பாக். பயங்கரவாதம் உலகின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல்: இந்தியா

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் நடவடிக்கை அந்நாட்டிற்கு மட்டுமின்றி, உலகின் நிலைத்தன்மைக்கே ஒரு அச்சுறுத்தலாகியுள்ளது என்று அயலுறவுத் துணை அமைச்சர் ஆனந்த சர்மா கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில், காவலர் பயிற்சிப் பள்ளி மீது இன்று காலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர், 50க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

இதுகுறித்து அமைச்சர் ஆனந்த சர்மாவிடன் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, பாகிஸ்தானில் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்புகளால் அந்நாட்டிற்கு, தெற்காசிய மண்டத்திற்கும் மட்டுமின்றி, உலக நாடுகளுக்கே ஒரு அச்சுறுத்தாலாகும் என்றும், எனவே அதனை ஒடுக்க தீவிர நடவடிக்ககைகள் தேவை என்றும் கூறினார்.

Source & Thanks : tamil.webdunia

Leave a Reply

Your email address will not be published.