ஜெனரல் மோட்டார், கிரிஸ்லர் திவால்?

அமெரிக்காவின் புகழ் பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ், கிரிஸ்லர் ஆகிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கார் உற்பத்தி செய்யும் ஜெனரல் மோட்டார்ஸ், கிரிஸ்லர் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு புத்துயிர் ஊட்ட அமெரிக்க அரசு நிதி உதவி செய்யும் திட்டத்தை அறிவித்தது. அத்துடன் பல நிபந்தனைகளையும் விதித்தது.
வாகன உற்பத்தி துறைக்கு உதவி செய்வது பற்றி ஆராய, வாகன துறை சிறப்பு குழுவையும் அமைத்தது. ஆனால் இதனால் எவ்வித பலனும் ஏற்படாது என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அரசின் வாகன துறை சிறப்பு குழு, இரண்டு நிறுவனங்களுக்கும் மீள முடியாத அளவிற்கு கடன்கள் உள்ளன. இந்த நெருக்கடிக்கு ஒரே தீர்வு, நிறுவன திவாலா விதிகளை பயன்படுத்தி, கடுமையான நடவடிக்கை எடுப்பது தான் சிறந்த வழி என்று கூறியுள்ளது.

இந்த திவாலா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தால், ஜெனரல் மோட்டார்ஸ், கிரிஸ்லர் வாகன நிறுவனங்களின் பழைய கடனை தீர்க்க முடியும். அப்போது தான் மீண்டும் கார் உற்பத்தியில் ஈடுபட்டு, ஊழியர்களுக்கு வேலை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளது.

அமெரிக்க அரசு இரண்டு கார் நிறுவனங்களுக்கும் ஏற்கனவே 17 பில்லியன் டாலர் நிதி உதவி செய்துள்ளது. இவை மேலும் 21 பில்லியன் டாலர் தேவை என்று கோரி வருகின்றன.

இந்த இரண்டு நிறுவனங்களும் மீளமுடியாத கடன் சுமையில் சிக்கியுள்ளன. எனவே புதிதாக தொடங்குவதுதான் சிறந்தது என்று கூறி, இவற்றின் கோரிக்கையை ஒபாமா அரசு நிராகரித்து உள்ளது.

இந்த தகவல் வெளியானவுடன் நேற்று நியுயார்க் பங்குச் சந்தையில் ஜெனரல் மோட்டார் பங்கு விலை 25 விழுக்காடு சரிந்தது.

Source & Thanks : tamil.webdunia

Leave a Reply

Your email address will not be published.