வேதாந்தம் கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றினா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!
கேரளாவின் சேர்த்தலா நகருக்குள் கடல்வழியாக விடுதலைப்புலிகள் 15 பேர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து, அந்த பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

இலங்கை வன்னி பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்துவருகிறது. அங்குள்ள கடல் பகுதியிலும் இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவின் ஆலப்புழை மாவட்டம் சேர்த்தலா கடற்பகுதி வழியாக படகு ஒன்றின் மூலம் 15 விடுதலைப்புலிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
அவர்கள் அனைவரும் புலிகளின் சீருடை அணிந்து, தமிழில் பேசியதாகவும், அங்குள்ளவர்களிடம் ஆடைகள் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, எல்லைப்பாதுகாப்பு கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் அங்குள்ள கடற்கரைப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, தமிழகத்திற்குள் புலிகள் ஊடுருவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக காவல்துறை தலைவர் ஜெயின் கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரதமர் பதவிக்கு ஜெயலலிதாவின் பெயர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வது குறித்து தேர்தலுக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சிப் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இலங்கை தமிழர்கள் பிரச்னை தொடர்பாக தாங்கள் குரல் எழுப்பவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த பிரகாஷ்காரத், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தமது கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் கூறினார்.
தமிழகத்தில் தமது கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றி, மாநிலத் தலைவர்கள் அதிமுகவினருடன் விவாதித்து முடிவெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சி தங்கள் கூட்டணியில் இல்லை என்றும், நாடு முழுவதும் அக்கட்சியினர் தனித்துப் போட்டியிடுவதாகவும் பிரகாஷ்காரத் தெரிவித்தார்.
அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து தற்போதுள்ள சூழலில் எதுவும் கூறமுடியாது என்றும், ஜெயலலிதாவின் பெயர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவது பற்றி தேர்தலுக்குப் பிறகே முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக அணியில் தொகுதிகள் பங்கீடு செய்வதில் கூட்டணி கட்சிகளுக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி ஒதுக்கப்படாதது, கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது . மாவட்டம் முழுவதும் பெரும் ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் உள்ள இரண்டு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், சென்னை சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.
இதனிடையே, தொகுதிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் கட்சித் தலைவர்களிடையே சிக்கல் எழுந்துள்ளது. இதன்காரணமாக , மாநில தலைவர்கள் பலர் டெல்லிக்கு படையெடுத்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
இதேபோல, அதிமுக அணியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை உட்பட 3 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், மதுரைக்குப் பதிலாக திருப்பூர் தொகுதியை ஒதுக்குமாறு மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் சிக்கல் நீடிக்கிறது.
டெல்லியில் இருந்து அவசரமாக நேற்று சென்னை வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் , அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், மதிமுகவிற்கு தொகுதிகள் ஒதுக்குவதில் எழுந்துள்ள சிக்கல் நீடித்து வருகிறது.
3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று அதிமுக உறுதியாகத் தெரிவித்துவிட்டதாகவும், இதனால், பேச்சுவார்த்தை கூட நடைபெறாமல் இழுபறி நீடித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள விஜயகாந்த், எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.
!!!!!!!!!!!!!!!!!!
1993 மு‌ம்பை கு‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் த‌ண்டனை பெ‌ற்று‌ள்ள நடிக‌ர் ச‌ஞ்ச‌‌ய் த‌த், வரு‌கிற ம‌க்களவை‌த் தே‌ர்த‌லி‌ல் ல‌க்னோ தொகு‌தி‌யி‌ல் சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌யி‌ன் சா‌ர்‌பி‌ல் போ‌ட்டி‌யிட அனும‌தி கோ‌ரி‌த் தா‌க்க‌ல் செ‌ய்த மனுவை ‌விசா‌ரி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம், ‌தீ‌ர்‌ப்பை ‌நிறு‌த்‌திவை‌த்து‌ள்ளது.

ச‌ஞ்ச‌ய் த‌த் தர‌ப்பு வாத‌த்தையு‌ம், அவரை எ‌தி‌ர்‌த்து ம‌த்‌திய‌ப் புலனா‌ய்வு‌க் கழக‌ம் தர‌ப்‌பி‌ல் செ‌ய்த வாத‌த்தையு‌‌ம் கே‌ட்ட உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த் தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி. பால‌கிரு‌ஷ்ண‌ன் தலைமை‌யிலான முத‌ன்மை அம‌ர்வு, தனது ‌தீ‌ர்‌ப்பை ‌நிறு‌த்‌திவை‌ப்பதாக இ‌ன்று அ‌றி‌வி‌த்தது.

ச‌ஞ்ச‌ய் த‌த் தர‌ப்‌பி‌ல் வா‌தி‌ட்ட மூ‌த்த வழ‌க்க‌றிஞ‌ர் ஹ‌ரீ‌ஸ் சா‌ல்வே, ச‌ஞ்ச‌ய் த‌த்‌தி‌ன் ஒ‌ப்புத‌ல் வா‌க்குமூல‌‌த்‌தி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ம‌ட்டுமே அவ‌ரு‌க்கு ஆயுத‌ச் ச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் த‌ண்டனை வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், மு‌ம்பை தடா ‌நீ‌திம‌ன்ற‌ம் கூட ச‌ஞ்ச‌ய் த‌த் அபாயகரமான கு‌ற்ற‌ங்க‌ளி‌ல் ஈடுபட‌வி‌ல்லை எ‌ன்று கூ‌றியு‌ள்ளது எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

தடா ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் கரு‌த்தை கவன‌த்‌தி‌ல் கொ‌ண்டு ச‌ஞ்ச‌ய் த‌த்‌தி‌ன் த‌ண்டனையை ‌நிறு‌த்‌திவை‌த்து அவரு‌க்கு‌த் தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிட வா‌ய்‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் சா‌‌ல்வே கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர்.

இதை எ‌தி‌ர்‌த்து வா‌தி‌ட்ட ம‌த்‌திய‌ப் புலனா‌ய்வு‌க் கழக‌த் தர‌ப்பு, ச‌ஞ்ச‌ய் த‌த்‌தி‌ன் வா‌க்குமூல‌த்‌தி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ம‌ட்டும‌ல்லாது, ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ஆயுத‌ங்க‌ள், ஆவண‌ங்க‌ள் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் அடி‌ப்படை‌யிலு‌ம் சே‌ர்‌த்தே ச‌ஞ்ச‌ய் த‌‌த்‌தி‌ற்கு த‌ண்டனை அ‌‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தது.
!!!!!!!!!!!!!!!!!!
AwUp LNôl Nôo©p ¿§Uu\j§p B_WôY§pûX G] AYÚdLôL ¨VªdLlThP YZdL±Oo AgN# YôdUôúW ùR¬®jÕs[ôo.
ØmûT TVeLWYôRj RôdÏR#uúTôÕ ©¥ThP TVeLWYô§Vô] AwUp LNô©u úLô¬dûL«uT¥, AYÚdLôL ¿§Uu\j§p YôRôÓYRtLôL YZdL±Oo AgN# YôdUúW ¨VªdLlThPôo. CkR ¨VU]jÕdÏ AgN#Ùm Jl×Rp A°jRôo.
Ck¨ûX«p, LNôl Nôo©p B_WôYRtÏ G§ol×j ùR¬®jÕ, ØmûT Yôo# úLml Tϧ«Ûs[ AgN#«u CpXm ÁÕ £Xo úStß RôdÏRp SPj§]o. C§p VôÚdÏm LôVúUtTP®pûX. úTôÄ^ôo R¥V¥ SPj§d áhPjûRd LûXjR]o.
CkRf NmTYjûRj ùRôPokÕ, UdLs EQoÜLÞdÏ U§lT°dÏm YûL«p LNôl YZd¡p B_WôY§pûX G] AgN# ùR¬®jÕs[ôo.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ùTôs[ôf£ Utßm DúWôh¥p SPjRlThP §¼o úNôRû]«p ÑUôo 16 B«Wm ¡úXô LXlTP ¼ çs §eLs¡ZûU T±ØRp ùNnVlThPÕ.
ùTôs[ôf£ Utßm DúWôh¥p £X ϱl©hP ©Wôih ùTVo ùLôiP ¼ ç°p LXlTPm ùNnYRôLj úR«ûX Yô¬V A§Lô¬LÞdÏj RLYp ¡ûPjRÕ. AûRVÓjÕ A§Lô¬Ls LiLô¦lûTj ¾®WlTÓj§]o.
ùTôs[ôf£«p ©WTXUô] JÚ ¼ çs E¬ûUVô[¬u ÅÓ Utßm ÏúPô²p úNôRû] SPj§]o. DúWôh¥p Utù\ôÚ ÏÝ®]o úNôRû] SPj§]o. CÚ CPeL°Ûm CÚkR ¼ ç°p Øk§¬j úRôp Utßm LXo ùTô¥Lû[f úNojÕd LXlTPm ùNn§ÚlTÕ ùR¬V YkRÕ. EPp SXàdÏ CkR ¼ LÓûUVôLd úLÓ ®û[®dLd á¥VÕ. LXlTPm ùNnRYoLs ÁÕ NhPlT¥ SPY¥dûL GÓdLlTÓm Guß úR«ûX Yô¬V ùNVp CVdÏSo Sºm ùR¬®jRôo.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மாநில காங்கிரஸ் காரிய கமிட்டிஉறுப்பினர் சென்னை சேத்துப்பட்டு ஜெகநாதபுரத்தை சேர்ந்தபிரகாஷ் , வீட்டின் kPJ நேற்று Kd; jpdk; இரவு2 மணி அளவில் யாரோ சில மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசிjhf;Fjy; elj;jpAs;sdH.
இதில் பால்கனி சுவர் மற்றும் தரையில் பெட்ரோல் பரவி தீ எரிந்தது. அந்த அறை முழுவதும் பாட்டில் சிதறல்கள் கிடந்தது. அதிகாலை 4 மணி அளவில் கருகிய வாசனை வீசியதால் அலறிடித்து எழுந்த பிரகாஷ் பால்கனிக்கு வந்து பார்த்தார். அங்கு பெட்ரோல் குண்டு வீசியிருப்பது தெரிய வந்தது.
உடனடியாக சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ராஜாமணி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர் .
மாற்று கட்சியினர் யாருக்காவது இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது இந்த செயலில் ஈடுபட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
பாகிஸ்தானின் லாகூர் நகரில் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக் கட்டிடத்தை 8 மணிநேர போராட்டத்தின் பின்னர் பாதுகாப்புப் படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர் .
இந்த மோதல்களில் அதிகாரிகள் சிலர் கொல்லப்பட்டுள்ளனர், வேறு சிலர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டிருந்தார்கள்.
கைக்குண்டுகளை வீசித் தாக்கிய தீவிரவாதிகள் மீது ஆயுதப்படையினர் திடீர் தாக்குதல் நடத்திய போது, இராணுவ உலங்கு வானூர்திகள் வானில் இருந்து பயிற்சிக் கல்லூரி மீது குண்டுகளை வீசின.
எமது பிபிசி நிருபர் அந்த கட்டிடத்துக்குள் நுழைந்து எமக்கு தகவல் தருகையில் , இந்த மோதல்களில் குறைந்தது மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், இருவர் தமது குண்டுகளை வெடிக்கச் செய்து இறந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சேதங்கள் குறித்த விபரங்கள் வேறுபடுகின்றன. துப்பாக்கிதாரிகள் உட்பட குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!
Fiwe;jJ 250 rl;ltpNuhj FbNaw;wf;fhuh;fSld; INuhg;hNehf;fp gpuahzpj;j fg;gy; xd;W ypgpahtpw;f;F mUfpy;cs;s flypy; Ko;fpajhfTk; ,Jtiu ; 20Ngh; khj;jpuk; kPl;fgl;ljhfTk; 21 rlyq;fs; fz;nlLf;g;gl;ljhfTk; jpupNghyp nra;jpfs; njuptpf;fpd;wd. VidNahiu NjLk; gzpapy; ypgpa fiuNahu fhty;gilapdh; ,LgLj;jg;gl;L cs;sjhf mq;fpUe;J fpilf;Fk; nra;jpfs; njuptpf;fpd;wd.
!!!!!!!!!!!!!!!!!
,NjNtisapy; Fiwe;jJ 342 rl;ltpNuhj FbNaw;wf;fhuh;fSld; INuhg;hNehf;fp gpuahzpj;j ypgpahtpy;ypUe;J Gwg;gl;l,d;NdhUfg;gYk; flypy; Ko;fpAs;sjhf
reuters nra;jpfs; njuptpf;fpd;wd
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானிய போராளிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, அந்நாட்டு தலைவர்களுடன் கலந்தாலேசிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார்.

“”பாகிஸ்தானுடனான கலந்தாலோசிப்பிற்கு பிற்பாடு நாம் அங்கு எமக்கு முக்கியத்துவமான இலக்குகள் இருக்குமாயின் நாம் அவற்றின் பின் செல்வோம்என அவர்சி.பி.எஸ்.’தொலைக்காட்சிச் சேவைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்தார்.

எனினும் பாகிஸ்தானிய பிராந்தியத்தில் தரைவழித் தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டம் தனக்கு இல்லை என்று அவர் கூறினார் . “”பாகிஸ்தான் ஒரு இறைமையுள்ள நாடு அமெரிக்காவின் பிரதான கொள்கையானது தீவிரவாதிகளைத் தோற்கடிப்பதற்கு பாகிஸ்தானுக்கு உதவுவதாகும்எனக் குறிப்பிட்ட ஒபாமா, “”நாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றவேண்டியுள்ளது. அவர்கள் மூலமாகவே நாம் அல்கொய்தாவை கையாளவேண்டியுள்ளதுஎன்று தெரிவித்தார்.

“”நாங்கள் அல்கொய்தா போராளிகள் குழு வலைப்பின்னலை வேரோடு களைய வேண்டியுள்ளது. அவர்கள் எமது மண்ணில் அமெரிக்கப் பிரஜைகளையும் உலகெங்குமுள்ள அமெரிக்க மற்றும் அமெரிக்க நட்புறவு நாடுகளின் அக்கறைகளையும் தாக்காதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதுஎன ஒபாமா கூறினார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய எல்லை பிராந்திய போராளிகளுடன் பாகிஸ்தானிய புலனாய்வு பிரிவான.எஸ்..’க்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அரபு நாடுகளின் வருடாந்த உச்சிமாநாடு திங்கட்கிழமை கட்டாரில் ஆரம்பமானது.

இந்த உச்சிமாநாட்டின் ஆரம்ப நாளில் மேற்படி அரபு அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 22 நாடுகளில் 17 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த இரு நாள் உச்சிமாநாட்டின் முதல் நாள் கூட்டமானது சிரிய ஜனாதிபதி பஷார் அல்அஸாத்தின் உரையுடன் ஆரம்பமானது . டார்பூரில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள சூடான் ஜனாதிபதி ஓமர் அல்பஷீரும் இம் மாநாட்டில் கலந்து கொண்டார் .

மேற்படி குற்றச்சாட்டுகளின் நிமித்தம் கடந்த 4 ஆம் திகதி ஒமர் அல்பஷீரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடி ஆணையை பிறப்பித்திருந்தது. கட்டாரின் தலைநகருக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க செயலாளர் பான் கீ மூனும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

“”சூடான் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடாகும். இந்நிலையில் சுதந்திர நீதி அமைப்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சூடானுடன் ஐக்கிய நாடுகள் தொடர்பு கொள்வதை தடுக்க முடியாதுஎன ஐக்கிய நாடுகள் அதிகாரி ஒருவர் கூறினார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
sports
Sunday, 29 March 2009
One Day International Series
West Indies: 239-9 ( 50.0 overs )
England: 136-1 ( 18.3 overs )
England beat West Indies by 9 wickets (D/L)

International Twenty20 Series
South Africa: 156-5 ( 20.0 overs )
Australia: 139-8 ( 20.0 overs )
South Africa beat Australia by 17 runs
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

1 euro = 152.40sl /67.53in
1us $ = 115.05sl /50.98in
1swiss fr = 100.45sl /44.51in
1uk pound = 164.49sl /72.89in
1saudi riyal =30.68sl /13.59in

Leave a Reply

Your email address will not be published.