இலங்கை பிரச்னைக்கு அரசியல் சாயம் பூச முடியாது : எதிர்கட்சிகளுக்கு கருணாநிதி விளக்கம்

சென்னை : இலங்கை பிரச்னைக்கு அரசியல் சாயம் பூசு நினைக்கிறார்கள் , அது முடியாது என எதிர்கட்சிகளுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில், தி.மு.க., சொற்‌பொழிவார்கள் கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் பேசி‌ய முதல்வர் கருணாநிதி கூறியதாவது : மத்திய , மாநில அரசுகள் மீது எந்த குற்றமும் சொல்ல முடியாத எதிர்கட்சிகள் இலங்கை பிரச்னைக்கு அரசியல் சாயம் பூச நினைக்கின்றன . இது நடக்காது . தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க., சொற்பொழிவார்கள் இலங்கை பிரச்னையை எதிர்கட்சிகள் அரசியலாக்கி வருவதை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் . இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.