மக்களை வெளியேறப் புலிகள் அனுமதிப்பின் இடைக்காலப் போர் நிறுத்தத்துக்குத் தயார். இலங்கைக்கான ஐ.நா. தூதுவர் பாலிகக்காரா அறிவிப்பு.

இலங்கையில் வடக்கு பகுதியில் மோதலை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை வலி யுறுத்திவரும் நிலையில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ்மக்கள் அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு செல்வதற்கு விடுதலைப்புலிகள் அனுமதியளித்தால் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்த இணங்குவது சாத்தியமென இலங்கை அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.


இந்தமக்களை (தமிழ்பொதுமக்கள்) வெளியேற புலிகள் அனுமதியளிக்க தயாரெனில் குறைந்தது அவர்களில் ஒரு பகுதியினரையாவது செல்வதற்கு அனுமதியளித்தால் தற்காலிக சண்டைநிறுத்த அனுசரணையை வழங்க அரசாங்கம் இணங்கக்கூடும் என்று ஐ.நா. விலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி எச்.எம். ஜி.எஸ் பளிகக்கார கூறியுள்ளார்.

இதனை குறுகியகால இடைநிறுத்தம் என்றோ அல்லது அரசு முன்னர் வழங்கிய 48 மணிநேரம் என்றோ கருதமுடியும் என்று நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் வைத்து அவர் நிருபர்களிடம் கூறியுள்ளார்.

புலிகள் அவர்களை வெளியேறவிடவில்லை என்பதே இந்த விடயமாகும். அவர்களை மனிதக்கேடயங்களாக வைத்திருக்க அவர்கள் முயற்சிக்கின்றனர் என்று பளிககார கூறியுள்ளார்.

அத்துடன் பாதுகாப்பு வலயத்திற்குள் கனரக ஆயுதங்களை படையினர் பயன்படுத்துவதில்லை என்று அவர் உறுதியதாக தெரிவித்திருக்கிறார். ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டின்மீது தாக்குதல் நடத்துவது போன்ற சூழ்நிலையில் அந்தமாதிரியான குறுகிய வீச்சு கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான சாத்தியம் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் மோதல் சூனியப்பகுதிகளிலிருந்து தாக்குதல் நடத்துவது உங்களுக்குத் தெரியும்.சம்பவங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும் ?எனக்குத் தெரியாது. ஊகிக்கிறேன். தன்னால்லான வாரம் திரும்ப தாக்குதல் இடம்பெற்றிருக்கக்கூடும். ஆனால், படையினர் வேண்டுமென்று தாக்குதல் நட்ததுவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Source & Thanks : tanilwin

Leave a Reply

Your email address will not be published.