இந்திய அரசு தவறு செய்வதால் தான் இலங்கையில் தமிழ் மக்கள் அவதிப்படுகின்றார்கள்: சிறீ சிறீ ரவிசங்கர்

இலங்கைத் தமிழர்களை பொறுத்தவரையில் இந்திய அரசு பெரும் தவறு செய்து கொண்டிருக்கிறது. இப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் இந்திய அரசு எப்போதுமே உரிய நேரத்தில் சரியான கொள்கைகளை வகுத்ததில்லை. அதனால்தான் தமிழ்மக்கள் அங்கு அவதிப்படுகிறார்கள் என்று சிறீ சிறீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா, கனடா உட்பட பல்வேறு நாடுகளுக்கு அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள வாழும் கலை அமைப்பின் தலைவரும் ஆன்மீக குருவுமான ரவிசங்கர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

இலங்கைத் தமிழர்கள் தன்மானத்துடனும் சமாதானத்துடனும் வாழ வேண்டும் என்றால் தற்போது இந்தியாவில் உள்ள மத்திய அரசு மாற வேண்டும் என தெரிவித்தார்.

ஐரோப்பாவிலும் கனடாவிலும்வாழும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் தொடர்பான தங்களுடைய வேதனைகளை தெரிவித்தனர்.

இலங்கைத் தமிழர்கள் குறித்த கொள்கையைப் பொறுத்தவரையில் இந்திய அரசு பெரும் தவறு செய்து கொண்டிருக்கிறது. இப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் இந்திய அரசு எப்போதுமே உரிய நேரத்தில் சரியான கொள்கைகளை வகுத்ததில்லை. அதனால்தான் தமிழ்மக்கள் அங்கு அவதிப்படுகிறார்கள்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தீர்வு காணாமல் போனதற்கு இந்திய அரசின் குறுகிய மனப்பான்மையும் முதுகெலும்பு இல்லாத கொள்கைகளுமே காரணம். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறிப்பாக தெற்காசியாவுக்கான கொள்கைகள் மிகவும் மோசமானவை.

அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு, அது நேபாளமாக இருந்தாலும், பங்களாதேஷ் அல்லது இலங்கையாக இருந்தாலும் நம்பிக்கையூட்டுவதாக இல்லை.தெற்காசிய நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியத்தில் இந்தியா வலுமிக்க பெரிய தலைமையாக உருவாகி இருந்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பு இப்போது கைநழுவிப் போய்விட்டது.

ஒரு நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் முழு உரிமையும் பொது மக்களுக்கே உண்டு. அதை குறிப்பிட்ட ஒரு கட்சியின் தலைமைக்கோ அல்லது சமூகத்தில் உள்ள சிலருக்கோ எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக்கொடுத்துவிட முடியாது. என்றார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.