பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதலில் 50 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கே கூட்டம் நிறைந்த பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகை ஆரம்பமான நேரத்தில் தற்கொலை குண்டுதாரி தாக்கியதில் குறைந்தபட்சம் 50 பேர் கொல்லப்பட்டும் 70 பேர் காயமடைந்தும் இருக்கின்றனர்.

அருகிலிருந்த சோதனைச்சாவடி ஒன்றிலிருந்த பொலிசாரும் தாக்குதலில் பாதிக்கப்பட்டனர்.

தாக்குதலின் உக்கிரத்தில் பள்ளிவாசல் கட்டிடம் சேதமடைந்தது.

ஆப்கானிஸ்தான் செல்லும் பாதையில் அமைந்துள்ள கைபர் கணவாய் அருகே இருக்கும் ஜம்ருத் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.