யுத்தம் காரணமாக இலங்கை மக்கள் பல வேதனைகளை அனுபவித்து வருவதாக ஷிவ்சங்கர் மேனன் தெரிவிப்பு

இலங்கையில் இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக மக்கள் பெரும் வேதனைகளை அனுபவித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
கடந்த 23 ஆண்டுகளாக தொடரும் யுத்தம் காரணமாக அப்பாவிப் பொது மக்கள் பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகில இந்திய வானொலிச் சேவைக்கு அளித்த விசேட செவ்வியின் போது இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலளர் இதனைத் தெரிவித்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்க்கை நிலையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர சகலவிதமான உதவிகளையும் வழங்கத் தயார் எனவும் மேலும் யுத்தம் காரணமாக இலங்கையில் அப்பாவிச் சிவிலியன்கள் எதிர்நோக்கி வரும் சிக்கல்கள் குறித்து அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அவர் அந்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

Source & thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.