இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் இடையே உக்கிர மோதல்கள்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயம் உட்பட விடுதலைப்புலிகள் வசம் தற்போது உள்ள 21.5 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான பிரதேசத்தைக் கைப்பற்றும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

வியாழன்று இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 29 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக அது கூறியிருக்கின்றது.

கொல்லப்பட்டவர்களில் 13 விடுதலைப்புலிகளின் சடலங்களும் ஆயுதத் தளபாடங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள இராணுவ தலைமையகம், விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து மேலும் 2000த்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று இராணுவத்தினரிடம் வந்துசேர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றது.

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.