விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருப்பதாக வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது: அரசாங்கம்

வன்னியில் அரச இராணுவத்திற்கு எதிராக யுத்தத்தை மேற்கொண்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மேலும் இலகு ரக விமானங்கள் காணப்படுவதாகவும், எதிர்காலத்தில் வான் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் எனவும் இந்திய ஊடகங்கள்
செய்தி வெளியிட்டிருந்தன.

விடுதலைப் புலிகளிடம் மேலும் விமானங்கள் இருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என விமானப்படைப் பேச்சாளர் ஜனக நாணயக்கார
தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் காணப்பட்ட நான்கு விமானங்களையும் படையினர் வெற்றிகரமாக அழித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏழு விமான ஓடு தளங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருப்பதாகவும், சிவிலியன்கள் அதனை நேரில் பார்த்ததாகவும் இந்திய செய்திகள் தகவல்
வெளியிட்டுள்ளன.

பிரபாகரனின் அவசரத் தேவைக்காக ஒரு விமானம் ஒதுக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக பாதுகாப்பு ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.