தென்தமிழீழத்தில் இருவேறு இடங்களில் விடுதலைப் புலிகள் தாக்குதல்

தென்தமிழீழத்தில் இருவேறு இடங்களில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதுளை வீதியில் உறுகாமத்திற்கும் கித்துள் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்த வீதித்தடை முகாம் மீது நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:45 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, அம்பாறை மாவட்டம் 16 ஆம் கிராமத்தில் இன்று காலை 6:30 நிமிடமளவில் ஊர்காவல் படையினர் மீது விடுதலைப் புலிகள் பொறிவெடித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் ஊர்காவல் படையைச் சேர்ந்த இருவர் சிக்கி தமது கால்களை இழந்துள்ளனர்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.