மேல்மாகாணசபைத் தேர்தலுக்கு (ஏப்ரல் 25) முன் புலிகளை அரசு முற்றாக அழித்துவிடும்: அமைச்சர் சமரசிங்க சொல்கிறார்

நடைபெறவுள்ள மேல்மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் (ஏப்ரல் 25) புலிகளை அரசு முற்றாக அழித்துவிடும். புலிகளும், அவர்களின் தலைவர் பிரபாகரனும் இல்லாத நிலையிலேயே எமது மக்கள் தேர்தலில் வாக்களிக்கச் செல்வார்கள். இவ்வாறு மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருக்கின்றார்.

ஹம்பாந்தோட்டை வீரக்கெட்டியவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டும் எமது யுத்தம் இப்போது இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது. வடக்கு கிழக்கில் புலிகளின் வசமிருந்த அனைத்துப் பகுதிகளும் பொரும்பாலும் மீட்கப்பட்டுவிட்டன. இப்போது புலிகள் 21 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பிற்குள் முடக்கப்பட்டுள்ளனர். அந்த 21 சதுர கிலோ மீற்றர் நிலத்தையும் பிடித்து புலிகளை முற்றாக இல்லாதொழிக்க வெகு நாள்கள் செல்லாது.

யுத்தத்தில் ஈட்டப்படும் பாரிய வெற்றிகளை கௌரவிக்கும் வகையில் மக்கள் அனைத்துத் தேர்தல்களிலும் அரசை ஆதரிக்கின்றனர். இது யுத்தத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றது.

மேல் மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாக இந்தப் பயங்கரவாதம் முற்றாக ஒழித்துக்கட்டப்படும் என்று நான் நூறு வீதம் நம்புகிறேன். புலிப் பயங்கரவாதமும் அந்தப் பயங்கர வாதத்தின் தலைவர் பிரபாகரனும் ஒழித்துக்கட்டப்பட்ட நிலையில்தான் மேல்மாகாண மக்கள் தேர்தல் தினத்தன்று வாகக்ளிக்கச் செல்வர்.

மேல்மாகாண சபைத் தேர்தலில் அரசை வெற்றி பெறச் செய்வதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். எல்லாத் தேர்தல்களையும் போல் இந்தத் தேர்தலிலும் எமக்கு எவரும் போட்டியில்லை. எமது வெற்றி என்றோ உறுதியாகிவிட்டது.

எதுவித சிரமமுன்றி மீண்டும் மேல் மாகாணசபையில் ஆட்சியை நடத்துவோம் என்றார். மேல் மாகாண சபைத் தேர்தலில் அடுத்த மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது தெரிந்ததே.

Source & Thanks : .tamilwin

Leave a Reply

Your email address will not be published.