பிலிபிட்டில் வருண் கைது: திங்கள்கிழமை வரை காவல்

பிலிபிட்: பா.ஜ., வேட்பாளர் வருண் இன்று கைது செய்யப்பட்டார். இவரை வருகின்ற திங்கள்கிழமை வரை நீதிமன்ற காவலில் வைக்க பிலிபிட் மாவட்ட கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

உத்திரபிரதேசத்தில் உள்ள பிலிபிட் தொகுதியில் இவர் மத உணர்வை தூண்டும் வகையி்ல் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் கோரியிருந்தார். இவரது ஜாமீன் கெடு நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, பிலிபிட் மாவட்ட கோர்ட்டில் வருண் , தனது கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று இன்று ஆஜரானார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வருண் கூறியதாவது: சிறைக்கு செல்ல நான் ‌தயாராக இருக்கிறேன்; எனக்கு மக்கள் பாதுகாப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் வருண் கைது செய்யப்பட்டு இரண்டு நாள் கோர்ட் காவலில் வைக்கப்பட்டார். வருண் கைது செய்யப்பட்டதற்கு மாயாவதி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத உணர்வை தூண்டியதாக பா.ஜ., வேட்பாளர் வருண் மீது டில்லி முஸ்லீம் இயக்கத்தின் சார்பில் டில்லி ஐகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.