அந்த கால’ ரேடார்களால் பெரும் அவதி: விமான போக்குவரத்தில் அடிக்கடி சிக்கல்

சென்னை: சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் உள்ள ரேடார்கள் அடிக்கடி பழுதாவதால், அவ்வப்போது விமான போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்படுகிறது. விமான கட்டுப்பாட்டு அறைக்கான ரேடார்களும், உபகரணங்களும் நவீனப்படுத்தப் படாதது தான் தொடரும் இந்த ஆபத்தான பிரச்னைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


சென்னை விமான நிலையத் தில் தினசரி நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்றன. இந்த விமானங்கள் சரியாக வந்து புறப்படவும், இறங்கவும் உதவுவது “ஏ.டி.சி’ என்று அழைக்கப்படும் வான்வெளி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் பணி. கட்டுப்பாட்டு அறையில் உள்ள ரேடார்களை பராமரிக்கும் பணி நேற்று முன்தினம் நடந்தது. காலை 8 மணிக்கு துவங்கிய இந்த பணி மாலை 6 மணிக்கு முடிந்தது. இதனால் 10 மணி நேரத்திற்கு விமான போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டது.

சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இரண்டு ரேடார்கள் மட்டுமே உள்ளன. அவையும் மிகவும் பழையவை என்பதால் அடிக்கடி பழுதடைகின்றன. கடந்த ஆண்டின் பின் பகுதியில் நான்கு முறை இந்த ரேடார்கள் பழுதடைந்தன. அதுபோன்ற நேரங்களில், விமான பைலட்டுகளுடன் “வாய்ஸ் கன்ட்ரோல்’லில் தொடர்பு கொண்ட கட்டுப்பாட்டு அதி காரிகள், விமானம் செலுத்து வது, திசை, உயரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவர் களுக்கு அளித்தனர். “இவ்வாறு பைலட்டுகளுடன் தகவல்களை பரிமாறிக் கொள்வது கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு கூடுதல் சுமையை கொடுக்கிறது. இது, சில நேரங் களில் பைலட்டுகளுக்கு தவறான வழிகாட்டுதலாக அமைந்து பேராபத்து விளையும்’ என்கின் றனர் அதிகாரிகள்.

இங்குள்ள ரேடார்கள் கடந்த 1990ம் ஆண்டு அமைக்கப்பட்டவை. 19 ஆண்டுகள் பழமையானவை. இந்த ரேடார்கள் இரண்டும் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் நான்கு முறை பழுதடைந் துள்ளன. 250 நாட்டிகல் மைல் வரை பயன்படுத்தக் கூடிய இரண்டாம் கட்ட ரேடார் அடிக் கடி பழுதடைந்துவிடுகிறது. இந்த நேரத்தில் ஐந்து முதல் 10 நிமிடங்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. தென்னிந்தியாவில் பறக்கும் விமானங்களை கண்காணிக்கும் சென்னை “விமான தகவல் மண்டலம்’ முக்கியமானது. இப்பகுதியில் பறக்கும் விமானங்களை கண்காணிக்கும் பொறுப்பு சென்னை விமான கட்டுப்பாட்டு அறையின் கீழ் உள்ளது. இவ்வாறு முக்கியமான இடத்தில் உள்ள இந்த ரேடார்கள் அடிக்கடி பழுதடை வது விமான போக்குவரத்தை பெரிதும் பாதிக்கும்.

“இங்கு பொருத்தப்பட்டுள்ள ரேடார்கள் குறைவான விமான போக்குவரத்து இருந்த காலத் திற்கு பொருத்தமானது. கடந்த 2002ம் ஆண்டுக்கு முன் ஒரு மணி நேரத்தில் 25க்கும் குறைவான விமானங்கள் வந்து சென்றன. தற்போது விமான போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் அதற்கு தகுந்தவாறு தற்போது ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’ என்றார் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரேடார் பராமரிப்பு என்பது இரவில் செய்யப்படும்.

ஏனெனில், அந்த காலத்தில் இரவில் விமான போக்குவரத்து குறைவாக இருக்கும். ஆனால், இப்போது இரவில் ஒரு மணி நேரத்தில் குறைந்தது 16 விமானங்கள் வந்து செல் கின்றன. இந்நிலையில், அதிக நேர ரேடார்களின் பராமரிப்பு என்பது விமான போக்குவரத்தை பாதிக்கும்.

இரண்டாவது ரேடார் எப்போதும் சரியாக செயல் படாது. ஐதராபாத், பெல்லாரி போன்ற இடங்களுக்கு மேல் சிக்னல்கள் மிகவும் குறைவாக இருக்கும். இங்கு பல வான் வழிகள் குறுக்கிடுவதால் சக்தி வாய்ந்த சிக்னல்கள் தேவை என்பது பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இது இன்னும் செயல்படுத்தப்படவில்லை. பல நேரங்களில் பைலட்டுகள் வி.எச்.எப்.,ல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, தாங்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டுள்ளனர்.

சென்னை-மும்பை வழித்தடத்தின் இடையே ஐதராபாத், பெங்களூரு போன்ற இடங் களும், சென்னை-ஐதராபாத்-டில்லி வழித்தடத்தில் பெங்களூரு -கோல்கட்டா வழித்தடமும் அமைந்துள்ளன. இந்த வழித்தடங்கள் பல் வேறு உயரங்களில் அமைந் துள்ளன என்றாலும், சென்னை, பெங்களூரு, ஐதராபாத்தில் விமானங்கள் இறங்கும் போது, ஏறும் போதும் சிக்கலாகிறது’ என்றார்.

நவீன வசதிகள் இல்லை: பத்து மணி நேர ரேடார் பராமரிப்பு பணியால் சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் ஏராளமான விமானங்களும், அதில் பயணம் செய்த பயணிகளும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “இங்குள்ள ரேடார்களுக்கான பராமரிப்பு பணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. இது அவசியமான ஒரு விஷயமாகும். ஆனால், மும்பை மற்றும் டில்லியில் உள்ளது போன்ற “பேக்-அப் ரேடார்’ வசதி இங்கில்லை. “இதன் காரணமாக, விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கீழிறங்கவும், மேலே செல்லவும் போதுமான இடைவெளி கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால் விமான போக்குவரத்து தாமதமானது’ என்றார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.