நாளை மறுநாள் உத்தரவாத கடிதம் டி.எல்.எப்., நிறுவனம் முடிவு

சென்னை: டி.எல்.எப்., நிறுவனத்தில் பிளாட் வாங்க பணம் செலுத்தி, தற்போது விருப்பமில்லாதவர்களுக்குப் பணத்தைத் திரும் பத்தர நிறுவனம் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, அதற்கான உத்தரவாதக் கடிதத்தை நாளை மறுநாள் பெற்றுக் கொள்ளுமாறு முதலீட்டாளர்களை நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.


பழைய மகாபலிபுரம் சாலையில், பிரபல கட்டுமான நிறுவனம் டி.எல். எப்., அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதாக அறிவித்தது. இதில், 1,800க்கும் அதிகமான குடியிருப்புகள் முன்பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகள் டி.எல்.எப்., நிறுவனம் மீது எழுந்தது. இதனால், நிறுவனத்தார் பிளாட் விலையைக் குறைத்ததோடு, விருப்பமில்லாதவர்களுக்குப் பணத்தைத் திருப்பித்தரவும் முன்வந்தனர்.

கடந்த 23ம் தேதி முதலீட்டாளர்கள், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள டி.எல்.எப்., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், முன்பதிவு செய்து பணம் செலுத்தி, விருப்பமில்லாதவர்களுக்குப் பணம் திரும்பத் தருவதற்கான உத்தரவாதக் கடிதம் வரும் 1ம் தேதி மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை நிறுவனத்தில் நேரில் பெற்றுக் கொள்ள வேண்டும். வர முடியாத முதலீட்டாளர் களுக்கு கூரியர் மூலம் உத்தரவாதக் கடிதம் அனுப்பி வைக்கப்படும்’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.