‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (29.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் பிரதி ஆணையாளர் ஜோன் ஹோல்ம்ஸிற்கும்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரதிநிதி குமரன் பத்மநாதனுக்கும் இடையில் நடைபெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அரசாங்கத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறெனினும், ஜோன் ஹோல்ம்ஸிற்கும், குமரன் பத்மநாதனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றமையை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். எனினும், இருவருக்கும் இடையில் தொலைபேசிப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அமெரிக்கத் தூதுவர் ரொபர் ஓ பிளெக் அண்மையில் இலங்கையின் ஊடகமொன்றுக்கு செய்தி வெளியிட்டுள்ளார். சிவலியன்களை விடுவிப்பது குறித்து விடுதலைப் புலி பிரதிநிதியுடன் ஜோன் ஹோல்ம்ஸ் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் எவ்வித பிழையையும் தாம் காணவில்லை எனவும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத அமைப்புடன் ஐக்கிய நாடுகள் அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கத் தூதுவர் பிளெக் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்மநாதன் ஓர் சர்வதேச பயங்கரவாதி எனவும், சர்வதேச காவற்துறையினரால்; தேடப்பட்டு வரும் நபர் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். இவ்வாறான பயங்கரவாதி ஒருவருடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்துவது சட்டவிரோதமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சட்டவிரோத தொலைபேசி உரையாடல் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டால் அதற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ராஜதந்திர ரீதியிலான சட்ட நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தொலைபேசி உரையாடலுக்கு நோர்வே அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயங்கள் நிரூபிக்கப்படுமிடத்து நோர்வே அரசாங்கத்துடனான இராஜதந்திர உறவுகளில் பாரிய விரிசல் ஏற்படக் கூடுமென ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஜோன் ஹோல்ம்ஸ் குறித்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் அது அவரது பதவிக்கு அவராகவே ஏற்படுத்திக் கொண்ட களங்கச் செயல் என பாலித கொஹணே தெரிவித்துள்ளார். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! வன்னிப் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிச்சூட்டுத் தாக்குதலில் சிக்கி 7 ஆவது விஜயபா றெஜிமென்ட் படையணி பலத்த இழப்புக்களைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சாலை பகுதியால் நகர்வில் ஈடுபட்டு வரும் 55 ஆவது படையணியின் 7 ஆவது விஜயபா றெஜிமென்ட் படையணி விடுதலைப் புலிகளின் 10 அடி உயரமான மணல் அணை ஒன்றை கைப்பற்றும் முயற்சியில் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது. இந்த மணல் அணையில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலை இடங்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நோக்கத்துடள் பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லெப். சந்திரஜித் தலைமையில் 4 பேர் கொண்ட இராணுவ அணி ஒன்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் நிலை இடங்களை அவர்கள் நோக்கி ஊர்ந்து சென்ற போது விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதல் அணியினர் அவர்களை அடையாளம் கண்டு தாக்குதலை நடத்தினர். இதில் லெப். இந்திரஜித் உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன், ஏனைய இருவரும் காயமடைந்திருந்தனர். இவர்களை காப்பாற்றும் முயற்சியில் 7 ஆவது விஜயபா படையணியைச் சேர்ந்த லெப். தாரங்க துசார தலைமையிலான குழுவினர் அங்கு சென்ற போது விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அவர்களும் சிக்கி கொண்டனர். தாரங்கவின் தொலைத் தொடர்பினை கையாளும் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன், தாரங்கவும் அதிக நீரிழப்பினால் பாதிக்கப்பட்டார். இவர்கள் அனைவரும் வான்குண்டுத் தாக்குதலில் ஏற்பட்ட குழி ஒன்றுக்குள் பதுங்கி கொண்டனர். அதன் பின்னர், அவர்களை காப்பாற்ற கப்டன் அசங்க அன்றூ மற்றும் கப்படன் பிரசன்ன ஆகியோரின் தலைமையில் இரு பிளட்டூன் படையினர் அனுப்பப்பட்டனர். ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அந்த அணியும் சிக்கி கொண்டதனால் கப்டன் அன்றூ உட்பட இரு படையினர் கொல்லப்பட்டனர். இம் மோதல்களில் 7 படையினர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் படுகாயமடைந்திருந்தனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அனைத்துல நாணய நிதியமான ஐஎம்எஃப் இன் நிபந்தனைகளுக்கு இணங்கி அரச பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சிறிலங்கா அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை குறைப்பதற்கு அனைத்துலக நாணய நிதியத்திடம் பெருந்தொகையான நிதியை கடனாக கோரி வருகின்றது. ஆனால், அனைத்துலக நிதி அமைப்புக்கள் பல நிபந்தனைகளின் அடிப்படையில் தான் நிதி உதவிகளை வழங்கி வருவது உண்டு. சிறிலங்காவுக்கான நிதி உதவிக்கான முதல் நிபந்தனையாக அரச பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் படி அனைத்துலக நாணய நிதியம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, அரச பணியாளர்களின் எண்ணிக்கைகளை குறைப்பதுடன், தொழிற் சங்கங்களின் உரிமைகளையும் குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது என சிறிலங்கா தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 20 ஆம் நாள் வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியில் அரச பணியாளர்களின் பல சலுகைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்தும் திட்டமெதுவும் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்துவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே நன்மையடைவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்தரணிகளின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு சட்ட வல்லுனர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். எமது அரசாங்கமும், படைவீரர்களும் மனிதாபிமான சட்ட திட்டங்களக்கு மதிப்பளித்தே செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த முன்நகர்வுகளின் போது சிவிலியன்களுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாதென கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளிடம் கோரியுள்ளார். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! சிவிலியன்களை பாதுகாக்கும் நோக்கில் மனிதாபிமான யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் மனித கேடயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவிச் சிவிலியன்களை விடுதலை செய்ய வழியேற்படுமாயின், ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சக்திகள் கோரும் மனிதாபிமான யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்தத் தயார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சிவிலியன்களை விடுதலை செய்யும் நோக்கில் ஏற்கனவே 48 மணிநேர யுத்த நிறுத்தமொன்று அறிவிக்கப்பட்ட போதிலும் அதன் மூலம் எவ்வித பயனும் கிட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், வெளிச்சக்திகளின் அழுத்தங்களுக்கு அடி பணிந்து யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார். சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு படையினர் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதனால் இழப்புக்கள் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாகவே கனரக ஆயுதங்களைக் கொண்ட தாக்குதல் மற்றும் வான் தாக்குதல்களை இடைநிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிவிலியன்களை மனித கேடயமாக பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் அதன் மூலம் பாதுகாப்பு பெற்றுக் கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தருணத்தில் யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கம் அக்கறைகொள்ளவில்லை எனவும், சிவிலியன்கள் யுத்த வலயத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டால் விரையில் புலிகளை முற்றாக தீர்த்துக்கட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான நேரடி ரயில் பஸ் சேவை எதிர் வரும் ஜூன் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் எஸ்.மாமாங்கராஜா தெரிவித்தார். நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.கிழக்கு மாகாண சபையின் கடந்த கால வேலைத் திட்டங்கள் ,எதிர் கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "கிழக்கு மாகாண சபை செயல்படத் தொடங்கி 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் குறிப்பாக இந்தியா குறிப்பிடத் தக்க சில உதவிகைள வழங்கியுள்ளது. இந்தியாவினால் வழங்கப்பட்ட18 பஸ் வண்டிகளில் 10 பஸ் வண்டிகள் அரசாங்கத் திணைக்களங்கள் ,பாடசாலைகள் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.மிகுதி 8 பஸ் வண்டிகள் தற்போது தலா 100 பேர் பயணம் செய்யக் கூடிய வகையில் 4 ரயில் பஸ்களாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்த 4 ரயில் பஸ்களும் மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்கும் இடையில் பகல் நேரம் சேவையில் ஈடுபடும் " என்றும் அவர் தெரிவித்துள்ளார். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! வன்னியில் அவலப்படும் மக்களுக்கு அவசர உதவியாக 400 மெற்றிக் தொன் மருந்து மற்றும் உணவுப் பொருள்களுடன் "வணங்கா மண்" கப்பல் எதிர்வரும் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வன்னி நோக்கிப் புறப்படுகின்றது. மனிதாபிமான உதவிகளை அனுப்பும் அமைப்பான "ஏசிரி"யின் பணிப்பாளர் கிரஹாம் வில்லியம் சன்ஸ் மேற்கண்ட தகவலை தெரிவித்தார். எதிர்வரும் 31 ஆம் திகதி மத்திய இலண்டனில் நடைபெறும் ஆரம்ப நிகழ்வை அடுத்து "வணங்காமண்" முதலாவது பயணத்தை புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி ஆரம்பிக்கும். இந்த நிகழ்வில் புலம் பெயர்ந்த மக்களுடன் பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஆண், பெண் உறுப்பினர்களும் கலந்து கொண்டு கப்பல் பயணத்தை ஆரம்பித்து வைப்பார்கள். பிரிட்டனில் பல்வேறு நகரங்களில் புலம்பெயர் மக்கள் அன்பளிப்புச் செய்த மருந்துப் பொருள்களும் உணவுப் பொருள்களுமாக 400 மெற்றிக் தொன் எடுத்துச்செல்லப்படும். அவசர சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளே அதிக அளவில் எடுத்துச் செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, மனிதாபிமான உதவிப் பொருள்களை எடுத்து வரும் கப்பல் முல்லைத்தீவுக்குச் செல்ல வசதியாக அது சென்றடையும் நாளில் போரை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் (சர்வதேச மட்டத்திலான) கோரிக்கை ஒன்று விடுக்கப்படும். கப்பல் பிரிட்டனிலிருந்து புறப்படும் வேளையில் அந்தச் சர்வதேசக் கோரிக்கை விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டத !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! திருகோணமலை மூதூரில் நேற்றிரவு இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தங்கநகரைச் சேர்ந்த 52 வயதுடைய எஸ். நல்லதம்பி என்பவர் இரவு 9மணியளவில் அவரது வீட்டில் இருந்த சமயம் வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதேநேரம் பாரதிபுரம் பாடசாலை வீதியைச் சேர்ந்த 41 வயதான கே.கோகிலன் என்பவர் இரவு 9.30 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளே இந்த துப்பாக்கிப்பிரயோகங்களை மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நியாயமான தீர்வெதுவும் முன்வைக்கப்படாத நிலையில் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்தது மிகச்சரியான அரசியல் முடிவு என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்; 20 வருடங்களுக்கு முன்னாலேயே தமிழர்களால் நிராகரிக்கப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை வடக்கு கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் தேசிய சிக்கலுக்கு தீர்வாக திணித்து விடலாம் என்ற அபிப்பிராயத்தை தமிழ் மக்களால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. நூற்றுக்கு மேற்பட்ட கூட்டங்களை அமைச்சர் திஸ்ஸவிதாரண தலைமையிலான சர்வகட்சி மாநாட்டின் கட்சி பிரதிநிதிகள் குழு நடத்தியுள்ளது. இக்குழுவில் 90 விகிதமான விடயங்களில் கருத்து ஒருமைப்பாடு ஏற்பட்டு விட்டது என அமைச்சர் கூறிவருகிறார். இது உண்மைக்கு புறம்பானது. அடிப்படை விடயங்களில் கருத்து ஒருமைப்பாடு சர்வகட்சி குழுவில் கிடையாது. இந்நிலையில் முந்தைய ஆண்டில் இக்குழுவினால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு ஒரு மாற்றுத் திட்ட யோசனை அறிக்கையை தயாரித்து அரசாங்கத்திடம் கையளித்தது. இந்தக் குழுவிலே தமிழ், முஸ்லிம்களை விட சிங்கள அங்கத்தவர்களே அதிகம் இருந்தார்கள். இருந்தாலும், இந்த குழு வெளியிட்ட யோசனைகள் வரவேற்கத்தக்கவை. இந்த யோசனைகளை தேசிய இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையாக ஏற்றுக் கொள்ள முடியுமென்று அரசாங்கம் அச்சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கத்திற்கும் தெரிவித்திருந்தது. இதற்கான உறுதிமொழி புதுடில்லியில் வைத்து இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவினால் இந்திய பிரதமருக்கு வழங்கப்பட்டது. இந்த உண்மையை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பகிரங்கமாக தெரிவித்துள்ளார். ஆனால், கொழும்பு திரும்பியதுடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தீவிரவாத கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக இந்த யோசனைத் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டது. இன்று பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக குறைந்தபட்சம் இந்த யோசனை திட்டங்களையாவது அறிவித்து அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்திருக்கலாம். ஆனால், அரசாங்கம் அதை செய்யவில்லை. இது சம்பந்தமாக இந்திய அரசாங்கமும் முன்னுக்குப்பின் முரணாக கருத்து வெளியிடுவதைத் தவிர எதுவுமே செய்வதாகத் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இன்னமும் இலகுரக விமானங்கள் எஞ்சியிருப்பதாக கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மேலும் இலகு ரக விமானங்கள் காணப்படுவதாகவும், எதிர்காலத்தில் வான் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. விடுதலைப் புலிகளிடம் மேலும் விமானங்கள் இருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என விமானப்படைப் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் காணப்பட்ட நான்கு விமானங்களையும் படையினர் வெற்றிகரமாக அழித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏழு விமான ஓடு தளங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருப்பதாகவும், சிவிலியன்கள் அதனை நேரில் பார்த்ததாகவும் இந்திய செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன. பிரபாகரனின் அவசரத் தேவைக்காக ஒரு விமானம் ஒதுக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக பாதுகாப்பு ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! வன்னிக் களமுனையில் அரசாங்க இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து அரச ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிடும் பிரபல சிங்கள ஊடகவியலாளர் புலிகளின் கணனி மற்றும் கமராக்களை கொள்ளையிட்ட சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்து லாப்டப் கணனிகள் மற்றும் பத்து டிஜிட்டல் கமராக்களுடன் தேசபிரேமி சமன்குமார ராமவிக்ரம என்ற செய்தியாளரை மதவாச்சி சோதனை சாவடியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரச தொலைக்காட்சிக்கு சொந்தமான வாகனத்திலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்து ஆலயங்களின் அகற்றப்பட்ட பொருட்களும் அவரிடம் இருந்தாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவற்துறையினர் கொள்ளையிட்ட பொருட்களை கைப்பற்றியதுடன், குறித்த ஊடகவியலாளரைக கைதுசெய்த போதிலும், மெலிடத்து உத்தரவின் பிரகாரம் செய்தியாளரை உடனடியாக விடுவித்துள்ளதுடன் இது குறித்து தமது பதிவேடுகளில் குறிப்பு எதனையும் பதியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மோதல்கள் இடம்பெறும் பகுதிகளுக்குள் அரசாங்கத்தின் ரூபவாஹினி தொலைக்காட்சி, வானொலி நிறுவன செய்தியாளர்களை தவிர, சுதந்திரமான ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கப் படைவீரர்களின் மனோ வலிமையை கூட்டும் வகையில் சமன்குமார அண்மைக்காலமாக தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கு செய்திகளை வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! கடந்த வியாழக்கிழமை தொடக்கம்இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளான கம்பஹா, கட்டுநாயக்க பிரதேசங்களிலும் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 262 தமிழர்கள் அடங்கலாக 306 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பொரளையில் தமிழர் ஒருவர் கைது கொழும்பு பொரளையில் உள்ள பஸ்தரிப்பிடத்தில் நின்றிருந்த யாழ்ப்பாண தமிழர் ஒருவரை பொலிஸார் கடத்த வியாழக்கிழமையன்று கைது செய்தனர். இதன் பின்னர் இவர் பயங்கரவாத சந்தேகநபர் என்றும் வத்தளையில் உள்ள வீடொன்றில் இருந்து டி 56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது கட்டுநாயக்கவில் நான்கு தமிழர்கள் கைது கட்டுநாயக்க பிரதேசத்தில் வடக்குகிழக்கு பகுதிகளை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமையன்று நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். அடையாளங்களை நிரூபிக்கத் தவறியமையே கைதுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. . கம்பஹாவில் தமிழர்கள் உட்பட்ட 301 பேர் கைது இலங்கைப் படையினரும் பொலிஸாரும் இணைந்து கம்பஹா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமையன்று நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, 257 தமிழர்கள் உட்பட்ட 301 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த தேடுதல் நடவடிக்கை வியாழக்கிழமையன்று மாலை 6 மணியில் இருந்து வெள்ளிக்கிழமையன்று காலை 6 மணிவரை மேற்கொள்ளப்பட்டது. கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணை செய்யப்படுகின்றனர். சிலாபத்தில் 13 தமிழர்கள் கைது சிலாபம் பொலிஸார் கடந்த வியாழக்கிழமையன்று நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, வடக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிலாபம் நகரப்பகுதியில் வியாபாரத் தளங்களிலும் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர் என்றும் தமது ஆள் அடையாளங்களை நிரூபிக்கத் தவறியவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிலாபம் பொலிஸில் வைத்து விசாரணை செய்யப்படுகின்றனர். தங்காலையில் 5 தமிழர்கள் கைது அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை பொலிஸ் பிரிவில் சிங்கள கிராமங்களான வஸ்முல்ல-கொஹலான பகுதிகளில் உள்ள வீடுகளில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின்போது 5 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அப்புத்தளை பகுதியில் இருந்து வேலைக்காக அம்பாந்தோட்டை பகுதியில் வந்து தங்கியிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவர்கள் தென்பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களா என்பதன் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்புகளை பேணிய நான்கு சிங்களப் புலி உறுப்பினர்களை மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகள் கொழும்பு துறைமுகத்தின் மீது பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள இந்த சிங்கள புலி உறுப்பினர்களின் உதவி பெற்றுக்கொள்ளப்பட இருந்ததாகத் தெரியவருகிறது. விடுதலைப் புலிகளிடம் இலட்சக் கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு குறித்த சிங்கள நபர்கள் ஒத்துழைப்பு வழங்கி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உளவுப் பணிக்காகப் பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! india !!!!!!!!!!!!!!!! தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குபவருக்கே ஆதரவு அளிப்போம் என வியாழக்கிழமை நடந்த புதுச்சேரி மக்கள் நல முன்னணியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கும் தேசிய கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பதென முடிவு செய்யப்பட்டது. விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க உறுதி பூண்டிடும் அரசியல் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பதென முடிவு செய்யப்பட்டது. அக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக புதுச்சேரி மக்கள் நல முன்னணியின் சார்பில் மாநிலத்தின் அனைத்துப் பகுதியிலும் மக்கள் சந்திப்பு பிரசாரங்களை மேற்கொண்டு வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதென முடிவு செய்யப்பட்டது. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தமிழ்நாட்டில் அஇஅதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு செய்து கொண்டதையடுத்து, பாமக-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அன்புமணி, ஆர். வேலு ஆகிய இருவரும் இன்று தங்களது பதவி விலகல் கடிதங்களை பிரதமரிடம் அளித்தனர். புதுடெல்லியில் பிரதமர் இல்லத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த அன்புமணியும், ஆர். வேலுவும் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் தாங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்க இயலாத நிலையில் பதவி விலகுவதாகக் கூறி கடிதங்களை அளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட பிரதமர், அவற்றை கனத்த இதயத்துடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக தங்களிடம் தெரிவித்தார் என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி கூறினார். மத்திய அமைச்சரவையில் சுகாதாரத் துறை பொறுப்பை அன்புமணியும், ரயில்வே இணையமைச்சர் பொறுப்பை ஆர். வேலுவும் வகித்து வந்தனர். தமிழ்நாட்டில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்க பாமக பொதுக்குழு கடந்த இரு தினங்களுக்கு முன் முடிவெடுத்தது. அதன்படி பாமக நிறுவனர் ராமதாசும், கட்சித் தலைவர் ஜி.கே. மணியும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து பேசியதில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. பாமகவிற்கு 7 மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் வழங்குவது என்று உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருப்பதாக ஜெயலலிதாவும், ராமதாசும் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இதற்கிடையே டெல்லியில் பாமகவைச் சேர்ந்த அன்புமணியும், ஆர். வேலுவும் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்து, அதற்கான கடிதங்களை பிரதமரிடம் அளித்துள்ளனர். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! காஷ்மீர் பிரச்சனையில் தலையிட மாட்டோம் என அமெரிக்கா நிபந்தனையின்றி தெரிவித்துள்ளது. எனினும் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை குறைக்கும் நோக்கில் இரு நாடுகளுக்கும் உதவத் தயாராக உள்ளதாகக் அமெரிக்கா கூறியுள்ளது. வாஷிங்டனில் நடந்த அயலுறவு செய்தியாளர்களுக்கான சந்திப்பின் போது பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் ஜேம்ஸ் ஜோன்ஸ், "காஷ்மீர் பிரச்சனை தனிப்பட்ட விவகாரம்" என்றார். இந்தியா, பாகிஸ்தானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை துவக்கப்படும் என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளது, காஷ்மீர் பிரச்சனைக்கும் பொருந்துமா? என பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு அவர் இந்த பதிலை அளித்தார். "காஷ்மீர் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. அதே நேரத்தில் இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் உதவ தயாராக உள்ளோம். தற்போதைய சூழலில் தெற்காசியப் பகுதியில் உள்ள இந்த இரு வல்லரசு நாடுகள் மத்தியிலும் பரஸ்பர நம்பிக்கை, நட்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்" என்றும் ஜோன்ஸ் தெரிவித்தார். முன்னதாக நேற்று காலை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கான புதிய அயலுறவுக் கொள்கையை வெளியிட்டுப் பேசிய அதிபர் ஒபாமா, இந்தியா-பாகிஸ்தான் இடையே பல்வேறு பிரச்சனைகளால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில் இரு நாடுகளுடனும் ஆக்கப்பூர்வ பேச்சுகள் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! சிதம்பரம் தொகுதிக்கு பதில் கடலூரில் போட்டியிட திருமாவளவன் விருப்பம் njuptpj;Jவிழுப்புரம் தொகுதியையும் கேட்கிறார் . .மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நிறைவு பெற்று எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் போட்டியிடுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்களும், முஸ்லிம்லீக் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போது சிதம்பரம் தொகுதிக்கு பதில் கடலூர் தொகுதியில் போட்டியிட அவர் விரும்புகிறார். விடுதலை சிறுத்தையின் "நட்பு" கட்சியான பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு கூட்டணியில் சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ம.க.வை எதிர்த்து சிதம்பரத்தில் போட்டியிட திருமாவளவன் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தொகுதி மாறுவதாக விடுதலை சிறுத்தை கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சிதம்பரத்தை போலவே கடலூர் தொகுதிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு செல்வாக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல தங்களது கட்சிக்கு விழுப்புரம் தொகுதியையும் கேட்டு பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் திருமாவளவனிடம் வற்புறுத்தியுள்ளனர். இதனால் கடலூர், விழுப்புரம் ஆகிய தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று திருமாவளவன் வற்புறுத்தி உள்ளார். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! வருண் காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது குறித்தும் ஆலோசித்து வருtjhf khatjp njuptpj;Js;shh;. தேர்தல் பிரசாரத்தின்போது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக உத்தரபிரதேசம் போலீசார் வருண்காந்தி மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அவர் பீலிபட் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அவரை முறைப்படி கைது செய்தனர். பின்னர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அது நாளை விசாரணைக்கு வருகிறது. ஜாமீன் கிடைத்தால் நாளை விடுவிக்கப்படுவார். இல்லை என்றால் மேலும் சில நாட்கள் ஜெயிலில் இருக்க வேண்டியது வரும். வருண் காந்தி நேற்று கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக பாரதீய ஜனதா தொண் டர்களுடன் ஊர்வலமாக வந்தார். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். வருண் காந்தியை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்ததுடன் போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் போலீசார் தடியடி நடத்தியதுடன் துப்பாக்கி சூடும் நடத்தினார்கள். வன்முறை நடந்ததால் உத்தரபிரதேச முதல்- மந்திரி மாயாவதி கடும் கோபம் அடைந்துள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். வருண் காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது குறித்தும் அவர் ஆலோசித்து வருகிறார். இது தொடர்பாக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பீலிபட் மாவட்ட கலெக்டர் இதுபற்றி கூறும்போது வருண்காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார் !!!!!!!!!!!!!!!!!!!!!! பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடியைத் தீர்க்கும் நடவடிக்கைகளை தாம் எடுப்பார் என்று அதிபர் ஆஸிஃப் அலி ஸர்தாரி உறுதியளித்திருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தில் நடுவண் அரசின் ஆட்சியை அகற்றும்படி தாம் பரிந்துரைக்கப்போவதாக திரு ஸர்தாரி நாடாளுமன்றத்தில் பேசினார். தமது அரசியல் எதிரி நவாஸ் ஷெரீஃப்பின் ஆட்சி அங்கு ஏற்படுவதை தாம் ஆதரிப்பார் என்றும் ஆஸிஃப் அலி ஸார்தாரி குறிப்பிட்டார். பஞ்சாப்பில் நடுவண் அரசின் ஆட்சி அறிவிக்கப்பட்டமை எதிர்க்கட்சியினருக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பல மோதல்களை உருவாக்கியிருந்தது. பாகிஸ்தானிலும் ஆஃப்கானிஸ்தானிலும் வன்மைவாதத்தை தோற்கடிக்க அமெரிக்க அரசின் புதிய திட்டங்களை தாம் ஆதரிப்பதாகவும், இன்னோர் நாட்டின் மீது பயங்கரவாத நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும், பாகிஸ்தானின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும் அதிபர் ஸர்தாரி தெரிவித்தார !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! யேமன் நாட்டில் அல்கைதாவுடன் தொடர்புள்ள வன்மைவாதிகளுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. யேமனில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலவுவதால் அரசாங்க நிலையங்களும் வெளிநாட்டு நிலையங்களும் வன்மைவாதிகளால் அடிக்கடி தாக்கப்பட்டுவருகின்றன. !!!!!!!!!!!!!!! உலக பொருளாதார நெருக்கடி பற்றி அடுத்த வாரம் லண்டனில் நடக்கவிருக்கும் 20 முக்கிய நாடுகளின் மேனிலை மாநாட்டுக்கு முன்னொடியாக ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று லண்டன் வீதிகளின் ஊடாக அணிவகுத்துச் செல்கிறார்கள். வறுமை, வேலைவாய்ப்புகள், பருவநிலை மாற்றங்கள் ஆகியவை குறித்து அவசர நடவடிக்கை வேண்டும் என்று குரல் எழுப்பிய இந்த அணிவகுப்பாளர் கூட்டணியில் பல தொழிற்சங்கங்கள் பல அறநிலையங்கள், மதசார்புக் குழுக்கள், சுற்றாடல் பாதுகாப்பு பிரச்சாரகர்கள், இப்படிப் பலர் இணைந்திருந்தார்கள். தாம் சொல்ல விரும்புவது சமாதானமான முறையில் போய் சேரவேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனாலும், அடுத்த சில தினங்களில் நடத்தப்படவுள்ள மற்றைய ஆர்ப்பாட்டங்கள் தெருக்கலவரங்களை உருவாக்கக்கூடும் என்று கருதும் பாதுகாப்பு அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்கிறார்கள். இதேபோல பொருளாதார நெருக்கடி பற்றிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஜெர்மனியிலும் நடத்தப்படுகின்ற !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! எரிபொருள் விரயத்தை தடுக்கும் நோக்கத்துடன் இரண்டு வருடங்களுக்கு முன் சிட்னியில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டத்தின்படி இன்று உள்ளூர் நேரம் 8 மணிக்கு ஆஸ்திரேலியாலுள்ள சிட்னி நகரின் ஓபரா ஹவுஸ் அரங்கத்தின் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. பூமியைப் பாதுகாக்க ஒரு மணி நேரம் என்ற பெயர் கொண்ட இத்திட்டத்தின்படி உலகின் பல நகரங்களில் இன்று ஒரு மணி நேரம் மின் விளக்குகள் அனைத்துவைக்கப்பட்டு எரிபொருள் சேமிக்கப்படும். உலக வன உயிர்கள் பாதுகாப்பு நிதியம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு ஆர்வலர்கள் தொடங்கிய இந்தத் திட்டத்தில் 88 நாடுகளில் பல்லாயிரம் நகரங்களில் வாழும் ஒரு பில்லியன் மக்கள் கலந்துகொள்கிறார்கள். ஐக்கிய ராஜ்ஜியம் ஸ்காட்லாந்திலுள்ள எடின்பர்க் கோட்டை, எகிப்தில் உள்ள பிரமிட் கோபுரங்கள் உட்பட பல இடங்களில் உள்ளூர் நேரம் 8 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்படுகின்ற !!!!!!!!!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published.